திருவிருத்தம்


திருவிருத்தம் தனியன்
கிடாம்பியாச்சான் அருளிச்செய்தது
கருவிருத்தக்குழி நீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து,*

ஒருவிருத்தம்புக் குழலுறுவீர்! உயிரின் பொருள்கட்கு,*

ஒருவிருத்தம் புகுதாமல் குருகையர் கோனுரைத்த,*

திருவிருத்தத்து ஓரடி கற்றிரீர் திரு நாட்டகத்தே.

ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவிருத்தம்

2478:##

பொய் நின்ற ஞானமும்* பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்,*

இந்நின்ற நீர்மை* இனியாமுறாமை,* உயிரளிப்பான்-

எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா!*

மெய்நின்று கேட்டருளாய்,* அடியேன் செய்யும் விண்ணப்பமே. 1

 

2479:

செழுநீர்த் தடத்து* கயல்மிளிர்ந்தாலொப்ப,* சேயரிக்கண்-

அழுநீர் துளும்ப அலமருகின்றன,* வாழியரோ-

முழுநீர் முகில்வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்*

தொழு நீரிணையடிக்கே,* அன்பு சூட்டிய சூழ்குழற்கே. 2

 

2480:

குழல் கோவலர் மடப் பாவையும்* மண்மகளும்* திருவும்,-

நிழல்போல் வனர்கண்டு* நிற்குங்கொல் மீளுங்கொல்,* தண்ணந்துழாய்-

அழல் போல் அடும் சக்கரத்து அண்ணல் விண்ணோர் தொழக்கடவும்*

தழல்போல் சினத்த,* அப் புள்ளின்பின் போன தனிநெஞ்சமே. 3

 

2481:

தனிநெஞ்சம் முன்னவர்* புள்ளே கவர்ந்தது,* தண்ணந்துழாய்க்கு-

இனிநெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம்,* நீ நடுவே-

முனிவஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடுதுழாய்*

பனிநஞ்ச மாருதமே,* எம்மதாவி பனிப்பியல்வே? 4

 

2482:

பனிப்பியல்வாக* உடைய தண்வாடை,* இக்காலம் இவ்வூர்

பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரிவீசும்,* அந் தண்ணந்துழாய்-

பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக்கொலாம்?*

பனிப்புயல் வண்ணண்,* செங்கோல் ஒரு நான்று தடாவியதே? 5

 

2483:

தடாவிய அம்பும்* முரிந்த சிலைகளும் போகவிட்டு,*

கடாயின கொண்டொல்கும் வல்லியீதேனும்,* அசுரர்மங்கக்-

கடாவிய வேகப் பறவையின் பாகன் மதனசெங்கோல்*

நடாவிய கூற்றங்கண்டீர்,* உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே. 6

 

2484:

ஞாலம் பனிப்பச் செறித்து,* நன்னீரிட்டுக் கால்சிதைந்து*

நீலவல்லேறு பொராநின்ற வானம் இது,* திருமால்-

கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு* தண்பூங்-

காலங்கொலோ அறியேன்,* வினையாட்டியேன் காண்கின்றவே? 7

 

2485:

காண்கின்றனகளும்* கேட்கின்றனகளும் காணில்,* இந்நாள்-

பாண்குன்ற நாடர் பயில்கின்றன,* இதெல்லாம் அறிந்தோம்-

மாண்குன்றம் ஏந்தி தண் மாமலை வேங்கடத்து உம்பர்நம்பும்*

சேண்குன்றம் சென்று,* பொருள்படைப்பான் கற்ற திண்ணனவே. 8

 

2486:

திண்பூஞ் சுடர்நுதி* நேமியஞ் செல்வர்,* விண்ணாடனைய-

வண்பூ மணிவல்லி யாரே பிரிபவர் தாம்,* இவையோ-

கண்பூங் கமலம் கருஞ்சுடராடி வெண்முத்தரும்பி*

வண்பூங் குவளை,* மடமான் விழிக்கின்ற மாயிதழே. 9

 

2487:

மாயோன்* வடதிரு வேங்கட நாட,* வல்லிக்கொடிகாள்!-

நோயோ உரைக்கிலும்* கேட்கின்றிலீர் உரையீர்* நுமது-

வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்-

ஆயோ?* அடும் தொண்டையோ,* அறையோ இதறிவரிதே. 10

 

2488:

அரியன யாம் இன்று காண்கின்றன,* கண்ணன் விண்ணனையாய்!-

பெரியன காதம்* பொருட்கோ பிரிவென,* ஞாலமெய்தற்கு-

உரியன வெண்முத்தும் பைம்பொன்னும் ஏந்தி ஓரோகுடங்கைப்*

பெரியென கெண்டைக் குலம்,*இவையோ வந்து பேர்கின்றவே? 11

 

2489:

பேர்கின்றது மணி மாமை,* பிறங்கியள்ளல் பயலை*

ஊர்கின்றது கங்குல் ஊழிகளே,* இதெல்லாமினவே-

ஈர்கின்ற சக்கரத்து எம்பெருமான் கண்ணன் தண்ணந்துழாய்*

சார்கின்ற நன்னெஞ்சினார்,* தந்து போன தனிவளமே. 12

 

2490

தனிவளர் செங்கோல் நடாவு,* தழல்வாய் அரசவியப்-

பனிவளர் செங்கோல் இருள்வீற்றிருந்தது,* பார்முழுதும்-

துனிவளர் காதல் துழாயைத் துழாவுதண் வாடைதடிந்து*

இனிவளை காப்பவர் ஆர்,* எனை ஊழிகள் ஈர்வனவே. 13

 

2491:

ஈர்வன வேலும் அஞ்சேலும்,* உயிர்மேல் மிளிர்ந்திவையோ*

பேர்வனவோ வல்ல* தெய்வ நல்வேள்கணை,* பேரொளியே-

சோர்வன நீலச் சுடர்விடும் மேனி அம்மான்* விசும்பூர்-

தேர்வன,* தெய்வ மன்னீர கண்ணோ? இச் செழுங்கயலே? 14

 

2492:

`கயலோ நுமகண்கள்?’ என்று* களிறு வினவிநிற்றீர்,*

அயலோர் அறியிலும் ஈதென்ன வார்த்தை,* கடல்கவர்ந்த-

புயலோடு உலாம்கொண்டல் வண்ணன் புன வேங்கடத்து எம்மொடும்*

பயலோவிலீர்,* கொல்லைக் காக்கின்ற நாளும் பலபலவே. 15

 

2493:

பலபல ஊழிகள் ஆயிடும்,* அன்றியோர் நாழிகையைப்*

பலபல கூறிட்ட கூறாயிடும்,* கண்ணன் விண்ணனையாய்!*

பலபல நாளன்பர் கூடிலும் நீங்கிலும் யாம்மெலிதும்*

பலபல சூழலுடைத்து,* அம்ம! வாழி இப் பாயிருளே. 16

 

2494:

இருள்விரிந்தால் அன்ன* மாநீர்த் திரைகொண்டு வாழியரோ*

இருள்பிரிந்தார் அன்பர் தேர்வழி தூரல்,* அரவணைமேல்-

இருள்விரி நீலக் கருநாயிறுசுடர் கால்வதுபோல்*

இருள்விரி சோதிப்,* பெருமான் உறையும் எறிகடலே! 17

 

2495:

கடல்கொண்டு எழுந்தது வானம்* அவ்வானத்தை அன்றிச்சென்று*

கடல்கொண்டு எழுந்த அதனால்இது,* கண்ணன் மண்ணும்விண்ணும்-

கடல்கொண்டு எழுந்த அக்காலங்கொலோ! புயற் காலங்கொலோ!*

கடல்கொண்ட கண்ணீர்,* அருவி செய்யா நிற்கும் காரிகையே. 18

 

2496:

காரிகையார் நிறை காப்பவர் யாரென்று,* கார்கொண்டு இன்னே-

மாரிகை ஏறி* அறையிடும் காலத்தும்,* வாழியரோ-

சாரிகைப் புள்ளர் அந்தண்ணந் துழாயிறை கூயருளார்*

சேரிகையேறும்,* பழியாய் விளைந்தது என் சின்மொழிக்கே. 19

 

2497:

சின்மொழி நோயோ* கழிபெருந்தெய்வம்,* இந் நோயினதென்று-

இன்மொழி கேட்கும்* இளந்தெய்வம் அன்றிது* வேல! நில்நீ-

என்மொழி கேண்மின் என் அம்மனைமீர்! உலகேழும் உண்டான்*

சொல்மொழி, மாலை* அந் தண்ணந்துழாய் கொண்டு சூட்டுமினே. 20

 

2498:

சூட்டுநன் மாலைகள்* தூயனவேந்தி,* விண்ணோர்கள் நன்னீர்-

ஆட்டி* அந் தூபம் தராநிற்கவே அங்கு,* ஓர் மாயையினால்-

ஈட்டிய வெண்ணை தொடுவுண்ணப் போந்திமிலேற்று வன்கூன்*

கோட்டிடை ஆடினை கூத்து* அடலாயர் தம் கொம்பினுக்கே. 21

 

2499:

கொம்பார் தழைகை சிறுநாணெறிவிலம்* வேட்டைகொண்டாட்டு-

அம்பார் களிறு வினவுவது ஐயர்* புள்ðரும் கள்வர்-

தம்பார் அகத்து என்று மாடா தனதம்மில் கூடாதன*

வம்பார் வினாச்சொல்லவோ,* எம்மை வைத்தது இவ் வான்புனத்தே? 22

 

2500:

புனமோ? புனத்தயலே * வழி போகும் அருவினையேன்*

மனமோ? மகளிர் நுங்காவல் சொல்லீர்,* புண்டரீகத்து அங்கேழ்-

வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாடு அமரும்* தெய்வத்து-

இனமோர் அனையீர்களாய்,* இவையோ நும் இயல்வுகளே? 23

 

2501:

இயல்வாயின வஞ்ச நோய்கொண்டு உலாவும்,* ஓரோகுடங்கைக்-

கயல் பாய்வன* பெரு நீர்க்கண்கள் தம்மொடும்,* குன்றமொன்றால்-

புயல்வாயின நிரை காத்த புள்ðர்தி கள்ðரும் துழாய்க்*

கொயல்வாய் மலர்மேல்,* மனத்தொடு என்னாங்கொல் எம் கோல்வளைக்கே? 24

 

2502:

எங்கோல் வளை முதலா,* கண்ணன் மண்ணும் விண்ணும்அளிக்கும்*

செங்கோல் வளைவு விளைவிக்குமால்,* திறல் சேரமரர்-

தங்கோனுடைய தங்கோன் உம்பர் எல்லாயவர்க்கும் தங்கோன்*

நங்கோன் உகக்கும் துழாய்,* என்செய்யாது இனி நானிலத்தே ? 25

 

2503:

நானிலம் வாய்க்கொண்டு* நன்னீரறமென்று கோதுகொண்ட,*

வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ் பாலை,* கடந்தபொன்னே!-

கால்நிலந் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃ காவுது* அம்பூந்-

தேனிளஞ் சோலை அப்பாலது,* எப்பாலைக்கும் சேமத்ததே. 26

 

2504:

சேமம் செங்கோன் அருளே,* செருவாரும் நட்பாகுவரென்று-

ஏமம் பெற வையம்* சொல்லும் மெய்யே,* பண்டெல்லாம் அறைகூய்-

யாமங்கள் தோறெரி வீசும் நங்கண்ணன் அந் தண்ணந்துழாய்த்*

தாமம் புனைய,* அவ் வாடை ஈதோவந்து தண்ணென்றதே. 27

 

2505:

தண்ணந் துழாய்* வளை கொள்வது யாமிழப்போம்,* நடுவே-

வண்ணம் துழாவ* ஓர் வாடையுலாவும்,* வள்வாயலகால்-

புள்நந்துழாமே பொருநீர்த்திருவரங்கா! அருளாய்*

எண்ணந் துழாவுமிடத்து,* உளவோபண்டும் இன்னன்னவே? 28

 

2506:

இன்னன்ன தூது எம்மை* ஆளற்றப் பட்டிரந்தாள் இவளென்று*

அன்னன்ன சொல்லா* பெடையொடும் போய்வரும்,* நீலமுண்ட-

மின்னன்ன மேனிப் பெருமானுலகில் பெண் தூதுசெல்லா*

அன்னன்ன நீர்மைகொலோ,* குடிச்சீர்மையில் அன்னங்களே ! 29

 

2507:

அன்னம் செல்வீரும் * வண்டானம் செல்வீரும் தொழுதிரந்தேன்*

முன்னம் செல்வீர்கள் மறவேன்மினோ* கண்ணன் வைகுந்தேனாடு-

என்னெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி* அவரிடைநீர்-

இன்னம் செல்லீரோ,* இதுவோ தகவென்று இசைமின்களே ! 30

 

2508:

இசைமின்கள் தூதென்று* இசைத்தால் இசையிலம்,* என்தலைமேல்-

அசைமின்கள் என்றால் அசையிங்கொலாம்,* அம்பொன் மாமணிகள்-

திசைமின் மிளிரும் திருவேங்கடத்துவன் தாள்* சிமயம்

மிசை* மின் மிளிரியப் போவான் வழிக் கொண்ட மேகங்களே ! 31

 

2509:

மேகங்களோ! உரையீர்,* திருமால் திருமேனி ஒக்கும்*

யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர்,* உயிரளிப்பான்-

மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர்கள் சுமந்து* நுந்தம்-

ஆகங்கள் நோவ,* வருந்தும் தவமாம் அருள்பெற்றதே? 32

 

2510:

அருளார் திருச் சக்கரத்தால்* அகல்விசும்பும் நிலனும்*

இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர்,* ஈங்கோர்பெண்பால்-

பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்றெண்ணோ?*

தெருளோம் அரவணையீர்,* இவள் மாமை சிதைக்கின்றதே. 33

 

2511:

சிதைக்கின்றது ஆழி* என்று ஆழியைச் சீறி,* தன் சீறடியால்-

உதைக்கின்ற நாயகன்* தன்னொடும் மாலே,* உனதுதண்தார்-

ததைக்கின்ற தண்ணந் துழாயணிவான் அதுவே மனமாய்ப்*

பதைக்கின்ற மாதின் திறத்து* அறியேன் செயற் பாலதுவே. 34

 

2512:

பால்வாய்ப் பிறைப்பிள்ளை* ஒக்கலைக் கொண்டு,* பகலிழந்த-

மேல்பால் திசைப்பெண் புலம்புறு மாலை,* உலகளந்த-

மால்பால் துழாய்க்கும் மனமுடையார்க்கும் நல்கிற்றையெல்லாம்*

சோல்வான் புகுந்து,* இதுவோர் பனி வாடை துழாகின்றதே. 35

 

2513:

துழா நெடுஞ்சூழிருள் என்று,* தன் தண்தாரது பெயரா-

எழா நெடு ஊழி* எழுந்த இக்காலத்தும்,* ஈங்கிவளோ-

வழாநெடுந் துன்பத்தள் என்றிரங்கார் அம்மேனா!* இலங்கைக்-

குழா நெடு மாடம்,* இடித்தபிரானார் கொடுமைகளே ! 36

 

2514:

கொடுங்கால் சிலையர் * நிரைகோளுழவர், கொலையில்வெய்ய*

கடுங்கால் இளைஞர் துடிபடும் கவ்வைத்து,* அருவினையேன்-

நெடுங்காலமும் கண்ணன் நீள்மலர்ப்பாதம் பரவிப் பெற்ற*

தொடுங்கால் ஒசியும் இடை,* இளமாஞ்சென்ற சூழ்கடமே. 37

 

2515:

கடமாயினகள் கழித்து,* தன்கால் வன்மையால் பலநாள்*

தடமாயின புக்கு* நீர்நிலை நின்ற தவமிதுகொல்,*

குடமாடி இம்மண்ணும் விண்ணும் குலுங்க உலகளந்து*

நடமாடிய பெருமான்,* உருவொத்தன நீலங்களே. 38

 

2516:

நீலத் தடவரை மேல்* புண்டரீக நெடுந்தடங்கள்-

போல,* பொலிந்து எமக்கு எல்லாவிடத்தவும்,* பொங்குமுந்நீர்-

ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர்பிரான்*

கோலம் கரிய பிரான்,* எம்பிரான் கண்ணின் கோலங்களே. 39

 

2517:

கோலப் பகல் களிறொன்று கல்புய்ய,* குழாம்விரிந்த-

நீலக்கங்குல் களிறெல்லாம் நிறைந்தன,* நேரிழையீர் !-

ஞாலப்பொன் மாதின் மணாளன் துழாய்நங்கள் சூழ்குழற்கே*

ஏலப் புனைந்து என்னைமார்,* எம்மை நோக்குவது என்றுகொலோ! 40

 

2518:

என்றும் புன்வாடை இதுகண்டறிதும்,* இவ்வாறு வெம்மை-

ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்,* ஓங்கசுரர்-

பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந்நாள்*

மன்றில் நிறைபழி தூற்றி,* நின்று என்னை வன்காற்று அடுமே. 41

 

2519:

வன்காற்று அறைய * ஒருங்கே மறிந்து கிடந்தலர்ந்த,*

மென்கால் கமலத் தடம்போல் பொலிந்தன,* மண்ணும்விண்ணும்-

என்காற்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்துவான் நிமிர்ந்த*

தன்கால் பணிந்த என்பால்,* எம்பிரானது அடங்கண்களே. 42

 

2520:

கண்ணும் செந்தாமரை கையும் * அவைஅடியோ அவையே,*

வண்ணம் கரியதோர் மால்வரை போன்று,* மதிவிகற்பால்-

விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்குமற்று எப்பால்யவர்க்கும்*

எண்ணும் இடத்ததுவோ,* எம்பிரானது எழில்நிறமே? 43

 

2521:

நியமுயர் கோலமும் * பேரும் உருவும் இவையிவையென்று,*

அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும்,* அங்கங்கெல்லாம்-

உறவுயர் ஞானச் சுடர்விளக்காய் நின்றதன்றி ஒன்றும்*

பெற முயன்றார் இல்லையால்,* எம்பிரான் தன் பெருமையையே. 44

 

2522:

பெருங்கேழலார் தம்* பெருங்கண் மலர்ப் புண்டரீகம்* நம்மேல்-

ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம்,* ஒருவர்நம்போல்-

வரும் கேழ்பவர் உளரே?தொல்லை வாழியம் சூழ்பிறப்பும்*

மருங்கே வரப்பெறுமே,* சொல்லு வாழி மடநெஞ்சமே! 45

 

2523:

மடநெஞ்சம் என்றும் தமதென்றும்,* ஓர் கருமம் கருதி,-

விடநெஞ்சை உற்றார் விடவோ அமையும்,* அப் பொன்பெயரோன்-

தடநெஞ்சம் கீண்ட பிரானார் தமதடிக் கீழ்விடப்* போய்த்-

திடநெஞ்சமாய்,* எம்மை நீத்து இன்று தாறும் திரிகின்றதே. 46

 

2524:

திரிகின்றது வட மாருதம்,* திங்கள் வெந்தீ முகந்து*

சொரிகின்றது அதுவும் அது* கண்ணன் விண்ணூர் தொழவே-

சரிகின்றது சங்கம் தண்ணந்துழாய்க்கு வண்ணம் பயலை*

விரிகின்றது முழு மெய்யும்,* என்னாங்கொல் என் மெல்லியற்கே? 47

 

2525:

மெல்லியல் ஆக்கைக் கிருமி,* குருவில் மிளிர்தந்து ஆங்கே*

செல்லிய செல்கைத்து உலகை என்காணும்,* என்னாலும் தன்னைச்-

சொல்லிய சூழல் திருமாலவன் கவி யாதுகற்றேன்?*

பல்லியின் சொல்லும் சொல்லா* கொள்வதோ உண்டு பண்டுபண்டே. 48

 

2526:

பண்டும் பலபல வீங்கிருள் காண்டும்,* இப் பாயிருள்போல்-

கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம்,* காளவண்ண-

வண்டுண் துழாய்ப் பெருமான் மதுசூதனன் தாமோதரன்*

உண்டும் உமிழ்ந்தும் கடாய,* மண்ணேர் அன்ன ஒண்ணுதலே! 49

 

2527:

ஒண்ணுதல் மாமை * ஒளிபயவாமை, விரைந்துநந்தேர்*

நண்ணுதல் வேண்டும்* வலவ! கடாகின்று,* தேன்நவின்ற-

விண்முதல் நாயகன் நீள்முடி வெண்முத்த வாசிகைத்தாய்*

மண்முதல் சேர்வுற்று,* அருவி செய்யாநிற்கும் மாமலைக்கே. 50

 

2528:

மலைகொண்டு மத்தா அரவால்* சுழற்றிய மாயப்பிரான்.*

அலைகண்டு கொண்ட அமுதம்கொள்ளாது கடல்,* பரதர்-

விலைகொண்டு தந்த சங்கம் இவை வேரித் துழாய்துணையாத்*

துலைகொண்டு தாயம் கிளர்ந்து,* கொள்வான் ஒத்தழைக்கின்றதே. 51

 

2529:

அழைக்கும் கருங்கடல்* வெண்திரைக்கைகொண்டு போய்,*அலர்வாய்-

மழைக்கண் மடந்தை அரவணையேற,* மண்மாதர் விண்வாய்-

அழைத்துப் புலம்பி முலைமலை மேல்நின்றும் ஆறுகளாய்*

மழைக் கண்ணனீர்,* திருமால் கொடியான் என்று வார்கின்றதே! 52

 

2530:

வாராய் இனமுலையாள் இவள்* வானோர் தலைமகனாம்,*

சீராயின தெய்வ நன்னோயிது,* தெய்வத் தண்ணந்துழாய்த்-

தாராயினும் தழை ஆயினும் தண் கொம்பதாயினும்* கீழ்-

வேராயினும்,* நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே. 53

 

2531:

வீசும் சிறகால் பறத்திர்,*விண்ணாடு நுங்கட்கு எளிது*

பேசும் படியன்ன பேசியும் போவது,* நெய்தொடுவுண்டு-

ஏசும் படியன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்*

மாசின் மலரடிக் கீழ்,* எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே 54

 

2532:

வண்டுகளோ! வம்மின்* நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ,*

உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்றுரைக்கியம்,* ஏனமொன்றாய்-

மண்துகளாடி வைகுந்த மன்னாள் குழல் வாய்விரைபோல்*

விண்டுகள் வாரும்,* மலருளவோ நும்வியலிடத்தே? 55

 

2533:

வியலிடம் உண்ட பிரானார்* விடுத்த திருவருளால்,*

உயலிடம் பெற்றுய்ந்தம் அஞ்சலம் தோழி,* ஓர் தண்தென்றல்வந்து-

அயலிடை யாரும் அறிந்திலர் அம்பூந்துழாயின் இன்தேன்*

புயலுடை நீர்மையினால்,* தடவிற்று என் புலன்கலனே. 56

 

2534:

புலக்குண்டல் அப்புண்டரீகத்த போர்க்கெண்டை,* வல்லியொன்றால்-

விலக்குண்டுல் ஆகின்று வேல்விழிக்கின்றன,* கண்ணன் கையால்-

மலக்குண்டு அமுதம் சுரந்த மறிகடல் போன்றவற்றால்*

கலக்குண்ட நான்று கண்டார்,* எம்மை யாரும் கழறலரே. 57

 

2535:

கழல்தலம் ஒன்றே நிலமுழுதாயிற்று,* ஒருகழல்போய்-

நிழல்தர* எல்லா விசும்பும் நிறைந்தது,* நீண்ட அண்டத்து-

உழறலர் ஞானச் சுடர்விளக்காய் உயர்ந்தோரை இல்லா*

அழறலர் தாமரைக் கண்ணன்,* என்னோ இங்கு அளக்கின்றதே? 58

 

2536:

அளப்பருந் தன்மைய ஊழியங்கங்குல்,* அந் தண்ணந்துழாய்க்கு-

உளப்பெருங் காதலின் நீளிய வாயுள,* ஓங்குமுந்நீர்-

வளப்பெரு நாடன் மதுசூதனன் என்னும் வல்வினையேன்*

தளப்பெரு நீள்முறுவல்,* செய்யவாய தடமுலையே. 59

 

2537:##

முலையோ முழுமுற்றும் போந்தில,* மொய்பூங் குழல்குறிய-

கலையோ அரையில்லை நாவோ குழறும்,* கடல்மண்ணெல்லாம்-

விலையோ என மிளிரும் கண் இவள் பரமே! * பெருமான்-

மலையோ* திரு வேங்கடமென்று கற்கின்ற வாசகமே? (2)  60

 

2538:

வாசகம் செய்வது நம்பரமே?,* தொல்லை வானவர்தம்-

நாயகன்* நாயகர் எல்லாம் தொழுமவன்,* ஞாலமுற்றும்-

வேயகம் ஆயினும் சோரா வகை* இரண்டே அடியால்-

தாயவன்,* ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே. 61

 

2539:

இறையோ இரக்கினும்* ஈங்கோர் பெண்பால்,* எனவும் இரங்காது,-

அறையோ! என* நின்றதிரும் கருங்கடல்,* ஈங்கு இவள்தன்-

நிறையோ இனி உன் திருவருளால் அன்றிக்* காப்பரிதால்-

முறையோ,* அரவணை மேல் பள்ளிகொண்ட முகில்வண்ணனே! 62

 

2540:

வண்ணம் சிவந்துள* வானாடமரும் குளிர்விழிய,*

தண்மென் கமலத் தடம்போல் பொலிந்தன,* தாமிவையோ-

கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல்செய்தேற்கு*

எண்ணம் புகுந்து,* அடியேனொடு இக்காலம் இருக்கின்றதே. 63

 

2541:

இருக்கார் மொழியால்* நெறியிழுக்காமை,* உலகளந்த-

திருத்தாளிணை நிலத் தேவர் வணங்குவர்,* யாமும் அவா-

ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனியின்மையின்*

கருக்காய் கடிப்பவர் போல்,* திருநாமச் சொல் கற்றனமே. 64

 

2542:

கற்றுப் பிணைமலர்க் கண்ணின் குலம்வென்று,* ஓரோ கருமம்-

உற்றுப் பயின்று செவியொடு உசாவி,* உலகமெல்லாம்-

முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திருவடிக்கீழ்*

உற்றும் உறாதும்,* மிளிர்ந்த கண்ணாய் எம்மை உண்கின்றவே! 65

 

2543:

உண்ணாது உறங்காது* உணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்*

எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்,* எரி நீர் வளிவான்-

மண்ணாகிய எம் பெருமான் தனது வைகுந்தமன்னாள்*

கண்ணாய் அருவினையேன்,* உயிராயின காவிகளே. 66

 

2544:

காவியும் நீலமும்* வேலும் கயலும் பலபலவென்று,*

ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு,* அசுரர்செற்ற-

மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்சேர்*

தூவியம் பேடை அன்னாள்,* கண்களாய துணைமலரே. 67

 

2545:

மலர்ந்தே ஒழிலிந்தில* மாலையும் மாலைபொன் வாசிகையும்*

புலந்தோய் தழைப்பந்தர் தண்டுற நாற்றி,* பொருகடல்சூழ்-

நிலந்தாவிய எம் பெருமான் தனது வைகுந்தமன்னாய்!*

கலந்தார் வரவெதிர் கொண்டு,* வன்கொன்றைகள் கார்த்தனவே. 68

 

2546:

காரேற்று இருள்செகில் ஏற்றின் சுடருக்கு உளைந்து,* வெல்வான்-

போரேற்று எதிர்ந்தது புன்தலை மாலை,* புவனியெல்லாம்-

நீரேற்று அளந்த நெடியபிரான் அருளா விடுமே?*

வாரேற்று இளமுலையாய்,* வருந்தேல் உன் வளைத்திறமே. 69

 

2547:

வளைவாய்த் திருச்சக்கரத்து* எங்கள் வானவனார் முடிமேல்,*

தளைவாய் நறுங்கண்ணித்* தண்ணந்துழாய்க்கு வண்ணம்பயலை,*

விளைவான் மிகவந்து நாள்திங்கள் ஆண்டு ஊழி நிற்க* எம்மை-

உளைவான் புகுந்து,* இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே. 70

 

2548:

ஊழிகளாய்* உலகேழும் உண்டான் என்றிலம்,* பழங்கண்டு-

ஆழிகளாம் பழ வண்ணம் என்றேற்கு,* அஃதே கொண்டு அன்னை-

நாழிவளோவென்னும் ஞாலமுண்டான் வண்ணம் சொல்லிற்றென்னும்*

தோழிகளோ! உரையீர்,* எம்மை அம்மனை சூழ்கின்றவே. 71

 

2549:

சூழ்கின்ற கங்குல்* சுருங்கா இருளின் கருந்திணிம்பை,*

போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க,* துழாய்மலர்க்கே-

தாழ்கின்ற நெஞ்சத்து ஒருதமியாட்டியேன் மாமைக்கு இன்று*

வாழ்கின்றவாறு இதுவோ,* வந்து தோனÛறிற்று வாலியதே. 72

 

2550:

வால் வெண்ணிலவு* உலகாரச் சுரக்கும் வெண் திங்களென்னும்,*

பால்விண் சுரவி  சுரமுதிர் மாலை,* பரிதிவட்டம்-

போலும் சுடர் அடலாழிப்பிரான் பொழில் ஏழளிக்கும்*

சால்பின் தகைமை கொலாம்,* தமியாட்டி தளர்ந்ததுவே? 73

 

2551:

தளர்ந்தும் முறிந்தும்* வருதிரைப் பாயல்,* திருநெடுங்கண்-

வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும்,* மால்வரையைக்-

கிளர்ந்தும் அறிதரக் கீண்டெடுத்தான் முடி சூடுதுழாய்*

அளைந்துண் சிறுபசுந் தென்றல்,* அந்தோ வந்துலாகின்றதே! 74

 

2552:

உலாகின்ற கெண்டை ஒளியம்பு,*எம் ஆவியை ஊடுருவக்-

குலாகின்ற* வெஞ்சிலை வாள்முகத்தீர்,* குனி சங்கிடறிப்-

புலாகின்ற வேலைப் புணரியம் பள்ளியம்மான்* அடியார்-

நிலாகின்ற வைகுந்தமோ,* வையமோ நும் நிலையிடமே? 75

 

2553:

இடம்போய் விரிந்து இவ்வுலகளந்தான்* எழிலார் தண்துழாய்,*

வடம்போதினையும் மடநெஞ்சமே,* நங்கள் வெள்வளைக்கே-

விடம்போல் விரிதல் இதுவியப்பே வியன் தாமரையின்*

தடம்போது ஒடுங்க,* மெல்லாம்பல் அலர்விக்கும் வெண்திங்களே. 76

 

2554:

திங்களம் பிள்ளை புலம்பத்* தன் செங்கோல் அரசுபட்ட*

செங்களம் பற்றி நின்று எள்குபுன்மாலை,* தென் பாலிலங்கை-

வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய்துணையா*

நங்களை மாமை கொள்வான்,* வந்து தோன்றி நலிகின்றதே. 77

 

2555:

நலியும் நரகனை வீட்டிற்றும்,* வாணன் திண்தோள் துணித்த*

வலியும் பெருமையும் யாஞ்சொல்லும் நீர்த்தல்ல,* மைவரைபோல்-

பொலியும் உருவில் பிரானார் புனை பூந்துழாய் மலர்க்கே*

மெலியும் மடநெஞ்சினார்,* தந்து போயின வேதனையே! 78

 

2556:

வேதனை வெண்புரி நூலனை,* விண்ணோர் பரவநின்ற-

நாதனை* ஞாலம் விழுங்கும் அநாதனை,* ஞாலந்தத்தும்-

பாதனைப் பாற்கடல் பாம்பணைமேல் பள்ளி கொண்டருளும்*

சீதனையே தொழுவார்,* விண்ணுளாரிலும் சேரியரே. 79

 

2557:

சீர் அரசாண்டு* தன் செங்கோல் சிலநாள்* செலீஇக்கழிந்த,-

பாரர சொத்து மறைந்தது நாயிறு,* பாரளந்த-

பேரரசே! எம் விசும்பரசே! எம்மை நீத்துவஞ்சித்த*

ஓரரசே! அருளாய்,* இருளாய் வந்து உறுகின்றதே. 80

 

2558:

உறுகின்ற கன்மங்கள்* மேலான ஓர்ப்பிலராய்,* இவளைப்-

பெறுகின்ற தாயர்* மெய் நொந்து பெறார்கொல்* துழாய்குழல்வாய்த்-

துறுகின்றிலர் தொல்லை வேங்கடமாட்டவும் * சூழ்கின்றிலர்*

இருகின்றதால் இவள் ஆகம்,* மெல்லாவி எரிகொள்ளவே. 81

 

2559:

எரிகொள் செந்நாயிறு* இரண்டுடனே உதயம் மலைவாய்,*

விரிகின்ற வண்ணத்த எம்பெருமான்கண்கள்,* மீண்டவற்றுள்-

எரிகொள் செந்தீ வீழ் அசுரரைப் போல எம் போலியர்க்கும்*

விரிவ சொல்லீர் இதுவோ,* வையமுற்றும் விளரியதே? 82

 

2560:

விளரிக் குரல் அன்றில்* மென்படைமேகின்ற முன்றில்பெண்ணை,*

முளரிக் குரம்பை இதுவிதுவாக,* முகில்வண்ணன்பேர்-

கிளரிக் கிளரிப் பிதற்றும்மெல்லாவியும் நைவுமெல்லாம்*

தளரில் கொலோ அறியேன்,* உய்யலாவது இத் தையலுக்கே! 83

 

2561:

தையல் நல்லார்கள் குழாங்கள்* குழிய குழுவினுள்ளும்,*

ஐய நல்லார்கள் குழிய விழவினும்,* அங்கங்கெல்லாம்-

கைய பொன்னாழி வெண் சங்கொடும் காண்பான் அவாவுவன்நான்*

மையவண்ணா! மணியே,* முத்தமே! என்தன் மாணிக்கமே! 84

 

2562:

மாணிக்கங் கொண்டு* குரங்கெறிவொத்து இருளோடுமுட்டி,*

ஆணிப்பொன் அன்ன சுடர்படுமாலை,* உலகளந்த-

மாணிக்கமே! என் மரகதமே! மற்றொப்பாரை இல்லா*

ஆணிப்பொன்னே,* அடியேன் உடையாவி அடைக்கலமே! 85

 

2563:

அடைக்கலத்து ஓங்கு* கமலத்தலரயன் சென்னியென்னும்,*

முடைக்கலத் தூண்* முன் அரனுக்கு நீக்கியை,* ஆழிசங்கம்-

படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்றாய்ச்சி வன் தாம்புகளால்*

புடைக் கலந்தானை, எம்மானை * என் சொல்லிப் புலம்புவனே? 86

 

2564:

புலம்பும் கனகுரல்* போழ்வாய அன்றிலும், பூங்கழிபாய்ந்து*

அலம்பும் கனகுரல் சூழ்திரை ஆழியும்,* ஆங்கவைநின்-

வலம்புள்ளது நலம் பாடுமிது குற்றமாக* வையம்-

சிலம்பும் படி செய்வதே,* திருமால் இத் திருவினையே? 87

 

2565:

திருமால் உருவொக்கும் மேரு,* அம்மேருவில் செஞ்சுடரோன்*

திருமால் திருக்கைத் திருச்சக்கரமொக்கும்,* அன்னகண்டும்-

திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பதோர்*

திருமால் தலைக்கொண்ட நங்கட்கு,* எங்கேவரும் தீவினையே? 88

 

2566:

தீவினைகட்கு அரு நஞ்சினை* நல்வினைக்கு இன்னமுதை,*

பூவினை மேவிய தேவி மணாளனை,* புன்மையெள்காது-

ஆவினை மேய்க்கும் வல்லாயனை* அன்றுலகு ஈரடியால்-

தாவின ஏற்றை எம்மானை* எஞ்ஞான்று தலைப்பெய்வனே? 89

 

2567:

தலைப்பெய்து யான்உன்* திருவடி சூடும் தகைமையினால்,*

நிலைபெய்த ஆக்கைக்கு நோற்ற இம்மாயமும்,* மாயம்செவ்வே-

நிலைப் பெய்திலாத நிலைமையும் காண்தோறு அசுரர்குழாம்*

தொலைப்பெய்த நேமியெந்தாய்,* தொல்லையூழி சுருங்கலதே. 90

 

2568:

சுருங்குறி வெண்ணை  தொடுவுண்ட கள்வனை,* வையமுற்றும்-

ஒருங்குற உண்ட* பெருவயிற்றாளனை,* மாவலிமாட்டு-

இருங்குறள் ஆகி இசையவோர் மூவடி வேண்டிச்சென்ற*

பெருங்கிறியானை அல்லால்,* அடியேன் நெஞ்சம் பேணலதே. 91

 

2569:

பேணலம் இல்லா அரக்கர்* முந்நீர பெரும்பதிவாய்,*

நீள்நகர் நீளெரி வைத்தருளாயென்று,* நின்னைவிண்ணோர்-

தாள்நிலந்தோய்ந்து தொழுவர் நின்மூர்த்தி பல்கூற்றிலொன்று*

காணலுமாங்கொல் என்றே,* வைகல் மாலையும் காலையுமே. 92

 

2570:

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த* கங்குல் குறும்பர்*

மாலை வெய்யோன் பட  வையகம் பாவுவர்,* அன்னகண்டும்-

காலை நல் ஞானத்துறை படிந்தாடிக் கண்போது செய்து*

மாலை நல் நாவில் கொள்ளார்,* நினையார் அவன் மைப்படியே. 93

 

2571:

மைப்படி மேனியும்* செந்தாமரைக்கண்ணும் வைதிகரே,*

மெய்ப்படியால் உன் திருவடி சூடும் தகைமையினார்,*

எப்படி ஊராமிலைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்*

அப்படி யானும் சொன்னேன்* அடியேன் மற்று யாதென்பனே? 94

 

2572:##

யாதானும் ஓராக்கையில் புக்கு,* அங்காப்புண்டும் ஆப்பவிழ்ந்தும்*

மூதாவியில் தடுமாறும்* உயிர் முன்னமே,* அதனால்-

யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடுசெய்யும்*

மாதா வினைப்பிதுவை,* திருமாலை வணங்குவனே. 95

 

2573:

வணங்கும் துறைகள்* பலபல ஆக்கி,* மதிவிகற்பால்-

பிணங்கும் சமயம் பலபல ஆக்கி,* அவையவைதோறு-

அணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்*

இணங்கு நின்னோரை இல்லாய்,* நின்கண் வேட்கை எழுவிப்பனே. 96

 

2574:

எழுவதும் மீண்டே* படுவதும் பட்டு,* எனை ஊழிகள்போய்க்-

கழிவதும் கண்டு கண்டு எள்கலல்லால்,* இமையோர்கள் குழாம்-

தொழுவதும் சூழ்வதும் செய்தொல்லை மாலைக் கண்ணாரக்கண்டு*

கழிவதோர் காதலுற்றார்க்கும்,* உண்டோ கண்கள் துஞ்சுதலே? 97

 

2576:

துஞ்சா முனிவரும்* அல்லாதவரும் தொடரநின்ற,*

எஞ்சாப் பிறவி இடர்கடிவான்,* இமையோர் தமக்கும்-

தன் சார்விலாத தனிப்பெருமூர்த்தி தன் மாயம்செவ்வே*

நெஞ்சால் நினைப்பரிதால்,* வெண்ணெயூண் என்னும் ஈனச்சொல்லே. 98

 

2576:##

ஈனச் சொல்லாயினும் ஆக,* எறிதிரை வையம்முற்றும்*

ஏனத்து உருவாய் இடந்தபிரான்,* இருங் கற்பகம்சேர்-

வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்றெல்லாயவர்க்கும்*

ஞானப் பிரானை அல்லால் இல்லை* நான் கண்ட நல்லதுவே (2) 99

 

2577:

நல்லார் நவில் குருகூர் நகரான்,* திருமால் திருப்பேர்-

வல்லார்* அடிக்கண்ணி சூடிய* மாறன் விண்ணப்பம் செய்த-

சொல்லார் தொடையல் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்*

பொல்லா அருவினை* மாயவன் சேற்று அள்ளல் பொய்ந்நிலத்தே (2) 100

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்