நாதமுனிகள் அருளிச் செய்தது
குருமுக மனதீத்ய ப்ராஹ வேதான ஶேஷாந்
நரபதி பரிக்லுப்தம் ஶíல்க மாதாது காம:
ஶ்வஶுர மமரவந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜகுலதிலகம்தம் விஷ்ணுசித்தம் நமாமி||
பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை
மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால்*
சொன்னார் கழற்கமலம் சூடினோம்* – முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம்,* கீழ்மையினிற்சேரும்-
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து
பாண்டியன்கொண்டாடப் பட்டர்பிரான்வந்தானென்று*
ஈண்டியசங்கம் எடுத்தூத* – வேண்டிய
வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான்*
பாதங்கள்யாமுடையபற்று.

