திருவாய்மொழித் தனியன்கள்
நாதமுனிகள் அருளிச்செய்தது
பக்தாம்ருதம் விஶ்வ ஜனானு மோதனம்*
ஸர்வார்த்ததம் ஸ்ரீஶடகோப வாங்க்மயம்* ஸகஶ்ர ஶாகோப நிஷத்ஸமாகமம்* நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.* |
ஈச்வரமுனிகள் அருளிச்செய்தது
திருவழுதி நாடென்றும் தென்குருகூர் என்றும்,*
மருவினிய வண்பொரு நலென்றும்,* – அருமறைகள் அந்தாதி செய்தான் அடியிணையே* எப்பொழுதும், சிந்தியாய் நெஞ்சே! தெளிந்து. |
சொட்டை நம்பிகள் அருளிச்செய்தது
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்*
இனத்தாரையல்லா திறைஞ்சேன்,* – தனத்தாலும் ஏதும் குறைவிலேன்* எந்தை சடகோபன், பாதங்கள் யாமுடைய பற்று. |
அனந்தாழ்வான் அருளிச்செய்த்து
ஏய்ந்தபெருங்கீர்த்தி இராமானுசமுனிதன்*
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன்,* – ஆய்ந்தபெருஞ்ச் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம்தரிக்கும்,* பேராத உள்ளம் பெற. |
பட்டர் அருளிச்செய்தவை
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்*
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும்,* – ஈன்ற முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த* இதத்தாய் இராமுனுசன்.
மிக்க விறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,* தக்க நெறியும் தடையாகித் – தொக்கியலும்,* ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,* யாழினிசை வேதத் தியல். |