பெரியாழ்வார் அருளிச்செய்த
நான்காம் பத்து – இரண்டாம் திருமொழி- அலம்பாவெருட்டா
(திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு)
| 338 | அலம்பாவெருட்டாக்கொன்று திரியும்அரக்கரை குலம்பாழ்படுத்துக் குலவிளக்காய்நின்றகோன்மலை சிலம்பார்க்கவந்து தெய்வமகளிர்களாடும்சீர் சிலம்பாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. |
1 |
| 339 | வல்லாளன்தோளும் வாளரக்கன்முடியும் தங்கை பொல்லாதமூக்கும் போக்குவித்தான்பொருந்தும்மலை எல்லாவிடத்திலும் எங்கும்பரந்துபல்லாண்டொலி செல்லாநிற்கும்சீர்த் தென்திருமாலிருஞ்சோலையே. |
2 |
| 340 | தக்கார்மிக்கார்களைச் சஞ்சலம்செய்யும்சலவரை தெக்காநெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை எக்காலமும்சென்று சேவித்திருக்கும்அடியரை அக்கானெறியைமாற்றும் தண்திருமாலிருஞ்சோலையே. |
3 |
| 341 | ஆனாயர்கூடி அமைத்தவிழவை அமரர்தம் கோனார்க்கொழியக் கோவர்த்தனத்துச்செய்தான்மலை வானாட்டில்நின்று மாமலர்க்கற்பகத்தொத்திழி தேனாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. |
4 |
| 342 | ஒருவாரணம் பணிகொண்டவன்பொய்கையில் கஞ்சன்தன் ஒருவாரணம் உயிருண்டவன்சென்றுறையும்மலை கருவாரணம் தன்பிடிதுறந்தோட கடல்வண்ணன் திருவாணைகூறத்திரியும் தண்திருமாலிருஞ்சோலையே. |
5 |
| 343 | ஏவிற்றுச்செய்வான் ஏன்றெதிர்ந்துவந்தமல்லரை சாவத்தகர்த்த சாந்தணிதோள்சதுரன்மலை ஆவத்தனமென்று அமரர்களும்நன்முனிவரும் சேவித்திருக்கும் தென்திருமாலிருஞ்சோலையே. |
6 |
| 344 | மன்னர்மறுக மைத்துனன்மார்க்குஒருதேரின்மேல் முன்னங்குநின்று மோழையெழுவித்தவன்மலை கொன்னவில்கூர்வேற்கோன் நெடுமாறன்தென்கூடற்கோன் தென்னன்கொண்டாடும் தென்திருமாலிருஞ்சோலையே. |
7 |
| 345 | குறுகாதமன்னரைக் கூடுகலக்கி வெங்கானிடைச் சிறுகால்நெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை அறுகால்வரிவண்டுகள் ஆயிரநாமம்சொல்லி சிறுகாலைப்பாடும் தென்திருமாலிருஞ்சோலையே. |
8 |
| 346 | சிந்தப்புடைத்துச் செங்குருதிகொண்டு பூதங்கள் அந்திப்பலிகொடுத்து ஆவத்தனம்செய்அப்பன்மலை இந்திரகோபங்கள் எம்பெருமான்கனிவாயொப்பான் சிந்தும்புறவில் தென்திருமாலிருஞ்சோலையே. |
9 |
| 347 | எட்டுத்திசையும் எண்ணிறந்தபெருந்தேவிமார் விட்டுவிளங்க வீற்றிருந்தவிமலன்மலை பட்டிப்பிடிகள் பகடுறிஞ்சிச்சென்று மாலைவாய்த் தெட்டித்திளைக்கும் தென்திருமாலிருஞ்சோலையே. |
10 |
| 348 | மருதப்பொழிலணி மாலிருஞ்சோலைமலைதன்னை கருதியுறைகின்ற கார்க்கடல்வண்ணனம்மான்தன்னை விரதம்கொண்டேத்தும் வில்லிபுத்தூர்விட்டுசித்தன்சொல் கருதியுரைப்பவர் கண்ணன்கழலிணைகாண்பார்களே. |
11 |

