ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – முதல் பத்து – எட்டாம் திருமொழி
| 1018 | கொங்கலர்ந்தமலர்க்குருந்தமொசித்த கோவலனெம்பிரான், சங்குதங்குதடங்கடல்துயில்கொண்ட தாமரைக்கண்ணினன், பொங்குபுள்ளினைவாய்பிளந்த புராணர்த்தம்மிடம், பொங்குநீர்ச் செங்கயல்திளைக்கும்சுனைத் திருவேங்கடமடை நெஞ்சமே. |
8.1 |
| 1019 | பல்லியாவதுபாற்கடலரங்கம் இரங்கவன்பேய்முலை, பிள்ளையாயுயிருண்டவெந்தை பிரானவன்பெருகுமிடம், வெள்ளியான் கரியான் மணிநிறவண்ணனென்றெண்ணி, நாடொறும் தெள்ளியார்வணங்கும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே. |
8.2 |
| 1020 | நின்றமா மருதிற்றுவீழ நடந்தநின்மலன்நேமியான், என்றும்வானவர்க்கைதொழும் இணைத்தாமரையடியெம்பிரான், கன்றிமாரிபொழிந்திடக் கடிதானிரைக்கிடர் நீக்குவான், சென்றுகுன்றமெடுத்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே. |
8.3 |
| 1021 | பார்த்தற்காயன்றுபாரதம்கைசெய்திட்டு வென்றபரஞ்சுடர், கோத்தங்காயர் தம்பாடியில் குரவைபிணைந்தவெங்கோவலன், ஏத்துவார்த்தம்மனத்துள்ளான் இடவெந்தைமேவியவெம்பிரான் தீர்த்தநீர்த்தடஞ்சோலைசூழ் திருவேங்கடமடைநெஞ்சமே. |
8.4 |
| 1022 | வண்கையானவுணர்க்குநாயகன் வேள்வியில்சென்றுமாணியாய், மண்கையாலிரந்தான் மராமரமேழுமெய்தவலத்தினான், எண்கையானிமயத்துள்ளான் இருஞ்சோலைமேவியவெம்பிரான், திண்கைம்மாதுயரதீர்த்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே. |
8.5 |
| 1023 | எண்டிசைகளுமேழுலகமும்வாங்கிப் பொன்வயிற்றில்பெய்து, பண்டோராலிலைப்பள்ளிகொண்டவன் பான்மதிக்கிடர்த்தீர்த்தவன், ஒண்டிறலவுணனுரத்துகிர்வைத்தவன்ஒள்ளெயிற்றொடு திண்டிறலரியாயவன் திருவேங்கடமடைநெஞ்சமே. |
8.6 |
| 1024 | பாருநீரெரிகாற்றினொடு ஆகாசமுமிவையாயினான், பேருமாயிரம் பேசநின்ற பிறப்பிலிபெருகுமிடம், காரும்வார்ப்பனிநீள்விசும்பிடைச் சோருமாமுகில்தோய்தர, சேரும்வார்ப்பொழில்சூழ் எழில்திருவேங்கடமடைநெஞ்சமே. |
8.7 |
| 1025 | அம்பரமனல்கால்நிலம் சலமாகிநின்றவமரர்க்கோன், வம்புலாமலர்மேல் மலிமட மங்கை தன்கொழுநனவன், கொம்பினன்னவிடை மடக்குறமாதர் நீளிதணந்தொறும், செம்புனமவைகாவல்கொள் திருவேங்கடமடைநெஞ்சமே. |
8.8 |
| 1026 | பேசுமிந்திருநாமமெட்டெழுத்தும் சொல்லிநின்று, பின்னரும், பேசுவார்த்தம்மையுய்யவாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம், வாசமாமலர்நாறுவார் பொழில்சூழ்தருமுலகுக்கெல்லாம், தேசமாய்த்திகழும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே. |
8.9 |
| 1027 | செங்கயல்திளைக்கும் சுனைத் திருவேங்கடத்துறைசெல்வனை, மங்கையர்த்தலைவங்கலிகன்றி வண்டமிழ்ச்செஞ்சொல்மாலைகள், சங்கையின்றித்தரித்துரைக்கவல்லார்கள் தஞ்சமதாகவே, வங்கமாகடல்வையம்காவலராகி வானுலகாள்வரே. |
8.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

