நாச்சியார் திருமொழித் தனியன்கள்
திருக்கண்ணமங்கையாண்டான் அருளியது
| அல்லிநாள் தாமரை மேலாரணங்கினின்துணைவி*
மல்லி நாடாண்டமடமயில் – மெல்லியலாள்* ஆயர்க்குலவேந்தனாகத்தாள்* தென்புதுவை வேயர் பயந்த விளக்கு. |
| கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும் சீலத்தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல் மாலத் தொடைதென்னரங்கருக் கீயும் மதிப்புடைய சோலைக் கிளி,அவள் தூயநற்பாதம் துணைநமக்கே. |

