ஸ்ரீ இராமானுஜர்

SriRamanujar pages come under this category


ஸ்ரீ ராமானுஜர். இவர் கி.பி. 1017 ஆண்டு காஞ்சிபுரம் அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் அசூரி கேசவ சோமயாஜி தீட்சிதர் மற்றும் காந்திமதி தம்பதிகளுக்கு பிறந்தார். சிறு வயது முதலாகவே வேதங்களிலும் உபநிடதங்களிலும் இருக்கும் மிகவும் நுணுக்கமான தத்துவங்களை மிக எளிதாக புரிந்து கொண்டார். தனது 16-வது வயதில் ரக்ஷகாம்பாள் என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் திருமணத்திற்கு பிறகு நான்கு மாதங்களில் அவர் தந்தை இறந்து விட்டார். அதன் பிறகு […]

ஸ்ரீ ராமானுஜர் உதயம்


       காஞ்சி வரதராஜப் பெருமாள், பெரியநம்பிகளை ஆச்சாரியராகக் கொள்ளும்படி ஸ்ரீராமானுஜரிடம் கூறினார் என்பது ஐதீகம். இதனையடுத்து ராமானுஜர் பெரியநம்பிகளைத் தேடி ஸ்ரீரங்கம் சென்றுகொண்டிருந்தார். அதே சமயத்தில் ராமானுஜரைத் தேடி காஞ்சிபுரத்திற்கு வந்துகொண்டிருந்தார் பெரிய நம்பிகள். இருவரும் வழியில் இருந்த மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் உள்ள கருணாகரப் பெருமாள் சன்னிதியில் சந்தித்தனர். தனக்கு உடனடியாக பஞ்ச சம்ஸ்காரம் செய்தருளும்படி, பெரியநம்பியிடம் வேண்டினார் ராமானுஜர். நம்மாழ்வாரின் அம்சம் கொண்ட […]

ஸ்ரீராமானுஜர் – பெரியநம்பிகள்


ஸ்ரீமதே இராமாநுஜாய நம: திருக்கோட்டியூர் நம்பி உடையவருக்கு அருளிய 18 வார்த்தைகள்: 1. மோக்ஷத்தில் ஆசை உடைய ஜீவன், வாழ்க்கையில் ஆசையை துறக்க வேண்டும். 2. வாழ்க்கையில் ஆசையை துறந்தால், அஹங்காரம் மமகாரம் நீங்கும். 3. அஹங்காரம் மமகாரம் நீங்கினால் தேஹ அபிமானம் நீங்கும். 4. தேஹ அபிமானம் நீங்கினால் ஆத்ம ஞானம் பிறக்கும். 5. ஆத்ம ஞானம் பிறந்தால் ஐஸ்வர்ய போகத்தில் வெறுப்பு ஏற்படும். 6. ஐஸ்வர்ய போகத்தில் […]

திருக்கோஷ்டியூர் நம்பிகள் உபதேசம்ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தத்தில் ‘ரஹஸ்யங்கள்’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ள  ‘ரஹஸ்ய க்ரந்தங்கள்’ என்கிற ஆன்மிக நூல்கள் உள்ளன. ‘திருமந்திரம்’, த்வயம்,  சரமச்லோகம்’ ஆகிய மூன்றும் ‘ரஹஸ்ய த்ரயம’ என்றும், இந்த மூன்று ரஹஸ்யங்களையும் உள்ளடக்கிய 18 விஷயங்களை  ‘அஷ்டாதச ரஹஸ்யங்கள்’ என்றும் வகைப்படுத்தியுள்ளனர். திருக்கோஷ்டியூரில் எழுத்தருளியிருந்த திருக்குருகைப்பிரான் என்கிற திருக்கோஷ்டியூர் நம்பி, தன் ஆசார்யாரான ஆளவந்தாரிடம் கற்றுக்கொண்ட ரஹஸ்ய த்ரயத்தினுடைய (திருமந்த்ரம், த்வயம், சரம ச்லோகம்) அர்த்த விசேஷங்களை எப்பொழுதும் த்யானித்துக்கொண்டே […]

திருக்கோஷ்டியூரில் இராமானுஜர்


  திருநாராயணபுரம், மைசூரி அருகே மேலக்கோட்டையில் உள்ளது. வடநாட்டில் ஒரு பத்ரிகாஸ்ரமம் இருப்பது போல் இத்தலம் தென் பத்ரிகாஸ்ரமம் என்றே அழைக்கப்படுகிறது. இங்குள்ள நாராயணபுரம் என்ற கோயிலும் அதில் உள்ள உற்சவ மூர்த்தி சம்பத்குமாரன் எழுந்தருளிய பின்னணியும் சுவையான வரலாறாகும். இராமானுஜர் ஊர் ஊராகச் சென்று விசிஷ்டாத்வைத கொள்கையைப் பரப்பி வருகின்ற காலத்தில் தொண்டனூர் என்ற பகுதியை ஆண்டு வந்த விட்டல தேவராயன் என்ற மன்னன் இவருடைய சீடனானான். அவனுக்கு […]

இராமானுஜர் கண்ட செல்லப்பிள்ளை


பன்னிரண்டாழ்வார்களால் பாடப்பட்ட வைணவத் தலங்கள் நூற்று எட்டாகும். இவற்றை ‘நூற்று எட்டு வைணவத் திருப்பதிகள்’  என்று வைணவ பக்தர்கள் கூறுவர். ஆனாலும் இந்த நூற்று எட்டில் பொதுவாக ‘திருப்பதி’ என்று சொன்னால் அது திருவேங்கடமென்னும் தலத்தையே குறிக்கும். திருவேங்கடம் என்னும் தலத்தின் பெருமையைப் பற்றி பத்து ஆழ்வார்கள் பாடியுள்ளனர். இத்தகு சிறப்பு வாய்ந்த திருப்பதி திருமலையில் ராமானுஜரின் குருவான திருமலை நம்பி, கோவிலரையராகத் திருப்பணி செய்து வந்தார். அதே சமயத்தில் தமிழ்நாட்டில் […]

திருமலையில் இராமானுஜர்பாரத நாடே புண்ணிய பூமி. பெரிய மகான்களும் சிறந்த குருமார்களும் இந்தநாட்டை வலம் வந்து வணங்கியதுடன் தங்கள் தத்துவத்தை பாரத மக்களிடையேபரப்புவது வழக்கம். அவ்வாறே ஸ்ரீ ராமானுஜர் மேற்கொண்ட திக்கு விஜயத்தைக்காண்போம். ஸ்ரீராமானுஜர் அழகர் கோயிலில் ஆண்டாளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தார்.பின் நித்ய கைங்கரியங்கள் தொடர்ந்து நடத்திவர ராமானுஜ மடம் ஒன்றைஉருவாக்கினார். பிறகு அங்கிருந்து மதுரை சென்று கூடலழகரை வணங்கிவாழ்த்தினார். அப்போது அங்கிருந்த புலவர்களுடன் வாதிட்டு வென்றார். அதன்பின்திருமோகூர், திருதங்கால் ஆகிய இடங்களில் உள்ள பெருமாளை சேவித்து திருவில்லிபுத்தூர் சென்றடைந்தார்.  திருவில்லிபுத்தூர் கோயிலுக்குள் புகும்போதுஆண்டாள் நாச்சியார் தன் நேர்த்திக் கடனை திருமாலிருஞ்சோலையில் தன்சார்பாக நிறைவேற்றியதால் தாமே நேரில் வந்து ஸ்ரீராமானுஜரை ‘வாரும் என்அண்ணனே’ என்று தன் மூத்த சகோதரராக விளித்ததாக கூறப்படுகிறது. அங்குஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கும் தாய்வீட்டு சீதனம் சமர்ப்பித்து வாழ்த்திவணங்கினார். பிறகு அங்கிருந்து நவதிருப்பதியில் உள்ள பெருமாள்களை மங்களாசாசனம்செய்து திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி) சென்று நம்மாழ்வார் பாதம் பணிந்தார்.நம்மாழ்வாரின் திருவடிகள் (சடாரி) மதுரகவிகள் என்று பெயர் இருந்தது. ஸ்ரீராமானுஜர் நம்மாழ்வாரை பணிந்து வேண்டிக் கொண்டதற்கு இணங்க, அதன்பிறகு ஆழ்வார் திருநகரியில் சடாரிக்கு ராமானுஜன் என்று பெயர் வழங்கலாயிற்று. அங்கிருந்து திருவனந்தபுரம் சென்றார். அங்கு அவரை எதிர்த்து வாதிட்டவர்களைவென்று யதிராஜ மண்டபம் ஒன்றை நினைவாக எழுப்பினார். சேர மன்னன்ஸ்ரீராமானுஜரை பணிந்தான். அவனைக் கொண்டு திருவனந்தபுரம் உள்ளிட்டதிருப்பதிகளின் வழிபாட்டை சிறப்பாக நடத்தி வர ஆவண செய்தார். பின்பு குஜராத்திலிருந்து காஷ்மீரம் சென்றார். அங்கு புகழ்மிக்க சாரதா பீடத்தில்கூடியிருந்த வேறு தத்துவவாதிகளுடன் வாதிட்டு வென்றார். பிறகு அங்கு இருந்தபோதாயனரின் பிரம்ம சூத்திரத்திற்கான விளக்கவுரை என்ற நூலை ஒருமுறைபடித்துப் பார்த்தார். படித்த அளவிலேயே அதை மனதில் பதித்துக் கொண்டார். தான்எழுதிய வேதாந்தசாரம் என்ற நூலை அரசரிடம் கொடுக்க, அதை அரசர்சாரதாதேவி கையில் வைத்தார். பின்பு சன்னதியை சாத்திவிட்டார். மறுநாள்காலையில் திறந்து பார்க்க சரஸ்வதி தேவி கையிலிருந்த அந்த  நூல் கல்விக்கடவுளின் தலையின் அலங்காரமாக வீற்றிருப்பது கண்டு அரசரும் மற்றஅறிஞர்களும் வியப்படைந்தனர். ஸ்ரீ ராமானுஜரை போற்றிப் புகழ்ந்தனர். அங்கிருந்து திருமந்திரம் அவதரித்த பத்ரிகாச்ரமத்துக்கு சென்றார். அங்குள்ளபெருமாளை வணங்கி வாழ்த்தி, பக்தர்களுக்கு விசிஷ்டாத்வைத நல்வழியைபோதித்தார். அதைத் தொடர்ந்து செயல்படுத்த ஒரு மடத்தை நிறுவினார். பத்ரிகாச்ரமத்திலிருந்து  தற்போது நேபாளத்திலுள்ள முக்திநாத் எனப்படும்சாளக்ராமத்தை சென்றடைந்தார். சாளக்ராமங்களை உருவாக்கும் கண்டகி நதியில்புனித நீராடி அங்குள்ள பெருமாளை வழிபட்டார். முக்திநாத்திலிருந்து புறப்பட்டு ராமபிரான் அவதரித்த அயோத்திக்கு வந்தார். ஸ்ரீராமபிரானை சேவித்து அங்கிருந்துகாசி நகர் புகுந்தார். அங்கு வைணவ தரிசனத்தை நிறுவி, பின் நைமிசாரண்யம்,தண்டகாரண்யம், சித்ரகூடம், சிருங்கிபேரபுரம் பெருமாள்களை வணங்கிஒடியாவிலுள்ள கட்டாக் நகர் வந்தடைந்தார். ஸ்ரீராமானுஜர் தன் கோஷ்டியுடன் அங்கிருந்து புறப்பட்டு ஆந்திர மாநிலத்திலுள்ளஸ்ரீகூர்மத்தை வந்தடைந்தார். அங்கு நீண்ட காலம் தங்கி கோயில் திருப்பணிகளைமேற்கொண்டு தென்னாட்டு கலைப்பண்பாட்டை வணங்கும்படி செய்தார். பிறகு அங்கிருந்து சிம்மாசலம், சீகாகுளம், வாங்கல் (வாரங்கல்) பகுதிகளில்வைணவ சித்தாந்தப் பிரச்சாரம் செய்து அகோபிலம் சென்று நவநரசிம்மர்களைவணங்கி வாழ்த்தினார். அகோபிலத்திலிருந்து திருமலை சென்று திருவேங்கட நாதனை சேவித்தார். சிலர்திருவுருவத்தை சிவன் என வாதிட, ஸ்ரீராமானுஜர் சமரசத்தை பெருமாளின்முடிவிற்கே விட்டுவிட தீர்மானித்து, அனைவர் முன்பும் சிவனது அடையாளமானதிரிசூலத்தையும் உடுக்கையையும் பெருமாளின் சிறப்பு அம்சமான சங்குசக்கரத்தையும் மூலவர் முன்பு வைத்து கருவறையை மூடிவிட்டார். மறுநாள்காலையில் அனைவரும் கூடி கதவைத் திறக்க, பெருமாள் சங்கு சக்கரதாரியாககாட்சியளித்தார். ஸ்ரீராமானுஜர் பெருமாளை வணங்க அனைவரும் உடையவர் அடிபணிந்தனர். அங்கிருந்து திருவள்ளூர் வழியாக திருவேங்கடநாதனுக்கு நேரான ‘நின்றவூர்நித்திலத் தொத்து’ எனப்படும் திருநின்றவூர் பத்தராவி பெருமாளை வணங்கிகாஞ்சிபுரம் சென்றார். பிறகு காஞ்சி மாநகரில் எழுந்தருளியுள்ள பெருமாள்களை வணங்கி, மாமல்லபுரம், திருவல்லிக்கேணி, திருமயிலை வழியாக மதுராந்தகம்,திருவயிந்திரபுரம் சென்று சீர்காழி வந்தடைந்தார். கடலோரமாக பயணித்துராமேஸ்வரம் வந்து திருப்புல்லாணி சென்று சேர்ந்தார். சேது நீராடி பின்பு தர்ப்பைபுல்லின் மீது சயனித்து உள்ள ஸ்ரீராமபிரானை சேவித்தார். 25 ஆண்டுகள் திக்குவிஜயம் செய்த ஸ்ரீராமானுஜர்,  திருப்புல்லாணி சென்று  சேதுதரிசனம் செய்து‘ஆசேது ஹிமாச்சலம்’ என்ற தேச ஒருமைப்பாட்டை வலியுறுத்தும்வாக்கியத்திற்கு வலு சேர்த்து திருவரங்கம் சென்று திருவரங்கன் திருமுற்றம் சென்றுசேர்ந்தார்.

ஸ்ரீ ராமானுஜரின் திக்விஜயம்


1. தானுகந்த திருமேனி (ஸ்ரீ பெரும்புதூர்)  இராமானுஜர் தம் 120-ஆவது வயதில் ஸ்ரீரங்கத்தில் தங்கி கோவில் நிர்வாகத்தை நெறிப்படுத்துதலிலும், வைஷ்ணவ மட நிர்வாகங்களைச் சீரமைப்பதிலும் ஈடுபட்டிருந்தார். இராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளிய போது அவரின் சீடர்கள் அவர் உருவம் தாங்கிய செப்புச்சிலை ஒன்றைச் செதுக்கினார்கள். ராமானுசர் அச்சிலையைத் தழுவி தன் சக்தியை அச்சிலையின் உள்ளே செலுத்தினார். இச்சிலை  ‘தானுகந்த திருமேனி’ என்று பெயர் பெற்றது. இராமானுஜர் உகந்து (விரும்பி) அணைத்ததால் இந்தப் பெயர் […]

ஸ்ரீ இராமானுஜர் திருமேனி