திருக்கோஷ்டியூர் நம்பிகள் உபதேசம்


ஸ்ரீமதே இராமாநுஜாய நம:

திருக்கோட்டியூர் நம்பி உடையவருக்கு அருளிய 18 வார்த்தைகள்:

1. மோக்ஷத்தில் ஆசை உடைய ஜீவன், வாழ்க்கையில் ஆசையை துறக்க வேண்டும்.

2. வாழ்க்கையில் ஆசையை துறந்தால், அஹங்காரம் மமகாரம் நீங்கும்.

3. அஹங்காரம் மமகாரம் நீங்கினால் தேஹ அபிமானம் நீங்கும்.

4. தேஹ அபிமானம் நீங்கினால் ஆத்ம ஞானம் பிறக்கும்.

5. ஆத்ம ஞானம் பிறந்தால் ஐஸ்வர்ய போகத்தில் வெறுப்பு ஏற்படும்.

6. ஐஸ்வர்ய போகத்தில் வெறுப்பு ஏற்பட்டால் எம்பெருமானிடம் பற்று ஏற்படும்.

7.எம்பெருமானிடம் பற்று ஏற்பட்டால் மற்ற விஷய ஆசை நீங்கும்.

8. மற்ற விஷய ஆசை நீங்கினால்  பாரதந்த்ரிய ஞானம் உண்டாகும்.

9.  பாரதந்த்ரிய ஞானம் உண்டானால் அர்த்த, காம , ராக துவேஷங்கள் நீங்கும்,

10. அர்த்த, காம , ராக துவேஷங்கள் நீங்கினால் ஸ்ரீ வைஷ்ணத்வம் கைகூடும்.

11. ஸ்ரீ வைஷ்ணத்வம் கைகூடினால் சத்சங்கம் ஏற்படும்.

12. சத்சங்கம் ஏற்பட்டால் பாகவத சம்பந்தம் ஏற்படும்.

13. பாகவத சம்பந்தம் ஏற்பட்டால் பகவத் சம்பந்தம் ஏற்படும்.

14.பகவத் சம்பந்தம் ஏற்பட்டால் மற்ற பலன்களில் வெறுப்பு ஏற்படும்.

15. மற்ற பலன்களில் வெறுப்பு ஏற்பட்ட ஜீவன் எம்பெருமானுக்கு அடிமை ஆவான்.

16. எம்பெருமானுக்கு அடிமையாகும் ஜீவன் , எம்பெருமான் ஒருவனை மட்டுமே சரணமடைவான்.

17. எம்பெருமான் ஒருவனை மட்டுமே சரணமடைந்த ஜீவன், திருமந்திரத்தையும் அதன் பொருளையும் ஏற்க தகுதி பெறுகின்றான்.

18. அவ்வாறு தகுதி பெற்ற அதிகாரிக்கே திருமந்திரம் கைபுகுரும்.