ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – முதல் பத்து – ஒன்பதாம் திருமொழி
| 1028 | தாயேதந்தையென்றும் தாரமேகிளைமக்களென்றும், நோயேபட்டொழிந்தேன் உன்னைக்காண்பதோராசையினால், வேயேய்பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா., நாயேன்வந்தடைந்தேன் நல்கியாளென்னைக்கொண்டருளே. |
9.1 |
| 1029 | மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து, நானேநானாவித நரகம்புகும்பாவம்செய்தேன், தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை, என் ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. |
9.2 |
| 1030 | கொன்றேன்பல்லுயிரைக் குறிக்கோளொன்றிலாமையினால், என்றேனுமிரந்தார்க்கு இனிதாகவுரைத்தறியேன், குன்றேய்மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா., அன்றேவந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. |
9.3 |
| 1031 | குலந்தானெத்தனையும் பிறந்தேயிறந்தெய்த்தொழிந்தேன், நலந்தானொன்றுமிலேன் நல்லதோரறம்செய்துமிலேன், நிலம்தோய்நீள்முகில்சேர் நெறியார்த்திருவேங்கடவா., அலந்தேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. |
9.4 |
| 1032 | எப்பாவம்பலவும் இவையேசெய்திளைத்தொழிந்தேன், துப்பா. நின்னடியே தொடர்ந்தேத்தவும்கிற்கின்றிலேன், செப்பார்த்திண்வரைசூழ் திருவேங்கடமாமலை, என் அப்பா. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. |
9.5 |
| 1033 | மன்னாய்நீரெரிகால் மஞ்சுலாவுமாகாசமுமாம், புண்ணாராக்கைதன்னுள் புலம்பித்தளர்ந்தெய்த்தொழிந்தேன், விண்ணார்நீள்சிகர விரையார்த்திருவேங்கடவா., அண்ணா. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. |
9.6 |
| 1034 | தெரியென்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துமிட்டேன், பெரியேனாயின பின் பிறர்க்கேயுழைத்தேழையானேன், கரிசேர்ப்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா., அரியே. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. |
9.7 |
| 1035 | நோற்றேன்பல்பிறவி உன்னைக்காண்பதோராசையினால், ஏற்றேனிப்பிறப்பே யிடருற்றனனெம்பெருமான்., கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலைசூழ்வேங்கடவா., ஆற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. |
9.8 |
| 1036 | பற்றேலொன்றுமிலேன் பாவமேசெய்துபாவியானேன், மற்றேலொன்றறியேன் மாயனே. எங்கள்மாதவனே., கல்தேன்பாய்ந்தொழுகும் கமலச்சுனைவேங்கடவா., அற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. |
9.9 |
| 1037 | கண்ணாயேழுலகுக்கு உயிராயவெங்கார்வண்ணனை, விண்ணோர்த்தாம்பரவும் பொழில்வேங்கடவேதியனை, திண்ணார்மாடங்கள் சூழ் திருமங்கையர்க்கோன்கலியன், பண்ணார்ப்பாடல்பத்தும் பயில்வார்க்கில்லைபாவங்களே. |
9.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

