கோவில் திருவாய்மொழி


 பொருளடக்கம் 5.8 ஆராஅமுதே!
தனியன்கள்6.10 உலகம்உண்டபெருவாயா
1.1 உயர்வற7.2 கங்குலும்பகலும்
1.2 வீடுமின்8.10 நெடுமாற்குஅடிமை
2.10 கிளர்ஒளிஇளமை9.10 மாலைநண்ணி
3.3  ஒழிவில் காலம் எல்லாம்10.9 சூழ்விசும்பணிமுகில்
 4.10 ஒன்றும்தேவும்10.10 முனியே!நான்முகனே!

தனியன்கள்

நாதமுனிகள் அருளிச்செய்தது

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.

ஈச்வரமுனிகள் அருளிச்செய்தது

திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், – அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.

சொட்டை நம்பிகள் அருளிச்செய்தது

மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், – தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.

அனந்தாழ்வான் அருளிச்செய்த்து

ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், – ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.

பட்டர் அருளிச்செய்தவை

வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், – ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் – தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
1.1 உயர்வற
உயர்வற உயர் நலம்* உடையவன் எவன் அவன்*
மயர்வு அற மதி நலம்* அருளினன் எவன் அவன்*
அயர்வு அறும் அமரர்கள்* அதிபதி எவன் அவன்*
துயர் அறு சுடர் அடி* தொழுது எழு என் மனனே! (2)
மனன்அகம் மலம் அற* மலர்மிசை எழுதரும்*
மனன் உணர்வு அளவு இலன்,* பொறி உணர்வு அவை இலன்*
இனன் உணர், முழு நலம்,* எதிர் நிகழ் கழிவினும்*
இனன் இலன் எனன் உயிர்,* மிகுநரை இலனே.
இலன் அது உடையன் இது* என நினைவு அரியவன்*
நிலனிடை விசும்பிடை* உருவினன் அருவினன்*
புலனொடு புலன் அலன்,* ஒழிவு இலன் பரந்த* அந்-
நலன் உடை ஒருவனை* நணுகினம் நாமே.*
நாம் அவன் இவன் உவன்,* அவள் இவள் உவள் எவள்*
தாம் அவர் இவர் உவர்,* அது இது உது எது*
வீமவை இவை உவை,* அவை நலம், தீங்கு அவை*
ஆமவை ஆயவை ஆய்* நின்ற அவரே.*
அவரவர் தமதமது* அறிவு அறி வகைவகை*
அவரவர் இறையவர்* என அடி அடைவர்கள்*
அவரவர் இறையவர்* குறைவு இலர் இறையவர்*
அவரவர் விதிவழி* அடைய நின்றனரே.
நின்றனர் இருந்தனர்* கிடந்தனர் திரிந்தனர்*
நின்றிலர் இருந்திலர்* கிடந்திலர் திரிந்திலர்*
என்றும் ஓர் இயல்வினர்* என நினைவு அரியவர்*
என்றும் ஓர் இயல்வொடு* நின்ற எம் திடரே.
திட விசும்பு எரி வளி* நீர் நிலம் இவைமிசைப்*
படர் பொருள் முழுவதும் ஆய்* அவைஅவைதொறும்*
உடல்மிசை உயிர் எனக்* கரந்து எங்கும் பரந்துளன்*
சுடர் மிகு சுருதியுள்* இவை உண்ட சுரனே.
சுரர் அறிவு அரு நிலை* விண் முதல் முழுவதும்*
வரன் முதலாய் அவை* முழுது உண்ட பரபரன்*
புரம் ஒரு மூன்று எரித்து* அமரர்க்கும் அறிவியந்து*
அரன் அயன் என* உலகு அழித்து அமைத்து உளனே.
உளன் எனில் உளன் அவன்* உருவம் இவ் உருவுகள்*
உளன் அலன் எனில், அவன்* அருவம் இவ் அருவுகள்*
உளன் என இலன் என* இவை குணம் உடைமையில்*
உளன் இரு தகைமையொடு* ஒழிவு இலன் பரந்தே.
பரந்த தண் பரவையுள்* நீர்தொறும் பரந்துளன்*
பரந்த அண்டம் இது என:* நிலம் விசும்பு ஒழிவு அறக்*
கரந்த சில் இடந்தொறும்* இடம் திகழ் பொருள்தொறும்*
கரந்து எங்கும் பரந்துளன்:* இவை உண்ட கரனே.
கர விசும்பு எரி வளி* நீர் நிலம் இவைமிசை*
வரன் நவில் திறல் வலி* அளி பொறை ஆய்நின்ற*
பரன் அடிமேல்* குருகூர்ச் சடகோபன் சொல்*
நிரல் நிறை ஆயிரத்து* இவை பத்தும் வீடே. (2)
 
1.2 வீடுமின்
வீடுமின் முற்றவும்* வீடு செய்து* உம் உயிர்
வீடு உடையானிடை* வீடு செய்ம்மினே. (2)
மின்னின் நிலை இல* மன் உயிர் ஆக்கைகள்*
என்னும் இடத்து* இறை உன்னுமின் நீரே.
நீர் நுமது என்று இவை* வேர்முதல் மாய்த்து* இறை
சேர்மின் உயிர்க்கு* அதன் நேர் நிறை இல்லே.
இல்லதும்உள்ளதும்*அல்லதுஅவன்உரு*
எல்லைஇல்அந்நலம்*புல்குபற்றுஅற்றே.
அற்றதுபற்றுஎனில்*உற்றதுவீடுஉயிர்*
செற்றஅதுமன்உறில்*அற்றுஇறைபற்றே.
பற்றுஇலன்ஈசனும்*முற்றவும்நின்றனன்*
பற்றுஇலையாய்*அவன்முற்றில்அடங்கே.
அடங்குஎழில்சம்பத்து*அடங்கக்கண்டு*ஈசன்
அடங்குஎழில்அஃதுஎன்று*அடங்குகஉள்ளே.
உள்ளம்உரைசெயல்*உள்ளஇம்மூன்றையும்*
உள்ளிக்கெடுத்து*இறைஉள்ளில்ஒடுங்கே.
ஒடுங்கஅவன்கண்*ஒடுங்கலும்எல்லாம்*
விடும்பின்னும்ஆக்கை*விடும்பொழுதுஎண்ணே.
எண்பெருக்குஅந்நலத்து*ஒண்பொருள்ஈறுஇல*
வண்புகழ்நாரணன்*திண்கழல்சேரே.
சேர்த்தடத்*தென்குருகூர்ச்சடகோபன்சொல்*
சீர்த்தொடைஆயிரத்து*ஓர்த்தஇப்பத்தே.(2)
2.10 கிளர்ஒளிஇளமை
கிளர்ஒளிஇளமை*கெடுவதன்முன்னம்,*
வளர்ஒளிமாயோன்*மருவியகோயில்,*
வளர்இளம்பொழில்சூழ்*மாலிருஞ்சோலை,*
தளர்வுஇலர்ஆகிச்*சார்வதுசதிரே.
சதிர்இளமடவார்*தாழ்ச்சியைமதியாது,*
அதிர்குரல்சங்கத்து*அழகர்தம்கோயில்,*
மதிதவழ்குடுமி*மாலிருஞ்சோலைப்,*
பதியதுஏத்தி*எழுவதுபயனே.
பயன்அல்லசெய்து*பயன்இல்லைநெஞ்சே,*
புயல்மழைவண்ணர்*புரிந்துஉறைகோயில்,*
மயல்மிகுபொழில்சூழ்*மாலிருஞ்சோலை,*
அயல்மலைஅடைவது*அதுகருமமே.
கருமவன்பாசம்*கழித்துஉழன்றுஉய்யவே,*
பெருமலைஎடுத்தான்*பீடுஉறைகோயில்,*
வருமழைதவழும்*மாலிருஞ்சோலைத்,*
திருமலைஅதுவே*அடைவதுதிறமே.
திறம்உடைவலத்தால்*தீவினைபெருக்காது,*
அறம்முயல்ஆழிப்*படையவன்கோயில்,*
மறுஇல்வண்சுனைசூழ்*மாலிருஞ்சோலைப்,*
புறமலைசாரப்*போவதுகிறியே.
கிறிஎனநினைமின்*கீழ்மைசெய்யாதே,*
உறிஅமர்வெண்ணெய்*உண்டவன்கோயில்,*
மறியொடுபிணைசேர்*மாலிருஞ்சோலை,*
நெறிபடஅதுவே*நினைவதுநலமே.
நலம்எனநினைமின்*நரகுஅழுந்தாதே,*
நிலம்முனம்இடந்தான்*நீடுஉறைகோயில்,*
மலம்அறுமதிசேர்*மாலிருஞ்சோலை,*
வலம்முறைஎய்தி,*மருவுதல்வலமே.
வலஞ்செய்துவைகல்*வலம்கழியாதே,*
வலஞ்செய்யும்ஆய*மாயவன்கோயில்,*
வலஞ்செய்யும்வானோர்*மாலிருஞ்சோலை,,*
வலஞ்செய்துநாளும்*மருவுதல்வழக்கே.
வழக்குஎனநினைமின்*வல்வினைமூழ்காது,*
அழக்கொடிஅட்டான்*அமர்பெருங்கோயில்,*
மழக்களிற்றுஇனம்சேர்*மாலிருஞ்சோலை,*
தொழக்கருதுவதே*துணிவதுசூதே.
சூதுஎன்றுகளவும்*சூதும்செய்யாதே,*
வேதம்முன்விரித்தான்*விரும்பியகோயில்,*
மாதுஉறுமயில்சேர்*மாலிருஞ்சோலைப்,*
போதுஅவிழ்மலையே*புகுவதுபொருளே.
பொருள்என்றுஇவ்உலகம்*படைத்தவன்புகழ்மேல்,*
மருள்இல்வண்குருகூர்*வண்சடகோபன்,*
தெருள்கொள்ளச்சொன்ன*ஓர்ஆயிரத்துள்இப்பத்து,*
அருளுடையவன்தாள்*அணைவிக்கும்முடித்தே.
3.3  ஒழிவில் காலம் எல்லாம்
ஒழிவில் காலம் ல்லாம்*உடனாய்மன்னி,*
வழுஇலா*அடிமைசெய்யவேண்டும்நாம்,*
தெழிகுரல்அருவித்*திருவேங்கடத்து,*
எழில்கொள்சோதி*எந்தைதந்தைதந்தைக்கே.(2)
எந்தைதந்தைதந்தை*தந்தைதந்தைக்கும்
முந்தை,*வானவர்வானவர்கோனொடும்,*
சிந்துபூமகிழும்*திருவேங்கடத்து,*
அந்தம்இல்புகழ்க்*கார்எழில்அண்ணலே.
அண்ணல்மாயன்*அணிகொள்செந்தாமரைக்
கண்ணன்செங்கனி,*வாய்க்கருமாணிக்கம்,*
தெள்நிறைசுனைநீர்த்,*திருவேங்கடத்து,*
எண்இல்தொல்புகழ்*வானவர்ஈசனே.
ஈசன்வானவர்க்கு*என்பன்என்றால்,*அது
தேசமோ*திருவேங்கடத்தானுக்கு?,*
நீசனேன்*நிறைவுஒன்றும்இலேன்,*என்கண்
பாசம்வைத்த*பரம்சுடர்ச்சோதிக்கே.
சோதிஆகி*எல்லாஉலகும்தொழும்,*
ஆதிமூர்த்திஎன்றால்*அளவுஆகுமோ?,*
வேதியர்*முழுவேதத்துஅமுதத்தை,*
தீதுஇல்சீர்த்*திருவேங்கடத்தானையே.
வேம்கடங்கள்*மெய்மேல்வினைமுற்றவும்,*
தாங்கள்தங்கட்கு*நல்லனவேசெய்வார்,*
வேங்கடத்துஉறைவார்க்கு*நமஎன்னல்-
ஆம்கடமை,*அதுசுமந்தார்கட்கே.
சுமந்துமாமலர்*நீர்சுடர்தூபம்கொண்டு,*
அமர்ந்துவானவர்*வானவர்கோனொடும்,*
நமன்றுஎழும்*திருவேங்கடம்நங்கட்குச்,*
சமன்கொள்வீடுதரும்*தடங்குன்றமே.
குன்றம்ஏந்திக்*குளிர்மழைகாத்தவன்,*
அன்றுஞாலம்*அளந்தபிரான்,*பரன்
சென்றுசேர்*திருவேங்கடமாமலை,*
ஒன்றுமேதொழ*நம்வினைஓயுமே.(2)
ஓயும்மூப்புப்*பிறப்புஇறப்பு:பிணி,*
வீயுமாறுசெய்வான்*திருவேங்கடத்து
ஆயன்,*நாள்மலர்ஆம்*அடித்தாமரை,*
வாயுள்ளும்மனத்துள்ளும்*வைப்பார்கட்கே.
வைத்தநாள்வரை*எல்லைகுறுகிச்சென்று,*
எய்த்துஇளைப்பதன்*முன்னம்அடைமினோ,*
பைத்தபாம்புஅணையான்*திருவேங்கடம்,*
மொய்த்தசோலை*மொய்பூந்தடந்தாழ்வரே.
தாள்பரப்பி*மண்தாவியஈசனை,*
நீள்பொழில்*குருகூர்ச்சடகோபன்சொல்,*
கேழ்இல்ஆயிரத்து*இப்பத்தும்வல்லவர்*
வாழ்வர்வாழ்வுஎய்தி*ஞாலம்புகழவே.(2)
 
4.10 ஒன்றும்தேவும்
ஒன்றும்தேவும்உலகும்உயிரும்மற்றும்*யாதும்இல்லா
அன்று,*நான்முகன்தன்னொடு*தேவர்உலகோடுஉயிர்படைத்தான்,*
குன்றம்போல்மணிமாடம்நீடு*திருக்குருகூர்அதனுள்,*
நின்றஆதிப்பிரான்நிற்க*மற்றைத்தெய்வம்நாடுதிரே.(2)
நாடிநீர்வணங்கும்தெய்வமும்*உம்மையும்முன்படைத்தான்,*
வீடுஇல்சீர்ப்புகழ்ஆதிப்பிரான்*அவன்மேவிஉறைகோயில்,*
மாடமாளிகைசூழ்ந்துஅழகுஆய*திருக்குருகூர்அதனைப்*
பாடிஆடிபரவிச்செல்மின்கள்*பல்உலகீர்!பரந்தே.
பரந்ததெய்வமும்பல்உலகும்படைத்து*அன்றுஉடனேவிழுங்கி,*
கரந்துஉமிழ்ந்துகடந்துஇடந்தது*கண்டும்தெளியகில்லீர்,*
சிரங்களால்அமரர்வணங்கும்*திருக்குருகூர்அதனுள்,*
பரன்திறம்அன்றிபல்உலகீர்!*தெய்வம்மற்றுஇல்லைபேசுமினே!
பேசநின்றசிவனுக்கும்பிரமன்தனக்கும்*பிறர்க்கும்
நாயகன்அவனே,*கபாலநல்மோக்கத்துக்*கண்டுகொண்மின்,*
தேசமாமதிள்சூழ்ந்துஅழகுஆய*திருக்குருகூர்அதனுள்,*
ஈசன்பால்ஓர்அவம்பறைதல்*என்ஆவதுஇலிங்கியர்க்கே?
இலிங்கத்துஇட்டபுராணத்தீரும்*சமணரும்சாக்கியரும்*
வலிந்துவாதுசெய்வீர்களும்*மற்றும்நும்தெய்வமும்ஆகிநின்றான்*
மலிந்துசெந்நெல்கவரிவீசும்*திருக்குருகூர்அதனுள்,*
பொலிந்துநின்றபிரான்கண்டீர்*ஒன்றும்பொய்இல்லைபோற்றுமினே.(2)
போற்றிமற்றுஓர்தெய்வம்*பேணப்புறத்திட்டு*உம்மைஇன்னே
தேற்றிவைத்தது*எல்லீரும்வீடுபெற்றால்உலகுஇல்லைஎன்றே,*
சேற்றில்செந்நெல்கமலம்ஓங்கு*திருக்குருகூர்அதனுள்,*
ஆற்றவல்லவன்மாயம்கண்டீர்*அதுஅறிந்துஅறிந்துஓடுமினே.
ஓடிஓடிபலபிறப்பும்பிறந்து*மற்றுஓர்தெய்வம்,
பாடிஆடிப்பணிந்து*பல்படிகால்வழிஏறிக்கண்டீர்,*
கூடிவானவர்ஏத்தநின்ற*திருக்குருகூர்அதனுள்,*
ஆடுபுள்கொடிஆதிமூர்த்திக்கு*அடிமைபுகுவதுவே
புக்குஅடிமையினால்தன்னைக்கண்ட*மார்க்கண்டேயன்அவனை*
நக்கபிரானும்அன்றுஉய்யக்கொண்டது*நாராயணன்அருளே*
கொக்குஅலர்தடம்தாழைவேலித்*திருக்குருகூர்அதனுள்*
மிக்கஆதிப்பிரான்நிற்க*மற்றைத்தெய்வம்விளம்புதிரே
விளம்பும்ஆறுசமயமும்*அவைஆகியும்மற்றும்தன்பால்,*
அளந்துகாண்டற்குஅரியன்ஆகிய*ஆதிப்பிரான்அமரும்,*
வளம்கொள்தண்பணைசூழ்ந்துஅழகுஆய*திருக்குருகூர்அதனை,*
உளம்கொள்ஞானத்துவைம்மின்*உம்மைஉய்யக்கொண்டுபோகுறிலே.
உறுவதுஆவதுஎத்தேவும்*எவ்உலகங்களும்மற்றும்தன்பால்,*
மறுஇல்மூர்த்தியோடுஒத்து*இத்தனையும்நின்றவண்ணம்நிற்கவே,*
செறுவில்செந்நெல்கரும்பொடுஓங்கு*திருக்குருகூர்அதனுள்*
குறியமாண்உருஆகிய*நீள்குடக்கூத்தனுக்குஆள்செய்வதே.
ஆள்செய்துஆழிப்பிரானைச்சேர்ந்தவன்*வண்குருகூர்நகரான்*
நாள்கமழ்மகிழ்மாலைமார்பினன்*மாறன்சடகோபன்,*
வேட்கையால்சொன்னபாடல்*ஆயிரத்துள்இப்பத்தும்வல்லார்,*
மீட்சிஇன்றிவைகுந்தமாநகர்*மற்றதுகையதுவே.(2)
 
5.8 ஆராஅமுதே!
ஆராஅமுதே!அடியேன்உடலம்*நின்பால்அன்பாயே*
நீராய்அலைந்துகரைய*உருக்குகின்றநெடுமாலே*
சீர்ஆர்செந்நெல்கவரிவீசும்*செழுநீர்த்திருக்குடந்தை*
ஏர்ஆர்கோலம்திகழக்கிடந்தாய்!*கண்டேன்எம்மானே!*(2)
எம்மானே!என்வெள்ளைமூர்த்தி!*என்னைஆள்வானே*
எம்மாஉருவும்வேண்டும்ஆற்றால்*ஆவாய்எழில்ஏறே*
செம்மாகமலம்செழுநீர்மிசைக்கண்மலரும்*திருக்குடந்தை*
அம்மாமலர்க்கண்வளர்கின்றானே!என்நான்செய்கேனே!*(2)
என்நான்செய்கேன்!யாரேகளைகண்?என்னைஎன்செய்கின்றாய்?*
உன்னால்அல்லால்யாவராலும்*ஒன்றும்குறைவேண்டேன்*
கன்ஆர்மதிள்சூழ்குடந்தைக்கிடந்தாய்!*அடியேன்அருவாழ்நாள்*
செல்நாள்எந்நாள்?அந்நாள்*உனதாள்பிடித்தேசெலக்காணே*
செலக்காண்கிற்பார்காணும்அளவும்*செல்லும்கீர்த்தியாய்*
உலப்புஇலானே!எல்லாஉலகும்உடைய*ஒருமூர்த்தி*
நலத்தால்மிக்கார்குடந்தைக்கிடந்தாய்!*உன்னைக்காண்பான்நான்-
அலப்புஆய்*ஆகாசத்தைநோக்கி*அழுவன்தொழுவனே*.
அழுவன்தொழுவன்ஆடிக்காண்பான்*பாடிஅலற்றுவன்*
தழுவல்வினையால்பக்கம்நோக்கி*நாணிக்கவிழ்ந்திருப்பன்*
செழுஒண்பழனக்குடந்தைக்கிடந்தாய்!*செந்தாமரைக்கண்ணா!*
தொழுவனேனைஉனதாள்சேரும்*வகையேசூழ்கண்டாய்*.
சூழ்கண்டாய்என்தொல்லைவினையைஅறுத்து*உன்அடிசேரும்-
ஊழ்கண்டிருந்தே*தூராக்குழிதூர்த்து*எனைநாள்அகன்றுஇருப்பன்?*
வாழ்தொல்புகழார்குடந்தைக்கிடந்தாய்!*வானோர்கோமானே*
யாழின்இசையே!அமுதே!*அறிவின்பயனே!அரிஏறே!*.
அரிஏறே!என்அம்பொன்சுடரே!*செங்கண்கருமுகிலே!*
எரிஏய்!பவளக்குன்றே!*நால்தோள்எந்தாய்உனதுஅருளே*
பிரியாஅடிமைஎன்னைக்கொண்டாய்*குடந்தைத்திருமாலே*
தரியேன்இனிஉன்சரணம்தந்து*என்சன்மம்களையாயே*.
களைவாய்துன்பம்களையாதுஒழிவாய்*களைகண்மற்றுஇலேன்*
வளைவாய்நேமிப்படையாய்!*குடந்தைக்கிடந்தமாமாயா*
தளராஉடலம்எனதுஆவி*சரிந்துபோம்போது*
இளையாதுஉனதாள்ஒருங்கப்பிடித்துப்*போதஇசைநீயே*.
இசைவித்துஎன்னைஉன்தாள்இணைக்கீழ்*இருத்தும்அம்மானே*
அசைவுஇல்அமரர்தலைவர்தலைவா*ஆதிப்பெருமூர்த்தி*
திசைவில்வீசும்செழுமாமணிகள்சேரும்*திருக்குடந்தை*
அசைவுஇல்உலகம்பரவக்கிடந்தாய்!*காணவாராயே*.
வாராஅருவாய்வரும்என்மாயா!*மாயாமூர்த்தியாய்*
ஆராஅமுதாய்அடியேன்ஆவி*அகமேதித்திப்பாய்*
தீராவினைகள்தீரஎன்னைஆண்டாய்!*திருக்குடந்தை-
ஊராய்!*உனக்குஆள்பட்டும்*அடியேன்இன்னம்உழல்வேனோ?*(2)
உழலைஎன்பில்பேய்ச்சிமுலையூடு*அவளைஉயிர்உண்டான்*
கழல்கள்அவையேசரண்ஆகக்கொண்ட*குருகூர்ச்சடகோபன்*
குழலின்மலியச்சொன்ன*ஓர்ஆயிரத்துள்இப்பத்தும்*
மழலைதீரவல்லார்*காமர்மான்ஏய்நோக்கியர்க்கே*.(2)
6.10 உலகம்உண்டபெருவாயா
உலகம்உண்டபெருவாயா!*உலப்புஇல்கீர்த்திஅம்மானே,*
நிலவும்சுடர்சூழ்ஒளிமூர்த்தி!*நெடியாய்அடியேன்ஆர்உயிரே,*
திலதம்உலகுக்குஆய்நின்ற*திருவேங்கடத்துஎம்பெருமானே,*
குலதொல்அடியேன்உனபாதம்*கூடும்ஆறுகூறாயே.
கூறாய்நீறுஆய்நிலன்ஆகி*கொடுவல்அசுரர்குலம்எல்லாம்,*
சீறாஎரியும்திருநேமிவலவா!*தெய்வக்கோமானே,*
சேறார்சுனைத்தாமரைசெந்தீமலரும்*திருவேங்கடத்தானே,*
ஆறாஅன்பில்அடியேன்*உன்அடிசேர்வண்ணம்அருளாயே.
வண்ணம்மருள்கொள்அணிமேகவண்ணா!*மாயஅம்மானே,*
எண்ணம்புகுந்துதித்திக்கும்அமுதே!*இமையோர்அதிபதியே,*
தெள்நல்அருவிமணிபொன்முத்துஅலைக்கும்*திருவேங்கடத்தானே,*
அண்ணலே!உன்அடிசேர*அடியேற்குஆஆஎன்னாயே!
ஆவாவென்னாதுஉலகத்தைஅலைக்கும்*அசுரர்வாழ்நாள்மேல்,*
தீவாய்வாளிமழைபொழிந்தசிலையா!*திருமாமகள்கேள்வா-
தேவா*சுரர்கள்முனிக்கணங்கள்விரும்பும்*திருவேங்கடத்தானே,*
பூஆர்கழல்கள்அருவினையேன்*பொருந்துமாறுபுணராயே.
புணராநின்றமரம்ஏழ்*அன்றுஎய்தஒருவில்வலவாஓ,*
புணர்ஏய்நின்றமரம்இரண்டின்*நடுவேபோனமுதல்வாஓ,*
திணர்ஆர்மேகம்எனக்களிறுசேரும்*திருவேங்கடத்தானே,*
திணர்ஆர்சார்ங்கத்துஉனபாதம்*சேர்வதுஅடியேன்எந்நாளே?
எந்நாளேநாம்மண்அளந்த*இணைத்தாமரைகள்காண்பதற்குஎன்று,*
எந்நாளும்நின்றுஇமையோர்கள்ஏத்தி*இறைஞ்சிஇனம்இனமாய்,*
மெய்ந்நாமனத்தால்வழிபாடுசெய்யும்*திருவேங்கடத்தானே,*
மெய்ந்நான்எய்திஎந்நாள்*உன்அடிக்கண்அடியேன்மேவுவதே?
அடியேன்மேவிஅமர்கின்றஅமுதே!*இமையோர்அதிபதியே,*
கொடியாஅடுபுள்உடையானே!*கோலக்கனிவாய்ப்பெருமானே,*
செடிஆர்வினைகள்தீர்மருந்தே!*திருவேங்கடத்துஎம்பெருமானே,*
நொடிஆர்பொழுதும்உனபாதம்*காணநோலாதுஆற்றேனே
நோலாதுஆற்றேன்உனபாதம்*காணஎன்றுநுண்உணர்வின்,*
நீல்ஆர்கண்டத்துஅம்மானும்*நிறைநான்முகனும்இந்திரனும்,*
சேல்ஏய்கண்ணார்பலர்சூழவிரும்பும்*திருவேங்கடத்தானே,*
மாலாய்மயக்கிஅடியேன்பால்*வந்தாய்போலேவாராயே.
வந்தாய்போலேவாராதாய்!*வாராதாய்போல்வருவானே,*
செந்தாமரைக்கண்செங்கனிவாய்*நால்தோள்அமுதே!எனதுஉயிரே,*
சிந்தாமணிகள்பகர்அல்லைப்பகல்செய்*திருவேங்கடத்தானே,*
அந்தோஅடியேன்உனபாதம்*அகலகில்லேன்இறையுமே.
அகலகில்லேன்இறையும்என்று*அலர்மேல்மங்கைஉறைமார்பா,*
நிகர்இல்புகழாய்உலகம்மூன்றுஉடையாய்!*என்னைஆள்வானே,*
நிகர்இல்அமரர்முனிக்கணங்கள்விரும்பும்*திருவேங்கடத்தானே,*
புகல்ஒன்றுஇல்லாஅடியேன்*உன்அடிக்கீழ்அமர்ந்துபுகுந்தேனே.
அடிக்கீழ்அமர்ந்துபுகுந்து*அடியீர்வாழ்மின்என்றுஎன்றுஅருள்கொடுக்கும்*
படிக்கேழ்இல்லாப்பெருமானைப்*பழனக்குருகூர்ச்சடகோபன்,*
முடிப்பான்சொன்னஆயிரத்துத்*திருவேங்கடத்துக்குஇவைபத்தும்,*
பிடித்தார்பிடித்தார்வீற்றிருந்து*பெரியவானுள்நிலாவுவரே.
7.2 கங்குலும்பகலும்
கங்குலும்பகலும்கண்துயில்அறியாள்*கண்ணநீர்கைகளால்இறைக்கும்,*
சங்குசக்கரங்கள்என்றுகைகூப்பும்*தாமரைக்கண்என்றேதளரும்,*
எங்ஙனேதரிக்கேன்உன்னைவிட்டுஎன்னும்*இருநிலம்கைதுழாஇருக்கும்,*
செங்கயல்பாய்நீர்த்திருவரங்கத்தாய்!*இவள்திறத்துஎன்செய்கின்றாயே?(2)
என்செய்கின்றாய்என்தாமரைக்கண்ணா!என்னும்*கண்ணீர்மல்கஇருக்கும்,*
என்செய்கேன்எறிநீர்த்திருவரங்கத்தாய்?என்னும்*வெவ்வுயிர்த்துஉயிர்த்துஉருகும்:*
முன்செய்தவினையே!முகப்படாய்என்னும்*முகில்வண்ணா!தகுவதோ?என்னும்,*
முன்செய்துஇவ்உலகம்உண்டுஉமிழ்ந்துஅளந்தாய்!*என்கொலோமுடிகின்றதுஇவட்கே?
வட்குஇலள்இறையும்மணிவண்ணா!என்னும்*வானமேநோக்கும்மையாக்கும்,*
உட்குஉடைஅசுரர்உயிர்எல்லாம்உண்ட*ஒருவனே!என்னும்உள்உருகும்,*
கட்கிலீ!உன்னைக்காணுமாறுஅருளாய்*காகுத்தா!கண்ணனே!என்னும்,*
திண்கொடிமதிள்சூழ்திருவரங்கத்தாய்!*இவள்திறத்துஎன்செய்திட்டாயே?
இட்டகால்இட்டகையளாய்இருக்கும்*எழுந்துஉலாய்மயங்கும்கைகூப்பும்,*
கட்டமேகாதல்!என்றுமூர்ச்சிக்கும்*கடல்வண்ணா!கடியைகாண்என்னும்,*
வட்டவாய்நேமிவலங்கையா!என்னும்*வந்திடாய்என்றுஎன்றேமயங்கும்,*
சிட்டனேசெழுநீர்த்திருவரங்கத்தாய்!*இவள்திறத்துஎன்சிந்தித்தாயே?
சிந்திக்கும்திசைக்கும்தேறும்கைகூப்பும்*திருவரங்கத்துள்ளாய்!என்னும்
வந்திக்கும்,*ஆங்கேமழைக்கண்ணீர்மல்க*வந்திடாய்என்றுஎன்றேமயங்கும்,*
அந்திப்போதுஅவுணன்உடல்இடந்தானே!*அலைகடல்கடைந்தஆர்அமுதே,*
சந்தித்துஉன்சரணம்சார்வதேவலித்த*தையலைமையல்செய்தானே!
மையல்செய்துஎன்னைமனம்கவர்ந்தானே!என்னும்*மாமாயனே!என்னும்,*
செய்யவாய்மணியே!என்னும்*தண்புனல்சூழ்திருவரங்கத்துள்ளாய்!என்னும்,*
வெய்யவாள்தண்டுசங்குசக்கரம்வில்ஏந்தும்*விண்ணோர்முதல்!என்னும்,*
பைகொள்பாம்புஅணையாய்!இவள்திறத்துஅருளாய்*பாவியேன்செயற்பாலதுவே.
பாலதுன்பங்கள்இன்பங்கள்படைத்தாய்!*பற்றிலார்பற்றநின்றானே,*
காலசக்கரத்தாய்!கடல்இடம்கொண்ட*கடல்வண்ணா!கண்ணனே!என்னும்,*
சேல்கொள்தண்புனல்சூழ்திருவரங்கத்தாய்!என்னும்*என்தீர்த்தனேஎன்னும்,*
கோலமாமழைக்கண்பனிமல்கஇருக்கும்*என்னுடைக்கோமளக்கொழுந்தே
கொழுந்துவானவர்கட்குஎன்னும்*குன்றுஏந்திகோநிரைகாத்தவன்!என்னும்,*
அழும்தொழும்ஆவிஅனலவெவ்வுயிர்க்கும்*அஞ்சனவண்ணனே!என்னும்,*
எழுந்துமேல்நோக்கிஇமைப்பிலள்இருக்கும்*எங்ஙனேநோக்குகேன்?என்னும்,*
செழும்தடம்புனல்சூழ்திருவரங்கத்தாய்!*என்செய்கேன்என்திருமகட்கே?
என்திருமகள்சேர்மார்வனே!என்னும்*என்னுடைஆவியே!என்னும்,*
நின்திருஎயிற்றால்இடந்துநீகொண்ட*நிலமகள்கேள்வனே!என்னும்,*
அன்றுஉருஏழும்தழுவிநீகொண்ட*ஆய்மகள்அன்பனே!என்னும்,*
தென்திருவரங்கம்கோயில்கொண்டானே!*தெளிகிலேன்முடிவுஇவள்தனக்கே.(2)
முடிவுஇவள்தனக்குஒன்றுஅறிகிலேன்என்னும்*மூவுலகுஆளியே!என்னும்,*
கடிகமழ்கொன்றைச்சடையனே!என்னும்*நான்முகக்கடவுளே!என்னும்,*
வடிவுஉடைவானோர்தலைவனே!என்னும்*வண்திருவரங்கனே!என்னும்,*
அடிஅடையாதாள்போல்இவள்அணுகிஅடைந்தனள்*முகில்வண்ணன்அடியே
முகில்வண்ணன்அடியைஅடைந்துஅருள்சூடிஉய்ந்தவன்*மொய்புனல்பொருநல்,*
துகில்வண்ணத்தூநீர்ச்சேர்ப்பன்*வண்பொழில்சூழ்வண்குருகூர்ச்சடகோபன்,*
முகில்வண்ணன்அடிமேல்சொன்னசொல்மாலை*ஆயிரத்துஇப்பத்தும்வல்லார்,*
முகில்வண்ணவானத்துஇமையவர்சூழஇருப்பர்*பேரின்பவெள்ளத்தே(2)
 
8.10 நெடுமாற்குஅடிமை
நெடுமாற்குஅடிமைசெய்வேன்போல்*அவனைக்கருதவஞ்சித்து*
தடுமாற்றுஅற்றதீக்கதிகள்*முற்றும்தவிர்ந்தசதிர்நினைந்தால்*
கொடுமாவினையேன்அவன்அடியார்அடியே*கூடும்இதுஅல்லால்*
விடுமாறுஎன்பதுஎன்?அந்தோ!*வியன்மூவுலகுபெறினுமே?.(2)
வியன்மூவுலகுபெறினும்போய்*தானேதானேஆனாலும்*
புயல்மேகம்போல்திருமேனிஅம்மான்*புனைபூம்கழல்அடிக்கீழ்ச்*
சயமேஅடிமைதலைநின்றார்*திருத்தாள்வணங்கி*இம்மையே
பயனேஇன்பம்யான்பெற்றது*உறுமோபாவியேனுக்கே?
உறுமோபாவியேனுக்கு*இவ்உலகம்மூன்றும்உடன்நிறைய*
சிறுமாமேனிநிமிர்த்த*என்செந்தாமரைக்கண்திருக்குறளன்*
நறுமாவிரைநாள்மலர்அடிக்கீழ்ப்*புகுதல்அன்றிஅவன்அடியார்*
சிறுமாமனிசராய்என்னைஆண்டார்*இங்கேதிரியவே.
இங்கேதிரிந்தேற்குஇழுக்குஉற்றுஎன்!*இருமாநிலம்முன்உண்டுஉமிழ்ந்த*
செங்கோலத்தபவளவாய்ச்*செந்தாமரைக்கண்என்அம்மான்*
பொங்குஏழ்புகழ்கள்வாயவாய்*புலன்கொள்வடிவுஎன்மனத்ததாய்*
அங்குஏய்மலர்கள்கையவாய்*வழிபட்டுஓடஅருளிலே?
வழிபட்டுஓடஅருள்பெற்று*மாயன்கோலமலர்அடிக்கீழ்ச்*
சுழிபட்டுஓடும்சுடர்ச்சோதிவெள்ளத்து*இன்புற்றுஇருந்தாலும்*
இழிபட்டுஓடும்உடலினில்பிறந்து*தன்சீர்யான்கற்று*
மொழிபட்டுஓடும்கவிஅமுதம்*நுகர்ச்சிஉறுமோமுழுதுமே?
நுகர்ச்சிஉறுமோமூவுலகின்*வீடுபேறுதன்கேழ்இல்*
புகர்ச்செம்முகத்தகளிறுஅட்ட*பொன்ஆழிக்கைஎன்அம்மான்*
நிகர்ச்செம்பங்கிஎரிவிழிகள்*நீண்டஅசுரர்உயிர்எல்லாம்*
தகர்த்துஉண்டுஉழலும்புள்பாகன்*பெரியதனிமாப்புகழே?
தனிமாப்புகழேஎஞ்ஞான்றும்*நிற்கும்படியாத்தான்தோன்றி*
முனிமாப்பிரமமுதல்வித்தாய்*உலகம்மூன்றும்முளைப்பித்த*
தனிமாத்தெய்வத்தளிர்அடிக்கீழ்ப்*புகுதல்அன்றிஅவன்அடியார்*
நனிமாக்கலவிஇன்பமே*நாளும்வாய்க்கநங்கட்கே
நாளும்வாய்க்கநங்கட்கு*நளிர்நீர்க்கடலைப்படைத்து*தன்
தாளும்தோளும்முடிகளும்*சமன்இலாதபலபரப்பி*
நீளும்படர்பூங்கற்பகக்காவும்*நிறைபல்நாயிற்றின்*
கோளும்உடையமணிமலைபோல்*கிடந்தான்தமர்கள்கூட்டமே.
தமர்கள்கூட்டவல்வினையை*நாசம்செய்யும்சதுமூர்த்தி*
அமர்கொள்ஆழிசங்குவாள்*வில்தண்டுஆதிபல்படையன்*
குமரன்கோலஐங்கணைவேள்தாதை*கோதுஇல்அடியார்தம்*
தமர்கள்தமர்கள்தமர்களாம்*சதிரேவாய்க்கதமியேற்கே
வாய்க்கதமியேற்கு*ஊழிதோறுஊழிஊழிமாகாயாம்-
பூக்கொள்மேனிநான்குதோள்*பொன்ஆழிக்கைஎன்அம்மான்*
நீக்கம்இல்லாஅடியார்தம்*அடியார்அடியார்அடியார்எம்
கோக்கள்*அவர்க்கேகுடிகளாய்ச்செல்லும்*நல்லகோட்பாடே
நல்லகோட்பாட்டுஉலகங்கள்*மூன்றினுள்ளும்தான்நிறைந்த*
அல்லிக்கமலக்கண்ணனை*அம்தண்குருகூர்ச்சடகோபன்*
சொல்லப்பட்டஆயிரத்துள்*இவையும்பத்தும்வல்லார்கள்*
நல்லபதத்தால்மனைவாழ்வர்*கொண்டபெண்டீர்மக்களே.(2)
 
9.10 மாலைநண்ணி
மாலைநண்ணித்*தொழுதுஎழுமினோவினைகெட*
காலைமாலை*கமலமலர்இட்டுநீர்*
வேலைமோதும்மதிள்சூழ்*திருக்கண்ணபுரத்து*
ஆலின்மேல்ஆல்அமர்ந்தான்*அடிஇணைகளே.(2)
கள்அவிழும்மலர்இட்டு*நீர்இறைஞ்சுமின்*
நள்ளிசேரும்வயல்சூழ்*கிடங்கின்புடை*
வெள்ளிஏய்ந்தமதிள்சூழ்*திருக்கண்ணபுரம்
உள்ளி*நாளும்தொழுதுஎழுமினோதொண்டரே!
தொண்டர்நும்தம்*துயர்போகநீர்கமாய்*
விண்டுவாடாமலர்இட்டு*நீர்இறைஞ்சுமின்*
வண்டுபாடும்பொழில்சூழ்*திருக்கண்ணபுரத்து
அண்டவாணன்*அமரர்பெருமானையே
மானைநோக்கி*மடப்பின்னைதன்கேள்வனை*
தேனைவாடாமலர்இட்டு*நீர்இறைஞ்சுமின்*
வானைஉந்தும்மதிள்சூழ்*திருக்கண்ணபுரம்*
தான்நயந்தபெருமான்*சரண்ஆகுமே.
சரணம்ஆகும்*தனதாள்அடைந்தார்க்குஎல்லாம்*
மரணம்ஆனால்*வைகுந்தம்கொடுக்கும்பிரான்*
அரண்அமைந்தமதிள்சூழ்*திருக்கண்ணபுரத்
தரணியாளன்*தனதுஅன்பர்க்குஅன்புஆகுமே.
அன்பன்ஆகும்*தனதாள்அடைந்தார்க்குஎல்லாம்*
செம்பொன்ஆகத்து*அவுணன்உடல்கீண்டவன்,
நன்பொன்ஏய்ந்தமதிள்சூழ்*திருக்கண்ணபுரத்து
அன்பன்*நாளும்தன*மெய்யர்க்குமெய்யனே
மெய்யன்ஆகும்*விரும்பித்தொழுவார்க்குஎல்லாம்*
பொய்யன்ஆகும்*புறமேதொழுவார்க்குஎல்லாம்*
செய்யில்வாளைஉகளும்*திருக்கண்ணபுரத்து
ஐயன்*ஆகத்துஅணைப்பார்கட்குஅணியனே.
அணியன்ஆகும்*தனதாள்அடைந்தார்க்குஎல்லாம்*
பிணியும்சாரா*பிறவிகெடுத்துஆளும்*
மணிபொன்ஏய்ந்தமதிள்சூழ்*திருக்கண்ணரம்
பணிமின்*நாளும்பரமேட்டிதன்பாதமே
பாதம்நாளும்*பணியதணியும்பிணி*
ஏதம்சாரா*எனக்கேல்இனிஎன்குறை?*
வேதநாவர்விரும்பும்*திருக்கண்ணபுரத்து
ஆதியானை*அடைந்தார்க்குஅல்லல்இல்லையே.
இல்லைஅல்லல்*எனக்கேல்இனிஎன்குறை?
அல்லிமாதர்அமரும்*திருமார்பினன்*
கல்லில்ஏய்ந்தமதிள்சூழ்*திருக்கண்ணபுரம்
சொல்ல*நாளும்துயர்பாடுசாராவே.
பாடுசாரா*வினைபற்றுஅறவேண்டுவீர்*
மாடம்நீடு*குருகூர்ச்சடகோபன்*சொல்
பாடலானதமிழ்*ஆயிரத்துள்இப்பத்தும்-
பாடிஆடிப்*பணிமின்அவன்தாள்களே(2)
 
10.9 சூழ்விசும்பணிமுகில்
சூழ்விசும்பணிமுகில்*தூரியம்முழக்கின*
ஆழ்கடல்அலைதிரைக்*கைஎடுத்துஆடின*
ஏழ்பொழிலும்*வளம்ஏந்தியஎன்அப்பன்*
வாழ்புகழ்நாரணன்*தமரைக்கண்டுஉகந்தே.(2)
நாரணன்தமரைக்கண்டுஉகந்து*நல்நீர்முகில்*
பூரணபொன்குடம்*பூரித்ததுஉயர்விண்ணில்*
நீரணிகடல்கள்*நின்றுஆர்த்தன*நெடுவரைத்-
தோரணம்நிரைத்து*எங்கும்தொழுதனர்உலகே.
தொழுதனர்உலகர்கள்*தூபநல்மலர்மழை-
பொழிவனர்*பூமிஅன்றுஅளந்தவன்தமர்முன்னே*
எழுமின்என்றுஇருமருங்குஇசைத்தனர்*முனிவர்கள்*
வழிஇதுவைகுந்தர்க்குஎன்று*வந்துஎதிரே.
எதிர்எதிர்இமையவர்*இருப்பிடம்வகுத்தனர்*
கதிரவர்அவரவர்*கைந்நிரைகாட்டினர்*
அதிர்குரல்முரசங்கள்*அலைகடல்முழக்குஒத்த*
மதுவிரிதுழாய்முடி*மாதவன்தமர்க்கே.
மாதவன்தமர்என்று*வாசலில்வானவர்*
போதுமின்எமதுஇடம்*புகுதுகஎன்றலும்*
கீதங்கள்பாடினர்*கின்னரர்கெருடர்கள்*
வேதநல்வாயவர்*வேள்விஉள்மடுத்தே.
வேள்விஉள்மடுத்தலும்*விரைகமழ்நறும்புகை*
காளங்கள்வலம்புரி*கலந்துஎங்கும்இசைத்தனர்*
ஆள்மின்கள்வானகம்*ஆழியான்தமர்என்று*
வாள்ஒண்கண்மடந்தையர்*வாழ்த்தினர்மகிழ்ந்தே.
மடந்தையர்வாழ்த்தலும்*மருதரும்வசுக்களும்*
தொடர்ந்துஎங்கும்*தோத்திரம்சொல்லினர்*தொடுகடல்-
கிடந்தஎம்கேசவன்*கிளர்ஒளிமணிமுடி*
குடந்தைஎம்கோவலன்*குடிஅடியார்க்கே
குடிஅடியார்இவர்*கோவிந்தன்தனக்குஎன்று*
முடிஉடைவானவர்*முறைமுறைஎதிர்கொள்ள*
கொடிஅணிநெடுமதிள்*கோபுரம்குறுகினர்*
வடிவுஉடைமாதவன்*வைகுந்தம்புகவே.
வைகுந்தம்புகுதலும்*வாசலில்வானவர்*
வைகுந்தன்தமர்எமர்*எமதுஇடம்புகுதஎன்று*
வைகுந்தத்துஅமரரும்*முனிவரும்வியந்தனர்*
வைகுந்தம்புகுவது*மண்ணவர்விதியே.
விதிவகைபுகுந்தனர்என்று*நல்வேதியர்*
பதியினில்பாங்கினில்*பாதங்கள்கழுவினர்*
நிதியும்நல்சுண்ணமும்*நிறைகுடவிளக்கமும்*
மதிமுகமடந்தையர்*ஏந்தினர்வந்தே.
வந்துஅவர்எதிர்கொள்ள*மாமணிமண்டபத்து*
அந்தம்இல்பேரின்பத்து*அடியரோடுஇருந்தமை*
கொந்துஅலர்பொழில்*குருகூர்ச்சடகோபன்*சொல்-
சந்தங்கள்ஆயிரத்து*இவைவல்லார்முனிவரே.(2)
 
10.10 முனியே!நான்முகனே!
முனியே!நான்முகனே!*முக்கண்ணப்பா*என்பொல்லாக்-
கனிவாய்த்*தாமரைக்கண்கருமாணிக்கமேஎன்கள்வா!*
தனியேன்ஆர்உயிரே!*என்தலைமிசையாய்வந்திட்டு*
இனிநான்போகல்ஒட்டேன்*ஒன்றும்மாயம்செய்யேல்என்னையே.(2)
மாயம்செய்யேல்என்னை*உன்திருமார்வத்துமாலைநங்கை*
வாசம்செய்பூங்குழலாள்*திருஆணைநின்ஆணைகண்டாய்*
நேசம்செய்துஉன்னோடுஎன்னை*உயிர்வேறுஇன்றிஒன்றாகவே*
கூசம்செய்யாதுகொண்டாய்*என்னைக்கூவிக்கொள்ளாய்வந்துஅந்தோ!
கூவிக்கொள்ளாய்வந்துஅந்தோ!*என்பொல்லாக்கருமாணிக்கமே!*
ஆவிக்குஓர்பற்றுக்கொம்பு*நின்அலால்அறிகின்றிலேன்யான்*
மேவித்தொழும்பிரமன்சிவன்*இந்திரன்ஆதிக்குஎல்லாம்*
நாவிக்கமலமுதல்கிழங்கே!*உம்பர்அந்ததுவே.
உம்பர்அம்தண்பாழேஓ!*அதனுள்மிசைநீயேஓ*
அம்பரம்நல்சோதி!*அதனுள்பிரமன்அரன்நீ*
உம்பரும்யாதவரும்படைத்த*முனிவன்அவன்நீ*
எம்பரம்சாதிக்கலுற்று*என்னைப்போரவிட்டிட்டாயே.
போரவிட்டிட்டுஎன்னை*நீபுறம்போக்கலுற்றால்*பின்னையான்-
ஆரைக்கொண்டுஎத்தைஅந்தோ!*எனதுஎன்பதுஎன்?யான்என்பதுஎன்?*
தீரஇரும்புஉண்டநீரதுபோல*என்ஆர்உயிரை-
ஆரப்பருக*எனக்குஆராஅமுதுஆனாயே.
எனக்குஆராஅமுதாய்*எனதுஆவியைஇன்உயிரை*
மனக்குஆராமைமன்னிஉண்டிட்டாய்*இனிஉண்டொழியாய்*
புனக்காயாநிறத்த*புண்டரீகக்கண்செங்கனிவாய்*
உனக்குஏற்கும்கோலமலர்ப்பாவைக்கு*அன்பா!என்அன்பேயோ!
கோலமலர்ப்பாவைக்குஅன்புஆகிய*என்அன்பேயோ*
நீலவரைஇரண்டுபிறைகவ்வி*நிமிர்ந்ததுஒப்ப*
கோலவராகம்ஒன்றாய்*நிலம்கோட்டிடைக்கொண்டஎந்தாய்*
நீலக்கடல்கடைந்தாய்!*உன்னைபெற்றுஇனிப்போக்குவனோ?(2)
பெற்றுஇனிப்போக்குவனோ*உன்னைஎன்தனிப்பேருயிரை*
உற்றஇருவினையாய்*உயிராய்ப்பயன்ஆவையாய்*
முற்றஇம்மூவுலகும்*பெரும்தூறுஆய்தூற்றில்புக்கு*
முற்றக்கரந்துஒளித்தாய்!*என்முதல்தனிவித்தேயோ!
முதல்தனிவித்தேயோ!*முழுமூவுலகுஆதிக்குஎல்லாம்*
முதல்தனிஉன்னைஉன்னை*எனைநாள்வந்துகூடுவன்நான்?*
முதல்தனிஅங்கும்இங்கும்*முழுமுற்றுறுவாழ்பாழாய்*
முதல்தனிசூழ்ந்துஅகன்றுஆழ்ந்துயர்ந்த*முடிவிலீஓ!
சூழ்ந்துஅகன்றுஆழ்ந்துயர்ந்த*முடிவில்பெரும்பாழேயோ*
சூழ்ந்ததனில்பெரிய*பரநல்மலர்ச்சோதீயோ*
சூழ்ந்ததனில்பெரிய*சுடர்ஞானஇன்பமேயோ!*
சூழ்ந்ததனில்பெரிய*என்அவாஅறச்சூழ்ந்தாயே!(2)
அவாஅறச்சூழ்*அரியைஅயனைஅரனைஅலற்றி*
அவாஅற்றுவீடுபெற்ற*குருகூர்ச்சடகோபன்சொன்ன*
அவாஇல்அந்தாதிகளால்*இவைஆயிரமும்*முடிந்த-
அவாஇல்அந்தாதிஇப்பத்துஅறிந்தார்*பிறந்தார்உயர்ந்தே.(2)