ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – நான்காம் பத்து – ஒன்பதாம் திருமொழி
| 1328 | நும்மைத் தொழுதோம் நுந்தம் பணிசெய் திருக்கும்நும்மடியோம், இம்மைக் கின்பம் பெற்றோ மெந்தாய் இந்தளூரீரே, எம்மைக் கடிதாக் கரும மருளி ஆவா வென்றிரங்கி, நம்மை யொருகால் காட்டி நடந்தால் நாங்க ளுய்யோமே? |
9.1 |
| 1329 | சிந்தை தன்னுள் நீங்கா திருந்த திருவே மருவினிய மைந்தா, அந்த ணாலி மாலே. சோலை மழகளிறே நந்தா விளக்கின் சுடரே. நறையூர் நின்ற நம்பீ, என் எந்தாய். இந்த ளூராய். அடியேற் கிறையு மிரங்காயே. |
9.2 |
| 1330 | பேசு கின்ற திதுவே வைய மீரடி யாலளந்த, மூசி வண்டு முரலும கண்ணி முடியீர், உம்மைக்காணும் ஆசை யென்னும் கடலில் வீழ்ந்திங் கயர்ந்தோம், அயலாரும் ஏசு கின்ற திதுவே காணும் இந்த ளூரீரே. |
9.3 |
| 1331 | ஆசை வழுவா தேத்து எமக்கிங் கிழுக்காய்த்து, அடியோர்க்குத் தேச மறிய வுமக்கே யாளாய்த் திரிகின் றோமுக்கு, காசி னொளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான் வாசி வல்லீர் இந்த ளூரீர் வாழ்ந்தே போம்நீரே. |
9.4 |
| 1332 | தீயெம் பெருமான் நீரெம் பெருமான் திசையு மிருநிலனு மாய், எம் பெருமா னாகி நின்றா லடியோம் காணோமால், தாயெம் பெருமான் தந்தை தந்தை யாவீர், அடியேமுக்- கேயெம் பெருமா னல்லீ ரோநீர் இந்த ளூரீரே. |
9.5 |
| 1333 | சொல்லா தொழிய கில்லேன் அறிந்த சொல்லில், நும்மடியார், எல்லா ரோடு மொக்க வெண்ணி யிருந்தீ ரடியேனை, நல்ல ரறிவீர் தீயா ரறிவீர் நமக்கிவ் வுலகத்தில், எல்லா மறிவீ ரீதே யறியீர் இந்த ளூரீரே. |
9.6 |
| 1334 | மாட்டீ ரானீர் பணிநீர் கொள்ள எம்மைப் பணியறியா விட்டீர், இதனை வேறே சொன்னோம் இந்த ளூரீரே, காட்டீ ரானீர் நுந்த மடிக்கள் காட்டில் உமக்கிந்த, நாட்டே வந்து தொண்டரான நாங்க ளுய்யோமே |
9.7 |
| 1335 | முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற, பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ண மெண்ணுங்கால், பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையுந் திருமேனி, இன்ன வண்ண மென்று காட்டீர் இந்த ளூரீரே. |
9.8 |
| 1336 | எந்தை தந்தை தம்மா னென்றென் றெமெரே றெமரெ ழேளவும், வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால், சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி, இந்த வண்ண மென்று காட்டீர் இந்த ளூரீரே |
9.9 |
| 1337 | ஏரார் பொழில்சூழ் இந்த ளூரி லெந்தை பெருமானை, காரார் புறவில் மங்கை வேந்தன் கலிய னொலிசெய்த, சீரா ரின்சொல் மாலை கற்றுத் திரிவா ருலகத்து, ஆரா ரவரே யமரர்க் கென்று மமர ராவாரே |
9.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

