அமலனாதிபிரான்


அமலனாதிபிரான் தனியன்கள்
பெரிய நம்பிகள் அருளியது
ஆபாத சூடமநுபூய ஹரிம்ஶயாநம்

மத்த்யேகவேர துஹிதுர்முதிதாந்தராத்மா

அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்

யோநிஶ்சிகாய மநவை முநிவாஹநந்தம்.

திருமலை நம்பிகள் அருளியது
காட்டவே கண்ட பாத  கமலம் நல்லாடை உந்தி,

தேட்டரும் உதர பந்தம்  திருமார்பு கண்டம் செவ்வாய்,

வாட்டமில் கண்கள் மேனி  முனியேறித் தனிபுகுந்து,

பாட்டினால் கண்டு வாழும் பாணர்தாள் பரவினோமே.

திருப்பாணாழ்வார் அருளிச் செய்த அமலனாதிபிரான்

927:##

அமலன் ஆதிபிரான் * அடியார்க்கு என்னை ஆட்படுத்த-

விமலன், *விண்ணவர் கோன் *விரையார் பொழில் வேங்கடவன்,*

நிமலன் நின்மலன் நீதி வானவன், *நீள்மதிள் அரங்கத்து அம்மான், *திருக்-

கமல பாதம் வந்து* என்கண்ணினுள்ளன ஒக்கின்றதே. (2) (1)

    

928:

உவந்த உள்ளத்தனாய்* உலகம் அளந்து அண்டமுற,*

நிவந்த நீள்முடியன்* அன்று நேர்ந்த நிசாசரரை,*

கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் *கடியார்பொழில் அரங்கத் தம்மான்,*

அரைச்சிவந்த ஆடையின் மேல் *சென்றதாம் என் சிந்தனையே.  (2)

 

929:##

மந்தி பாய்* வட வேங்கட மாமலை,* வானவர்கள்,-

சந்தி செய்ய நின்றான்* அரங்கத்து அரவின் அணையான்,*

அந்தி போல் நிறத்து ஆடையும் *அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்*

உந்தி மேலதன்றோ* அடியேன் உள்ளத்து இன்னுயிரே. (2) (3)

 

930:

சதுரமா மதிள்சூழ்* இலங்கைக்கு இறைவன் தலைபத்து-

உதிர வோட்டி,* ஓர் வெங்கணை* உய்த்தவன் ஓத வண்ணன்*

மதுரமா வண்டு பாட* மாமயில் ஆடரங்கத்து அம்மான்,*திருவயிற்று-

உதர பந்தம்* என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே. (4)

 

931:

பாரமாய* பழவினை பற்றறுத்து,* என்னைத்தன்-

வாரமாக்கி வைத்தான்* வைத்ததன்றி என்னுள் புகுந்தான்,*

கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்,*திரு-

வார மார்பதன்றோ* அடியேனை ஆட்கொண்டதே.  (5)

 

932:

துண்ட வெண்பிறையான்* துயர் தீர்த்தவன்* அஞ்சிறைய-

வண்டுவாழ் பொழில்சூழ்* அரங்கநகர் மேய அப்பன்*

அண்டர் அண்ட பகிரண்டத்து* ஒரு மாநிலம்  எழுமால்வரை, *முற்றும்-

உண்ட கண்டம் கண்டீர் *அடியேனை உய்யக்கொண்டதே.  (6)

 

 

 

933:

கையினார் *சுரி சங்கனல் ஆழியர்,* நீள்வரை போல்-

மெய்யனார் *துளப விரையார் கமழ் நீள் முடியெம்

ஐயனார்,* அணியரங்கனார் *அரவின் அணைமிசை மேய மாயனார்,*

செய்ய வாய் ஐயோ!* என்னைச்  சிந்தை கவர்ந்ததுவே! (7)

 

934:

பரியனாகி வந்த* அவுணன் உடல்கீண்ட,* அமரர்க்கு-

அரிய ஆதிபிரான்* அரங்கத்து அமலன் முகத்து,*

கரியவாகிப் புடைபரந்து* மிளிர்ந்து செவ்வரியோடி,* நீண்டவப்-

பெரிய வாய கண்கள்* என்னைப் பேதைமை செய்தனவே! (8)

 

935:##

ஆலமா மரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய்,*

ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*

கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும்  முடிவில்ல தோரெழில்*

நீல மேனி ஐயோ! * நிறை கொண்டது என் நெஞ்சினையே! (2) (9)

 

936:##

கொண்டல் வண்ணனைக்*  கோவலனாய் வெண்ணெய்-

உண்ட வாயன்* என்னுள்ளம் கவர்ந்தானை,*

அண்டர் கோன் அணி அரங்கன்* என் அமுதினைக்-

கண்ட கண்கள்,* மற்றொன்றினைக்* காணாவே. (2) (10)

 

திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம் .