ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – முதல் பத்து – ஏழாம் திருமொழி
| 1008 | அங்கண்ஞாலமஞ்ச அங்கோராளரியாய் அவுணன் பொங்கவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம், பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால், அடிக்கீழ்ச் செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே. |
7.1 |
| 1009 | அலைத்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன் கொலைக்கையாளன்நெஞ்சிடந்த கூருகிராளனிடம், மலைத்தசெல்சாத்தெறிந்தபூசல் வன்துடிவாய்கடுப்ப, சிலைக்கைவேடர்த்தெழிப்பறாத சிங்கவேள்குன்றமே. |
7.2 |
| 1010 | ஏய்ந்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன் வாய்ந்தவாகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதனிடம், ஓய்ந்தமாவுமுடைந்தகுன்றும் அன்றியும் நின்றழலால், தேய்ந்தவேயுமல்லதில்லாச் சிங்கவேள்குன்றமே. |
7.3 |
| 1011 | எவ்வம்வெவ்வேல்பொன்பெயரோன் ஏதலினின்னுயிரை வவ்வி, ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதிடம், கவ்வுநாயும்கழுகும் உச்சிபோதொடுகால்சுழன்று, தெய்வமல்லால்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே. |
7.4 |
| 1012 | மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன் பொன்றவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம், நின்றசெந்தீமொண்டுசூறை நீள்விசும்பூடிரிய, சென்றுகாண்டற்கரியகோயில் சிங்கவேள்குன்றமே. |
7.5 |
| 1013 | எரிந்தபைங்கணிலங்குபேழ்வாய் எயிற்றொடிதெவ்வுருவென்று, இரிந்துவானோர் கலங்கியோட இருந்தவம்மானதிடம், நெரிந்தவேயின் முழையுள்நின்று நீணெறிவாயுழுவை, திரிந்தவானைச்சுவடுபார்க்கும் சிங்கவேள்குன்றமே. |
7.6 |
| 1014 | முனைத்தசீற்றம்விண்சுடப்போய் மூவுலகும்பிறவும், அனைத்துமஞ்சவாளரியாய் இருந்தவம்மானதிடம், கனைத்ததீயும்கல்லுமல்லா வில்லுடைவேடருமாய், தினைத்தனையும்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே. |
7.7 |
| 1015 | நாத்தழும்பநான்முகனும் ஈசனுமாய்முறையால் ஏத்த, அங்கோராளரியாய் இருந்தவம்மானதிடம், காய்த்தவாகைநெற்றொலிப்பக் கல்லதர்வேய்ங்கழைபோய், தேய்த்ததீயால்விண்சிவக்கும் சிங்கவேள்குன்றமே. |
7.8 |
| 1016 | நல்லைநெஞ்சே. நாந்தொழுதும் நம்முடைநம்பெருமான், அல்லிமாதர் புல்கநின்ற ஆயிரந்தோளனிடம், நெல்லிமல்கிக்கல்லுடைப்பப் புல்லிலையார்த்து, அதர்வாய்ச் சில்லிசில்லென்றொல்லறாத சிங்கவேள்குன்றமே. |
7.9 |
| 1017 | செங்கணாளிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய, எங்களீசனெம்பிரானை இருந்தமிழ்_ற்புலவன், மங்கையாளன்மன்னுதொல்சீர் வண்டறை தார்க்கலியன், செங்கையாளன் செஞ்சொல்மாலை வல்லவர்த்தீதிலரே. |
7.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

