ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – ஐந்தாம் பத்து – ஒன்பதாம் திருமொழி
| 1428 | கையிலங் காழி சங்கன் கருமுகில் திருநி றத்தன், பொய்யிலன் மெய்யன் தந்தாள் அடைவரே லடிமை யாக்கும், செய்யலர் கமல மோங்கு செறிபொழில் தென்தி ருப்பேர் பையர வணையான் நாமம் பரவிநா னுய்ந்த வாறே |
9.1 |
| 1429 | வங்கமார் கடல்க ளேழும் மலையும்வா னகமும் மற்றும், அங்கண்மா ஞால மெல்லாம் அமுதுசெய் துமிழ்ந்த எந்தை, திங்கள்மா முகில்அ ணவு செறிபொழில் தெந்தி ருப்பேர், எங்கள்மா லிறைவன் நாமம் ஏத்திநா னுய்ந்த வாறே |
9.2 |
| 1430 | ஒருவனை யுந்திப் பூமேல் ஓங்குவித் தாகந் தன்னால், ஒருவனைச் சாபம் நீக்கி உம்பராள் , என்று விட்டான், பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெருநகர் அரவ ணைமேல் கருவரை வண்ணன் தென்பேர் கருதிநா னுய்ந்த வாறே |
9.3 |
| 1431 | ஊனமர் தலையொன் றேந்தி உலகெலாம் திரியு மீசன் ஈனமர் சாபம் நீக்காய், என்னவொண் புனலை யீந்தான், தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறிவயல் தென்தி ருப்பேர், வானவர் தலைவன் நாமம் வாழ்த்திநா னுய்ந்த வாறே |
9.4 |
| 1432 | வக்கரன் வாய்முன் கீண்ட மாயவனே என்று வானேர் புக்கு, அரண் தந்த ருள்வாய், என்னப்பொன் னாகத் தானை, நக்கரி யுருவ மாகி நகங்கிளர்ந் திடந்து கந்த, சக்கரச் செல்வன் தென்பேர்த் தலைவன்தா ளடைந்துய்ந் தேனே |
9.5 |
| 1433 | விலங்கலால் கடல டைத்து விளங்கிழை பொருட்டு, வில்லால், இலங்கைமா நகர்க்கி றைவன் இருபது புயம்து ணித்தான், நலங்கொள்நான் மறைவல் லார்கள் ஒத்தொலி யேத்தக் கேட்டு மலங்குபாய் வயல்தி ருப்பேர் மருவிநான் வாழ்ந்த வாறே |
9.6 |
| 1434 | வெண்ணெய்தா னமுது செய்ய வெகுண்டுமத் தாய்ச்சி யோச்சி, கண்ணியர் குறுங்க யிற்றால் கட்டவெட் டென்றி ருந்தான், திண்ணமா மதிள்கள் சூழ்ந்த தென்திருப் பேருள், வேலை வண்ணனார் நாமம் நாளும் வாய்மொழிந் துய்ந்த வாறே |
9.7 |
| 1435 | அம்பொனா ருலக மேழும் அறியஆய்ப் பாடி தன்னுள், கொம்பனார் பின்னை கோலம் கூடுதற் கேறு கொன்றான், செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென்திருப் பேருள் மேவும், எம்பிரான் நாமம் நாளும் ஏத்திநா னுய்ந்த வாறே |
9.8 |
| 1436 | நால்வகை வேத மைந்து வேள்வியா றங்கம் வல்லார், மேலைவா னவரின் மிக்க வேதிய ராதி காலம், சேலுகள் வயல்தி ருப்பேர்ச் செங்கண்மா லோடும் வாழ்வார், சீலமா தவத்தர் சிந்தை யாளியென் சிந்தை யானே |
9.9 |
| 1437 | வண்டறை பொழில்தி ருப்பேர் வரியர வணையில் பள்ளி கொண்டுறை கின்ற மாலைக் கொடிமதிள் மாட மங்கை, திண்டிறல் தோள்க லியன் செஞ்சொலால் மொழிந்த மாலை, கொண்டிவை பாடி யாடக் கூடுவார் நீள்வி சும்பே |
9.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

