ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – ஐந்தாம் பத்து – இரண்டாம் திருமொழி
| 1358 | தாம்தம் பெருமை யறியார், தூது வேந்தர்க் காய வேந்த ரூர்போல், காந்தள் விரல்மென் கலைநன் மடவார், கூந்தல் கமழும் கூட லூரே |
2.1 |
| 1359 | செறும்திண் திமிலே றுடைய, பின்னை பெறும்தண் கோலம் பெற்றா ரூர்ப்போல், நறுந்தண் தீம் தே னுண்ட வண்டு, குறிஞ்சி பாடும் கூட லூரே |
2.2 |
| 1360 | பிள்ளை யுருவாய்த் தயிருண்டு, அடியேன் உள்ளம் புகுந்த வொருவ ரூர்போல், கள்ள நாரை வயலுள், கயல்மீன் கொள்ளை கொள்ளும் கூட லூரே |
2.3 |
| 1361 | கூற்றே ருருவின் குறளாய், நிலநீர் ஏற்றா னெந்தை பெருமா னூர்போல், சேற்றே ருழுவர் கோதைப் போதூண், கோல்தேன் முரலும் கூட லூரே |
2.4 |
| 1362 | தொண்டர் பரவச் சுடர்சென் றணவ, அண்டத் தமரும் அடிக ளூர்போல், வண்ட லலையுள் கெண்டை மிளிர, கொண்ட லதிரும் கூட லூரே |
2.5 |
| 1363 | தக்கன் வேள்வி தகர்த்த தலைவன், துக்கம் துடைத்த துணைவ ரூர்போல், எக்க லிடுநுண் மணல்மேல், எங்கும் கொக்கின் பழம்வீழ் கூட லூரே |
2.6 |
| 1364 | கருந்தண் கடலும் மலையு முலகும், அருந்தும் அடிகள் அமரு மூர்போல், பெருந்தண் முல்லைப் பிள்ளை யோடி, குருந்தம் தழுவும் கூட லூரே |
2.7 |
| 1365 | கலைவாழ் பிணையோ டணையும், திருநீர் மலைவா ழெந்தை மருவு மூர்போல், இலைதாழ் தெங்கின் மேல்நின்று, இளநீர்க் குலைதாழ் கிடங்கின் கூட லூரே |
2.8 |
| 1366 | பெருகு காத லடியேன் உள்ளம், உருகப் புகுந்த வொருவ ரூர்போல், அருகு கைதை மலர, கெண்டை குருகென் றஞ்சும் கூட லூரே |
2.9 |
| 1367 | காவிப் பெருநீர் வண்ணன், கண்ணன் மேவித் திகழும் கூட லூர்மேல், கோவைத் தமிழால் கலியன் சொன்ன, பாவைப் பாடப் பாவம் போமே |
2.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

