ஆறாம் பத்து


திருவாய் மொழி ஆறாம் பத்து

முதல் திருமொழி

 

3343:##

வைகல் பூங்கழிவாய்* வந்து மேயும் குருகினங்காள்*

செய்கொள் செந்நெலுயர்* திருவண் வண்åருறையும்*

கைகொள் சக்கரத்து* என்கனிவாய் பெருமானைக் கண்டு*

கைகள் கூப்பிச் சொல்லீர்* வினையாட்டியேன் காதன்மையே*.(2)            6.1.1

 

3344:

காதல் மென் பெடையோடு* உடன் மேயும் கருநாராய்*

வேத வேள்வி ஒலிமுழங்கும்* தண் திருவண் வண்åர்*

நாதன் ஞாலமெல்லாம் உண்ட* நம்பெருமானைக் கண்டு*

பாதம் கைதொழுது பணியீர்* அடியேன் திறமே*.        6.1.2

 

3345:

திறங்களாகி எங்கும்* செய்கðடுழல் புள்ளினங்காள்*

சிறந்த செல்வம் மல்கு* திருவண் வண்åருறையும்*

கறங்கு சக்கரக்கைக்* கனிவாய்ப் பெருமானைக் கண்டு*

இறங்கி நீர்தொழுது பணியீர்* அடியேன் இடரே*.         6.1.3

 

3346:

இடரில் போகம் மூழ்கி* இணைந்தாடும் மடவன்னங்காள்!*

விடலில் வேதவொலி முழங்கும்* தண் திருவண் வண்åர்*

கடலமேனிப் பிரான்* கண்ணணை நெடுமாலைக் கண்டு*

உடலம் நைந்து ஒருத்தி* உருகும் என்று உணர்த்துமினே*.    6.1.4

 

3347:

உணர்த்தலூடல் உணர்ந்து* உடன் மேயும் மடவன்னங்காள்*

திணர்த்த வண்டல்கள் மேல்* சங்கு சேரும் திருவண்வண்åர்*

புணர்த்த பூந்தண் துழாய்முடி* நம்பெருமானைக் கண்டு*

புணர்த்த கையினராய்* அடியேனுக்கும் போற்றுமினே*.      6.1.5

 

3348:

போற்றியான் இரந்தேன்* புன்னை மேலுறை பூங்குயில்காள்*

சேற்றில் வாளை துள்ளும்* திருவண் வண்åருறையும்*

ஆற்றல் ஆழியங்கை* அமரர் பெருமானைக் கண்டு*

மாற்றம் கொண்டருளÖர்* மையல் தீர்வது ஒரு வண்ணமே*.            6.1.6

 

3349:

ஒருவண்ணம் சென்று புக்கு* எனக்கு ஒன்றுரை ஒண் கிளியே*

செருவொண் பூம்பொழில் சூழ்* செக்கர் வேலை திருவண்வண்åர்*

கருவண்ணம் செய்யவாய்* செய்யகண் செய்யகை செய்யகால்*

செருவொண் சக்கரம் சங்கு* அடையாளம் திருந்தக் கண்டே*.            6.1.7

 

3350:

திருந்தக் கண்டு எனக்கொன்று உரையாய்* ஒண்சிறு பூவாய்*

செருந்தி ஞாழல் மகிழ்* புன்னைசூழ் தண் திருவண்வண்åர்*

பெருந்தண் தாமரைக் கண்* பெருநீள்முடி நால் தடந்தோள்*

கருந்திண் மாமுகில் போல்* திருமேனி அடிகளையே*.          6.1.8

 

 

3351:

அடிகள் கை தொழுது* அலர்மேல் அசையும் அன்னங்காள்*

விடிவை சங்கொலிக்கும்* திருவண் வண்åர் உறையும்*

கடிய மாயன் தன்னைக்* கண்ணனை நெடுமாலைக் கண்டு*

கொடிய வல்வினையேன்* திறம் கூறுமின் வேறுகொண்டே*.            6.1.9

 

3352:

வேறு கொண்டு உம்மையான் இரந்தேன்* வெறி வண்டினங்காள்*

தேறு நீர்ப் பம்பை* வடபாலைத் திருவண் வண்åர்*

மாறில் போர் அரக்கன்* மதிள் நீறெழச் செற்றுகந்த*

ஏறு சேவகனார்க்கு * என்னையும் உளள் என்மின்களே*.        6.1.10

 

3353:##

மின்கொள் சேர்புரிநூல் குறளாய்* அகல் ஞாலம் கொண்ட*

வன்கள்வன் அடிமேல்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*

பண்கொள் ஆயிரத்துள் இவை பத்தும்* திருவண்வண்åர்க்கு*

இன்கொள் பாடல் வல்லார்* மதனர் மின்னிடை அவர்க்கே*.(2)            6.1.11

 

இரண்டாம் திருமொழி

 

3354:##

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார்* முன்பு நானதஞ்சுவன்*

மன்னுடை இலங்கை* அரண்காய்ந்த மாயவனே*

உன்னுடைய சுண்டாயம் நானறிவன்* இனி அது கொண்டு செய்வதென்?*

என்னுடைய பந்தும் கழலும்* தந்து போகு நம்பீ!*.(2)    6.2.1

 

3355:

போகு நம்பீ! உன்தாமரை புரைகண்ணிணையும்* செவ்வாய் முறுவலும்*

ஆகுலங்கள் செய்ய* அழிதற்கே நோற்றோமேயாம்?*

தோகை மாமயிலார்கள் நின்னருள் சூடுவார்* செவியோசை வைத்தெழ*

ஆகள் போக விட்டு* குழலூது போயிருந்தே*.      6.2.2

 

3356:

போயிருந்து நின் புள்ளுவம் அறியாது* அவர்க்கு உரை நம்பி!* நின்செய்ய-

வாயிருங் கனியுங் கண்களும்* விபரீதம் இந்நாள்*

வேயிருந்தடந்தோளினார்* இத்திருவருள் பெறுவார்யவர் கொல்*

மாயிருங் கடலைக் கடைந்த* பெருமானாலே?*.             6.2.3

 

3357:

ஆலின் ஈளிலை ஏழுலகமுண்டு* அன்று நீ கிடந்தாய்* உன் மாயங்கள்-

மேலை வானவரும் அறியார்* இனி எம் பரமே?*

வேலினேர்த் தடங்கண்ணினார்* விளையாடு சூழலைச் சூழவே நின்று*

காலி மேய்க்க வல்லாய்!* எம்மை நீ கழறேலே*. 6.2.4

 

3358:

கழறேல் நம்பீ!* உன் கை தவம் மண்ணும் விண்ணும் நன்கறியும்* திண்சக்கர-

நிழறு தொல்படையாய்!* உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்*

மழறு தேன்மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க* எம்-

குழறு பூவையோடும்* கிளியோடும் குழகேலே*.            6.2.5

 

3359:

குழகி எங்கள் குழமணன் கொண்டு* கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை*

பழகியாம் இருப்போம்* பரமே இத்திருவருள்கள்?*

அழகியார் இவ்வுலக மூன்றுக்கும்* தேவிதமை தகுவார் பலருளர்*

கழக மேறேல் நம்பீ!* உனக்கும் இளைதே கன்மமே*.   6.2.6

 

3360:

கன்ம மன்று எங்கள் கையில் பாவைபறிப்பது* கடல்ஞாலம் உண்டிட்ட*

நின்மலா! நெடியாய்!* உனக்கேலும் பிழைபிழையே*

வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி* அதுகேட்கில் என்னைமார்*

தன்ம பாவமென்னார்* ஒரு நான்று தடி பிணக்கே*.     6.2.7

 

3361:

பிணக்கி யாவையும் யாவரும்* பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்*

கணக்கில் கீர்த்தி வெள்ளக்* கதிர்ஞான மூர்த்தியினாய்,

இணக்கி எம்மை எந்தோழிமார்* விளையாடப் போதுமின் என்ன போந்தோமை*

உணக்கி நீ வளைத்தால்* என் சொல்லார் உகவாதவரே?*.    6.2.8

 

3362:

உகவையால் நெஞ்சம் உள்ளுருகி* உன்தாமரைத் தடங்கண் விழிகளின்*

அகவலைப் படுப்பான்* அழித்தாய் உன் திருவடியால்*

தகவு செய்திலை எங்கள் சிற்றிலும்* யாமடு சிறுசோறும் கண்டு* நின்-

முகவொளி திகழ* முறுவல் செய்து நின்றிலையே*.    6.2.9

 

3363:

நின்றிலங்கு முடியினாய்!* இருபத்தோர் கால் அரசு களை கட்ட*

வென்றி நீள்மழுவா!* வியன்ஞாலம் முன்படைத்தாய்!*

இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய* கருமாணிக்கச் சுடர்*

நின் தன்னால் நலிவே படுவோம்* என்றும் ஆய்ச்சியோமே*.            6.2.10

 

3364:##

ஆய்ச்சியாகிய அன்னையால்* அன்று வெண்ணெய் வார்த்தையுள்* சீற்ற முண்டழு-

கூத்த அப்பன் தன்னைக்* குருகூர்ச் சடகோபன்*

ஏத்திய தமிழ் மாலை* ஆயிரத்துள் இவையுமோர் பத்து இசையோடும்*

நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு* இல்லை நல்குரவே*.(2)            6.2.11

 

மூன்றாம் திருமொழி

 

3365:##

நல்குரவும் செல்வும்* நரகும் சுவர்க்கமுமாய்*

வெல்பகையும் நட்பும்* விடமும் அமுதமுமாய்*

பல்வகையும் பரந்த* பெருமான் என்னை ஆள்வானை*

செல்வம் மல்குகுடி* திரு விண்ணகர் கண்டேனே*.(2)  6.3.1

 

3366:

கண்ட இன்பம் துன்பம்* கலக்கங்களும் தேற்றமுமாய்*

தண்டமும் தண்மையும்* தழலும் நிழலுமாய்*

கண்டு கோடற்கரிய* பெருமான் என்னை ஆள்வானூர்*

தென் திரைப் புனல்சூழ்* திருவிண்ணகர் நன்னகரே*.           6.3.2

 

3367:

நகரமும் நாடுகளும்* ஞானமும் மூடமுமாய்*

நிகரில்சூழ் சுடராய் இருளாய்* நிலனாய் விசும்பாய்*

சிகர மாடங்கள் சூழ்* திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்*

புகர்கொள் கீர்த்தியல்லால் இல்லை* யாவர்க்கும் புண்ணியமே*.              6.3.3

 

3368:

புண்ணியம் பாவம்* புணர்ச்சி பிரிவு என்றிவையாய்*

எண்ணமாய் மறப்பாய்* உண்மையாய் இன்மையாய் அல்லனாய்*

திண்ணமாடங்கள் சூழ்* திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்*

கண்ணனின் அருளே* கண்டு கொண்மின்கள் கைதவமே*.            6.3.4

 

3369:

கை தவம் செம்மை* கருமை வெளுமையுமாய்*

மெய்பொய் இளமை* முதுமை புதுமை பழமையுமாய்*

செய்ததிண் மதிள்சூழ்* திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்*

பெய்தகாவு கண்டீர்* பெருந்தேவுடை மூவுலகே*.         6.3.5

 

3370:

மூவுலகங்களுமாய்* அல்லனாய் உகப்பாய் முனிவாய்*

பூவில் வாழ் மகளாய்* தவ்வையாய்ப் புகழாய் பழியாய்*

தேவர் மேவித்தொழும்* திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்*

பாவியேன் மனத்தே* உறைகின்ற பரஞ்சுடரே*. 6.3.6

 

3371:

பரஞ்சுடர் உடம்பாய்* அழுக்கு பதித்த உடம்பாய்*

கரந்தும் தோன்றியும் நின்றும்* கை தவங்கள் செய்யும்* விண்ணோர்-

சிரங்களால் வணங்கும்* திருவிண்ணகர்ச் சேர்ந்த பிரான்*

வரங்கொள் பாதமல்லால் இல்லை* யாவர்க்கும் வன்சரணே*.            6.3.7

 

3372:

வன்சரண் சுரர்க்காய்* அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்*

தன்சரண் நிழற்கீழ்* உலகம் வைத்தும் வையாதும்*

தென்சரண் திசைக்குத்* திருவிண்ணகர்ச் சேர்ந்த பிரான்*

என்சரண் என் கண்ணன்* என்னையாளுடை என்னப்பனே*            6.3.8

 

3373:##

என்னப்பன் எனக்காய் இகுளாய்* என்னைப் பெற்றவளாய்*

பொன்னப்பன் மணியப்பன்* முத்தப்பன் என் அப்பனுமாய்*

மின்னப் பொன் மதிள்சூழ்* திரு விண்ணகர்ச் சேர்ந்த அப்பன்*

தன்னொப்பார் இல்லப்பன்* தந்தனன் தனதாள் நிழலே*.(2)            6.3.9

 

3374:

நிழல்வெயில் சிறுமை பெருமை* குறுமை நெடுமையுமாய்*

சுழல்வன நிற்பன* மற்றுமாய் அவை அல்லனுமாய்*

மழலை வாழ் வண்டுவாழ்* திருவிண்ணகர் மன்னுபிரான்*

கழல்கள் அன்றி* மற்றோர் களைகணிலம் காண்மின்களே*.             6.3.10

 

3375:##

காண்மின்கள் உலகீர்! என்று* கண்முகப்பே நிமிர்ந்த*

தாளிணையன் தன்னைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*

ஆணை ஆயிரத்துத் * திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்*

கோணையின்றி விண்ணோர்க்கு* என்றுமாவர் குரவர்களே*.(2)            6.3.11

 

நான்காம் திருமொழி

 

3376:##

குரவை யாய்ச்சியரோடு கோத்ததும்*  குன்றமொன் றேந்தியதும்*

உரவுநீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும்*  உட்பட மற்றும்பல,*

அரவில் பள்ளிப் பிரான்தன்* மாய  வினைகளையே அலற்றி,*

இரவும் நன்பகலும் தவிர்கிலம்*  என்ன குறை நமக்கே?         6.4.1

 

3377:

கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரைமேய்த்ததும்,* கெண்டை ஒண்கண்*

வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும்* மற்றும்பல,*

மாயக் கோலப் பிரான்தன்* செய்கை  நினைந்து மனம்குழைந்து,*

நேயத்தோடு கழிந்த போது* எனக்கு எவ்வுலகம் நிகரே?        6.4.2

 

3378:

நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும்* நீள் நெடுங்கை,*

சிகர மாகளிறட்டதும்* இவை போல்வனவும் பிறவும்,*

புகர் கொள் சோதிப் பிரான்தன்* செய்கை  நினைந்து புலம்பி என்றும்*

நுகர வைகல் வைகப்பெற்றேன்* எனக்கு என் இனி நோவதுவே?            6.4.3

 

3379:

நோவ ஆய்ச்சி உரலோடார்க்க* இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணை*,

சாவப் பாலுண்டதும்* ஊர் சகடம்  இறச் சாடியதும்,*

தேவக் கோல பிரான்தன்* செய்கை  நினைந்து மனம்குழைந்து,*

மேவக் காலங்கள் கூடினேன்* எனக்கு என்இனி வேண்டுவதே?            6.4.4

 

3380:

வேண்டி தேவரிரக்க வந்து  பிறந்ததும்* வீங்கிருள்வாய்-

பூண்டு* அன்று அன்னை புலம்பப் போய்* அங்கு  ஓராய்க்குலம் புக்கதும்,*

காண்ட லின்றி வளர்ந்து* கஞ்சனைத்  துஞ்ச வஞ்சம் செய்ததும்,*

ஈண்டு நான் அலற்றப் பெற்றேன்* எனக்கு  என்ன இகலுளதே?            6.4.5

 

3381:

இகல்கொள் புள்ளை பிளந்ததும்* இமில்  ஏறுகள் செற்றதுவும்,*

உயர்கொள் சோலைக் குருந்தொசித்ததும்*  உட்பட மற்றும்பல,*

அகல்கொள் வையம் அளந்த மாயன்*  என்னப்பன் தன் மாயங்களே,*

பகலிராப் பரவப் பெற்றேன்* எனக்கென்ன  மனப்பரிப்பே?            6.4.6

 

3382:

மனப்பரிபோடு அழுக்கு* மானிட  சாதியில் தான்பிறந்து,*

தனக்கு வேண்டுருக்கொண்டு* தான் தன  சீற்றத்தினை முடிக்கும்,*

புனத்துழாய் முடிமாலை மார்பன்* என்னப்பன்தன் மாயங்களே,*

நினைக்கும் நெஞ்சுடையேன்* எனக்கினி யார்நிகர் நீணிலத்தே?            6.4.7

 

3383:

நீணிலத் தொடுவான் வியப்ப* நிறைபெரும் போர்கள் செய்து,*

வாணன் ஆயிரம் தோள் துணித்ததும்*  உட்பட மற்றும்பல,*

மாணியாய் நிலம் கொண்ட மாயன்*  என்னப்பன்தன் மாயங்களே,*

காணும் நெஞ்சுடையேன்* எனக்கு இனியென்ன  கலக்க முண்டே?            6.4.8

 

3384:

கலக்க ஏழ்கடல் ஏழ்*மலை உலகு ஏழும் கழியக்கடாய்,*

உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும்*  உட்பட மற்றும்பல,*

வலக்கை ஆழி இடக்கை சங்கம்* இவையுடை மால்வண்ணனை,*

மலக்கு நாவுடையேற்கு* மாறுளதோ இம்  மண்ணின் மிசையே?            6.4.9

 

3385:

மண்மிசைப் பெரும்பாரம் நீங்க* ஓர்பாரத  மாபெரும்போர் பண்ணி,*

மாயங்கள் செய்து, சேனையைப் பாழ்பட* நூற்றிட்டுப்போய்,*

விண்மிசைத் தனதாமமேபுக* மேவிய சோதிதன்தாள்,*

நண்ணி நான்வணங்கப் பெற்றென்* எனக்கு ஆர்பிறர் நாயகரே?            6.4.10

 

3386:##

நாயகன் முழுவேழுலகுக்குமாய்*  முழுவேழுலகும்,* தன்

வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய்*  அவையல்லனுமாம்,*

கேசவன் அடியிணை மிசைக்* குருகூர்ச்  சடகோபன் சொன்ன*

தூய ஆயிரத்து இப்பத்தால்*  பத்தராவர் துவளின்றியே.       6.4.11

 

ஐந்தாம் திருமொழி

 

3387:##

துவளில் மாமணி மாடமோங்கு* தொலைவில்லி மங்கலம் தொழும்

இவளை,* நீர் இனி அன்னை மீர்!* உமக்கு  ஆசை இல்லை விடுமினோ,*

தவள ஒண்சங்கு சக்கரமென்றும்*  தாமரைத் தடங்கணென்றும்,*

குவளை ஒண்மலர்க்கண்கள் நீர்மல்க*  நின்று நின்று குமுறுமே.            6.5.1

 

3388:

குமுறும் ஓசை விழவொலித்* தொலை  வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,*

அமுத மென்மொழியாளை* நீர் உமக்கு  ஆசை இன்றி அகற்றினீர்,*

திமிர் கொண்டாலொத்து நிற்கும்* மற்றிவள் தேவ தேவ பிரானென்றே,*

நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க* நெக்கொசிந்து கரையுமே.            6.5.2

 

3389:

கரைகொள் பைம்பொழில் தண்பணைத்* தொலைவில்லி மங்கலம் கொண்டுபுக்கு,*

உரைகொளின் மொழியாளை* நீர் உமக்கு ஆசையின்றி அகற்றினீர்,*

திரைகொள் பௌவத்து சேர்ந்ததும்* திசை  ஞாலம் தாவி அளந்ததும்,*

நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி* நெடுங்கண்ணீர்மல்க நிற்குமே.            6.5.3

 

3390:

நிற்கும் நான்மறை வாணர் வாழ்* தொலை  வில்லி மங்கலம் கண்டபின்,*

அற்க மொன்றும் அறவுறாள்* மலிந்தாள்  கண்டீர் இவள் அன்னைமீர்,*

கற்கும் கல்வியெல்லாம்* கருங்கடல்  வண்ணன் கண்ண பிரானென்றே,*

ஒற்கமொன்றுமிலள் உகந்துகந்து* உள்மகிழ்ந்து குழையுமே.            6.5.4

 

3391:

குழையும் வாள்முகத்தேழையைத்* தொலை  வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,*

இழைகொள் சோதிச் செந்தாமரைக் கண்பிரான்* இருந்தமைகாட்டினீர்,*

மழை பெய்தாலொக்கும் கண்ண நீரினொடு* அன்று தொட்டும்மையாந்து* இவள்

நுழையும் சிந்தையள் அன்னைமீர்!* தொழும்  அத்திசையுற்று நோக்கியே.            6.5.5

 

3392:

நோக்கும் பக்கமெல்லாம்* கரும்பொடு செந்நெலோங்கு செந்தாமரை,*

வாய்க்கும் தண்பொருநல்* வடகரை  வந்தொலை வில்லி மங்கலம்,*

நோக்குமேல் அத்திசையல்லால்* மறு நோக்கிலள் வைகல் நாள்தொறும்,*

வாய்க்கொள் வாசகமும்* மணிவண்ணன்  நாமமே இவள் அன்னைமீர்!          6.5.6

 

3393:

அன்னைமீர்! அணிமாமயில்* சிறு  மானிவள் நம்மைக் கைவலிந்து,*

என்ன வார்த்தையும் கேட்குறாள்* தொலை  வில்லி மங்கலம் என்றல்லால்,*

முன்னம் நோற்ற விதிகொலோ* முகில்  வண்ணன் மாயங்கொலோ,* அவன்

சின்னமும் திரு நாமமும்* இவள்  வாயனகள் திருந்தவே.     6.5.7

 

3394:

திருந்து வேதமும் வேள்வியும்* திருமா  மகளிரும் தாம்,* மலிந்திருந்து

வாழ்பொருநல்* வடகரை  வண்தொலைவில்லி மங்கலம்,*

கருந்தடங்கண்ணிகை தொழுத* அந்னாள் தொடங்கி இன்னாள் தொறும்,*

இருந்திருந்து அரவிந்த லோசன!‘*  என்றென்றே நைந்திரங்குமே.            6.5.8

 

3395:

இரங்கி நாள்தொறும்* வாய்வெரீஇ இவள்  கண்ண நீர்கள் அலமர,*

மரங்களும் இரங்கு வகை*  `மணிவண்ணவோ!என்று கூவுமால்,*

துரங்கம் வாய்பிளந்தான் உறை* தொலை  வில்லி மங்கல மென்று,* தன்

கரங்கள் கூப்பித் தொழும்* அவ்வூர்த் திருநாமங் கற்றதற் பின்னையே.          6.5.9

 

3396:

பின்னை கொல் நிலமாமகள்கொல்?*  திருமகள்கொல்? பிறந்திட்டாள்,*

என்னமாயங்கொலோ?* இவள்   நெடுமாலென்றே நின்று கூவுமால்,*

முன்னி வந்தவன் நின்றிருந்துறையும்* தொலைவில்லிமங்கலம்

சென்னியால் வணங்கும்* அவ்வூர்த் திருநாமம்* கேட்பது சிந்தையே. 6.5.10

 

3397:##

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்* தேவ பிரானையே,*

தந்தை தாயென்றடைந்த*  வண்குருகூரவர் சடகோபஞ்சொல்,*

முந்தை ஆயிரத்துள் இவை* தொலை  வில்லி மங்கலத்தைச் சொன்ன,*

செந்தமிழ்பத்தும் வல்லார்* அடிமை செய்வார் திருமாலுக்கே.            6.5.11

 

ஆறாம் திருமொழி

 

3398:##

மாலுக்கு* வையம் அளந்த மணாளற்கு,*

நீலக் கருநிற* மேக நியாயற்கு,*

கோலச் செந்தாமரைக்* கண்ணற்கு,*

என் கொங்கலரேலக் குழலி* இழந்தது சங்கே.   6.6.1

 

3399:

சங்கு வில் வாள் தண்டு* சக்கரக் கையற்கு,*

செங்கனி வாய்ச்* செய்ய தாமரை கண்ணற்கு,*

கொங்கலர் தண்ணந் துழாய்* முடியானுக்கு,*

என்மங்கை இழந்தது* மாமை நிறமே.       6.6.2

 

3400:

நிறங்கரியானுக்கு* நீடுலகுண்ட,*

திறம்கிளர் வாய்ச்* சிறுக் கள்ளனவற்கு,*

கறங்கிய சக்கரக்* கையவனுக்கு,* என்

பிறங்கிருங் கூந்தல்* இழந்தது பீடே.           6.6.3

 

3401:

பீடுடை நான்முகனைப்* படைத்தானுக்கு,*

மாடுடை வையம் அளந்த* மணாளற்கு,*

நாடுடை மன்னர்க்குத்* தூதுசெல் நம்பிக்கு,* என்

பாடுடை அல்குல்* இழந்தது பண்பே.         6.6.4

 

3402:

பண்புடை வேதம்* பயந்த பரனுக்கு,*

மண்புரை வையம் இடந்த* வராகற்கு,*

தெண்புனல் பள்ளி* எம்தேவ பிரானுக்கு,* என்

கண்புனை கோதை* இழந்தது கற்பே.       6.6.5

 

3403:

கற்பகக் காவன* நற்பல தோளற்கு,*

பொற்சுடர்க் குன்றன்ன* பூந்தண் முடியற்கு,*

நற்பல தாமரை* நாண்மலர்க் கையற்கு,* என்

விற்புருவக்கொடி* தோற்றது மெய்யே.     6.6.6

 

3404:

மெய்யமர் பல்கலன்* நங்கணிந்தானுக்கு,*

பையரவின் அணைப்* பள்ளியினானுக்கு,*

கையொடு கால்செய்ய* கண்ண பிரானுக்கு,* என்

தையல் இழந்தது* தன்னுடைச் சாயே.       6.6.7

 

3405:

சாயக் குருந்தம் ஒசித்த* தமியற்கு,*

மாயச் சகடம் உதைத்த* மணாளற்கு,*

பேயைப் பிணம்படப்* பாலுண் பிரானுக்கு,* என்

வாசக் குழலி* இழந்தது மாண்பே.   6.6.8

 

3406:

மாண்பமை கோலத்து* எம்மாயக் குறளற்கு,*

சேண்சுடர்க் குன்றன்ன* செஞ்சுடர் மூர்த்திக்கு,*

காண்பெருந் தோற்றத்து* எம்காகுத்த நம்பிக்கு,* என்

பூண்புனை மென்முலை* தோற்றது பொற்பே.  6.6.9

 

3407:

பொற்பமை நீண்முடிப்* பூந்தண் துழாயற்கு,*

மற்பொரு தோளுடை* மாயப் பிரானுக்கு,*

நிற்பன பல்லுருவாய்* நிற்கு மாயற்கு,* என்

கற்புடையாட்டி* இழந்தது கட்டே.      6.6.10

 

3408:##

கட்டெழில் சோலை* நல் வேங்கட வாணனை,*

கட்டெழில் தென்குருகூர்ச்* சடகோபன்சொல்,*

கட்டெழில் ஆயிரத்து* இப்பத்தும் வல்லவர்,*

கட்டெழில் வானவர்* போகமுண்பாரே.     6.6.11

 

ஏழாம் திருமொழி

 

3409:##

உண்ணுஞ் சோறு பருகுநீர்*  தின்னும் வெற்றிலையும் எல்லாம்

கண்ணன்,* எம்பெருமான் என்றென்றே*  கண்கள் நீர்மல்கி,*

மண்ணினுள் அவன்சீர்* வளம்மிக்கவனூர் வினவி,*

திண்ணமென் இளமான் புகுமூர்* திருக்கோðரே.          6.7.1

 

3410:

ஊரும் நாடும் உலகும்*  தன்னைப்போல், அவனுடைய*

பேரும் தார்களுமே பிதற்றக்*  கற்பு வானிடறி,*

சேரு நல் வளஞ்சேர்* பழனத்  திருகோðர்க்கே,*

போருங்கொல் உரையீர்*   கொடியேன்கொடி பூவைகளே!  6.7.2

 

3411:

பூவை பைங்கிளிகள்* பந்து  தூதைபூம் புட்டில்கள்,*

யாவையும் திருமால்* திருநாமங்களே கூவியெழும்,* என்

பாவை போயினித்* தண்பழனத்  திருக்கோðர்க்கே,*

கோவைவாய் துடிப்ப* மழைக் கண்ணொடு என்செய்யுங்கொலோ?            6.7.3

 

3412:

கொல்லை என்பர்கொலோ* குணம்  மிக்கனள் என்பர்கொலோ,*

சில்லைவாய்ப்பெண்டுகள்* அயற் சேரியுள்ளாரும் எல்லே,*

செல்வம் மல்கி அவன் கிடந்த*  திருக்கோðர்க்கே,*

மெல்லிடை நுடங்க* இளமான் செல்ல மேவினளே.      6.7.4

 

3413:

மேவி நைந்து நைந்து  விளையாடலுறாள்* என்சிறுத்-

தேவிபோய்,* இனித்தன்  திருமால்* திருக்கோðரில்,*

பூவியல் பொழிலும்* தடமும்  அவன் கோயிலுங்கண்டு,*

ஆவியுள் குளிர* எங்ஙனே  உகக்குங்கொல் இன்றே?   6.7.5

 

3414:

இன்று எனக்கு உதவாதகன்ற*  இளமான் இனிப்போய்,*

தென்திசைத் திலதமனைய*  திருக்கோðர்க்கே சென்று,*

தன் திருமால் திருக்கண்ணும்* செவ்வாயும் கண்டு,*

நின்று நின்று நையும்* நெடுங்கண்கள் பனிமல்கவே.            6.7.6

 

3415:

மல்குநீர் கண்ணோடு* மையலுற்ற மனத்தனளாய்,*

அல்லுநன் பகலும்* நெடுமாலென்றழைத்து இனிப்போய்,*

செல்வம் மல்கி அவன்கிடந்த* திருக்கோðர்க்கே,*

ஒல்கி ஒல்கி நடந்து* எங்ஙனே புகுங்கொல் ஓசிந்தே?            6.7.7

 

3416:

ஒசிந்த நுண்ணிடை மேல்* கையை  வைத்து நொந்துநொந்து,*

கசிந்த நெஞ்சினளாய்க்*  கண்ண நீர்துளும்பச் செல்லுங்கொல்,*

ஒசிந்த ஒண்மலராள்* கொழுநன்  திருக்கோðர்க்கே,*

கசிந்த நெஞ்சினளாய்* எம்மை  நீத்த எம் காரிகையே?         6.7.8

 

3417:

காரியம் நல்லனகள்* அவை காணில்  என் கண்ணனுக்கென்று,*

ஈரியாய் இருப்பாள் இதெல்லாம்*  கிடக்க இனிப்போய்,*

சேரி பல்பழி தூயிரைப்பத்*  திருக்கோðர்க்கே,*

நேரிழை நடந்தாள்* எம்மை ஒன்றும் நினைத்திலளே.            6.7.9

 

3418:

நினைக்கிலேன் தெய்வங்காள்* நெடுங்கண் இளமான் இனிப்போய்,*

அனைத்துலகும் உடைய*  அரவிந்த லோசனனை,*

தினைத்தனையும் விடாள்* அவன்சேர்  திருக்கோðர்க்கே,*

மனைக்கு வான்பழியும் நினையாள்* செல்ல வைத்தனளே.            6.7.10

 

3419:##

வைத்த மாநிதியாம்* மதுசூதனையே அலற்றி,*

கொத்தலர் பொழில்சூழ்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,*

பத்து நூற்றுள் இப்பத்து* அவன்சேர் திருக்கோðர்க்கே,*

சித்தம் வைத்துரைப்பார்*  திகழ் பொன்னுலகாள்வாரே.      6.7.11

 

எட்டாம் திருமொழி

 

3420:##

பொன்னுலகாளÖரோ?* புவனி முழுதாளÖரோ?,*

நன்னலப் புள்ளினங்காள்!* வினையாட்டியேன் நானிரந்தேன்,*

முன்னுலகங்களெல்லாம் படைத்த* முகில்வண்ணன்கண்ணன்,*

என்னலங் கொண்டபிரான் தனக்கு* என் நிலைமையுரைத்தே?            6.8.1

 

3421:

மையமர்வாள் நெடுங்கண்* மங்கைமார் முன்பு எங்கையிருந்து,*

நெய்யமர் இன்னடிசில்* நிச்சல் பாலோடு மேவீரோ,*

கையமர் சக்கரத்து* என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு*

மெய்யமர் காதல்சொல்லிக்* கிளிகாள்! விரைந்தோடி வந்தே?            6.8.2

 

3422:

ஓடிவந்து என்குழல்மேல்* ஒளிமாமலர் ஊதீரோ,*

கூடிய வண்டினங்காள்!* குருநாடுடை ஐவர்கட்காய்*

ஆடிய மாநெடுந்தேர்ப் படை* நீறெழ செற்றபிரான்,*

சூடிய தண்டுளவமுண்ட* தூமதுவாய்கள்கொண்டே?  6.8.3

 

3423:

தூமதுவாய்கள் கொண்டுவந்து*என்முல்லைகள்மேல் தும்பிகாள்,*

பூமது உண்ணச்செல்லில்*  வினையேனைப் பொய்செய்தகன்ற,*

மாமதுவார் தந்துழாய்முடி*வானவர் கோனைக்கண்டு,*

யாமிதுவோ தக்கவாறு என்னவேண்டும்* கண்டீர் நுங்கட்கே.            6.8.4

 

3424:

நுங்கட்கு யானுரைக்கேன் வம்மின்*யான்வளர்த்த கிளிகாள்,*

வெங்கண் புள்ðர்ந்துவந்து*  வினையேனை நெஞ்சம் கவர்ந்த,*

செங்கண் கருமுகிலைச்* செய்யவாய்ச் செழுங் கற்பகத்தை,*

எங்குச் சென்றாகிலும் கண்டு*  இதுவோ தக்கவாறு என்மினே.            6.8.5

 

3425:

என் மின்னுனூல் மார்வன்*என்கரும்பெருமான் என்கண்ணன்,*

தன் மன்னு நீள்கழல்மேல்*  தந்துழாய் நமக்கன்றிநல்கான்,*

கன்மின்களென்று உம்மையான்*  கற்பியாவைத்த மாற்றம்சொல்லி,*

சென்மின்கள் தீவினையேன்*  வளர்த்த சிறுபூவைகளே!      6.8.6

 

3426:

பூவைகள் போல்நிறத்தன்*  புண்டரீகங்கள் போலும்கண்ணன்,*

யாவையும் யாவருமாய்*  நின்றமாயன் என்னாழிபிரான்,*

மாவைவல் வாய்பிளந்த*  மதுசூதற்கு என்மாற்றம்சொல்லி,*

பாவைகள்! தீர்க்கிற்றிரே*  வினையாட்டியேன் பாசறவே.   6.8.7

 

3427:

பாசற வெய்தியின்னே*  வினையேன் எனையூழி நைவேன்?,*

ஆசறு தூவிவெள்ளைக்குருகே!*அருள் செய்து ஒருநாள்,*

மாசறு நீலச்சுடர்முடி* வானவர்க்கோனைக் கண்டு,*

ஏசறும் நும்மையல்லால்*  மறுநோக்கிலள் பேர்த்துமற்றே.   6.8.8

 

3428:

பேர்த்து மற்றோர் களைகண்*  வினையாட்டியேன் நானொன்றிலேன்,*

நீர்த்திரை மேலுலவி*  இரைதேரும் புதாவினங்காள்,*

கார்த்திரள் மாமுகில்போல் கண்ணன்*  விண்ணவர் கோனைக்கண்டு,*

வார்த்தைகள் கொண்டருளி உரையீர்*  வைகல் வந்திருந்தே.            6.8.9

 

3429:

வந்திருந்து உம்முடைய*  மணிச்சேவலும் நீருமெல்லாம்,*

அந்தர மொன்றுமின்றி*  அலர்மேலச் ஐயும் அன்னங்காள்,*

என்திருமார்வற்கு என்னை*  இன்னாவாறு இவள் காண்மினென்று,*

மந்திரத்து ஒன்றுணர்த்தி உரையீர்*வைகல் மறுமாற்றங்களே.            6.8.10

 

3430:##

மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு*  மதுசூத பிரானடிமேல்,*

நாற்றங்கொள் பூம்பொழில்சூழ்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,*

தோற்றங்கள் ஆயிரத்துள்*  இவையுமொரு பத்தும்வல்லார்,*

ஊற்றின்கண் நுண்மணல்போல்*  உருகாநிற்பர் நீராயே.    6.8.11

 

ஒன்பதாம் திருமொழி

 

3431:##

நீராய் நிலனாய்* தீயாய்க் காலாய் நெடுவானாய்,*

சீரார் சுடர்க்கள் இரண்டாய்ச்* சிவனாய் அயனானாய்,*

கூரார் ஆழி வெண்சங்கேந்திக்* கொடியேன்பால்

வாராய்,* ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.     6.9.1

 

3432:

மண்ணும் விண்ணும் மகிழக்* குறளாய் வலங்காட்டி,*

மண்ணும் விண்ணும் கொண்ட* மாய அம்மானே,*

நண்ணி உனைநான்* கண்டுகந்து கூத்தாட,*

நண்ணி ஒருநாள்* ஞாலத்தூடே நடவாயே.          6.9.2

 

3433:

ஞாலத் தூடே நடந்தும் நின்றும்* கிடந்திருந்தும்,*

சாலப் பலநாள்* உகந்தோறு உயிர்கள் காப்பானே,*

கோலத் திருமா மகளோடு* உன்னைக் கூடாதே,*

சாலப் பலநாள்* அடியேன் இன்னம் தளர்வேனோ?      6.9.3

 

3434:

தளர்ந்தும் முறிந்தும்* சகட அசுரர் உடல்வேறா,*

பிளந்து வீயத்* திருக்காலாண்ட பெருமானே,*

கிளர்ந்து பிரமன் சிவன்* இந்திரன் விண்ணவர்சூழ,*

விளங்க ஒருநாள்* காண வாராய் விண்மீதே.     6.9.4

 

3435:

விண்மீதிருப்பாய்! மலைமேல் நிற்பாய்!* கடல்சேர்ப்பாய்,*

மண்மீதுழல்வாய்!* இவற்றுளெங்கும் மறைந்து உறைவாய்,*

எண்மீதியன்ற புறவண்டத்தாய்!* எனதாவி,*

உண்மீதாடி* உருக்காட்டாதே ஒளிப்பாயோ?      6.9.5

 

3436:

பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப்* பரவை நிலமெல்லாம்-

தாய்,* ஓர் அடியால்* எல்லா உலகும் தடவந்த-

மாயோன்,* உன்னைக் காண்பான்* வருந்தி எனைநாளும்,*

தீயோடு உடன்Ýசேர் மெழுகாய்* உலகில் திரிவேனோ?         6.9.6

 

3437:

உலகில் திரியும் கரும கதியாய்* உலகமாய்,*

உலகுக்கே ஓருயிருமானாய்* புறவண்டத்து,*

அலகில் பொலிந்த* திசை பத்தாய அருவேயோ,*

அலகில் பொலிந்த* அறிவிலேனுக்கு அருளாயே.         6.9.7

 

3438:

அறிவிலேனுக்கு அருளாய்* அறிவாருயிர் ஆனாய்,*

வெறிகொள் சோதி மூர்த்தி!* அடியேன் நெடுமாலே,*

கிறிசெய்து என்னைப் புறத்திட்டு* இன்னம் கெடுப்பாயோ,*

பிறிதொன்றறியா அடியேன்* ஆவி திகைக்கவே?         6.9.8

 

3439:

ஆவி திகைக்க* ஐவர் குமைக்கும் சிற்றின்பம்,*

பாவியேனைப்* பலநீ காட்டிப் படுப்பாயோ,*

தாவி வையம் கொண்ட* தடன் தாமரைகட்கே,*

கூவிக் கொள்ளும் காலம்* இன்னம் குறுகாதோ?           6.9.9

 

3440:

குறுகா நீளா* இறுதி கூடா எனையூழி,*

சிறுகா பெருகா* அளவில் இன்பம் சேர்ந்தாலும்,*

மறுகால் இன்றி மாயோன்* உனக்கே யாளாகும்,*

சிறுகாலத்தை உறுமோ* அந்தோ தெரியிலே?   6.9.10

 

3441:

தெரிதல் நினைதல்* எண்ணல் ஆகாத் திருமாலுக்கு,*

உரிய தொண்டர் தொண்டர்* தொண்டன் சடகோபன்,*

தெரியச் சொன்ன* ஓராயிரத்துள் இப்பத்தும்*

உரிய தொண்டராக்கும்* உலகம் உண்டாற்கே.  6.9.11

 

பத்தாம் திருமொழி

 

3442:##

உலகம் உண்ட பெருவாயா!*  உலப்பில் கீர்த்தி அம்மானே,*

நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி!*  நெடியாய்! அடியேன் ஆருயிரே,*

திலதம் உலகுக்காய் நின்ற*  திருவேங்கடத்து எம் பெருமானே,*

குலதொல் அடியேன் உனபாதம்*  கூடுமாறு கூறாயே.            6.10.1

 

3443:

கூறாய் நீறாய் நிலனாகிக்*  கொடுவல் அசுரர் குலமெல்லாம்*

சீறா எறியும் திருநேமி வலவா!* தெய்வக் கோமானே,*

சேறார் சுனைத்தாமரை செந்தீ மலரும்* திருவேங்கடத்தானே,*

ஆறா அன்பில் அடியேன்* உன் அடிசேர் வண்ணம் அருளாயே.            6.10.2

 

3444:

வண்ண மருள்கொள் அணிமேக வண்ணா!* மாய அம்மானே,*

எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே!* இமையோர் அதிபதியே,*

தெண்ணல் அருவி மணிபொன் முத்தலைக்கும்* திருவேங்கடத்தானே,*

அண்ணலே! உன் அடிசேர*  அடியேற்கு ஆவா வென்னாயே!            6.10.3

 

3445:

ஆவா என்னாது உலகத்தை  அலைக்கும்* அசுரர் வாணாள்மேல்,*

தீவாய் வாளி மழைபொழிந்த  சிலையா!* திருமாமகள் கேள்வா,*

தேவாசுரர்கள் முனிக்கணங்கள்  விரும்பும்* திருவேங்கடத்தானே,*

பூவார் கழல்கள் அருவினையேன்*  பொருந்துமாறு புணராயே.            6.10.4

 

3446:

புணரா நின்ற மரமேழ்*அன்றெய்த ஒருவில் வலவாவோ,*

புணரேய் நின்ற மரமிரண்டின்*  நடுவே போன முதல்வாவோ,*

திணரார் மேகம் எனக்களிறு  சேரும்* திருவேங்கடத்தானே,*

திணரார் சார்ங்கத்து உனபாதம்*  சேர்வ தடியே னெந்நாளே?            6.10.5

 

3447:

`எந்நாளே நாம் மண்ணளந்த*  இணைத் தாமரைகள் காண்பதற்கென்று,*

எந்நாளும் நின்று இமையோர்கள்  ஏத்தி* இறைஞ்சி இனமினமாய்,*

மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும்* திருவேங்கடத்தானே,*

மெய்ந்நான் எய்தி எந்நாள்* உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?            6.10.6

 

3448:

அடியேன் மேவி அமர்கின்ற  அமுதே!* இமையோர் அதிபதியே,*

கொடியா அடுபுள் உடையானே!*  கோலக் கனிவாய்ப் பெருமானே,*

செடியார் வினைகள் தீர்மருந்தே!*  திருவேங்கடத்து எம்பெருமானே,*

நொடியார் பொழுதும் உனபாதம்*  காண நோலா தாற்றேனே.            6.10.7

 

3449:

நோலாதாற்றேன் உனபாதம்*  காண வென்று நுண்ணுணர்வின்,*

நீலார் கண்டத் தம்மானும்*  நிறைநான்முகனும் இந்திரனும்,*

சேலேய் கண்ணார் பலர்சூழ  விரும்பும்* திருவேங்கடத்தானே,*

மாலாய் மயக்கி அடியேன்பால்*  வந்தாய் போல வாராயே.            6.10.8

 

3450:

வந்தாய் போலே வாராதாய்!*  வாராதாய்போல் வருவானே,*

செந்தாமரைக்கண் செங்கனிவாய்*  நால்தோளமுதே! எனதுயிரே,*

சிந்தா மணிகள் பகரல்லைப்  பகல்செய்* திருவேங்கடத்தானே,*

அந்தோ! அடியேன் உன்பாதம்*  அகலகில்லேன் இறையுமே.            6.10.9

 

3451:##

அகல கில்லேன் இறையும் என்று*அலர்மேல் மங்கை உறைமார்பா,*

நிகரில் புகழாய்! உலகமூன்று உடையாய்!* என்னை ஆள்வானே,*

நிகரில் அமரர் முனிக்கணங்கள்  விரும்பும்* திருவேங்கடத்தானே*

புகல் ஒன்றில்லா அடியேன்* உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.            6.10.10

 

3452:##

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து* அடியீர்!  வாழ்மின்என்றென்றருள் கொடுக்கும்*

படிக்கேழ் இல்லாப் பெருமானைப்*  பழனக் குருகூர்ச் சடகோபன்,*

முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்*  திருவேங்கடத்துக்கு இவைபத்தும்,*

பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து* பெரிய வானுள் நிலாவுவரே.            6.10.11