பெரியாழ்வார் அருளிச்செய்த
நான்காம் பத்து – பத்தாம் திருமொழி – துப்புடையாரை
(அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே
பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்)
| 423 | துப்புடையாரைஅடைவதெல்லாம் சோர்விடத்துத்துணையாவரென்றே ஒப்பிலேனாகிலும்நின்னடைந்தேன் ஆனைக்குநீஅருள்செய்தமையால் எய்ப்புஎன்னைவந்துநலியும்போது அங்குஏதும்நானுன்னைநினைக்கமாட்டேன் அப்போதைக்குஇப்போதேசொல்லிவைத்தேன் அரங்கத்தரவணைப்பள்ளியானே. |
1 |
| 424 | சாமிடத்துஎன்னைக்குறிக்கொள்கண்டாய் சங்கொடுசக்கரமேந்தினானே. நாமடித்துஎன்னைஅனேகதண்டம் செய்வதாநிற்பர்நமன்தமர்கள் போமிடத்துஉன்திறத்துஎத்தனையும் புகாவண்ணம்நிற்பதோர்மாயைவல்லை ஆமிடத்தேஉன்னைச்சொல்லிவைத்தேன் அரங்கத்தரவணைப்பள்ளியானே. |
2 |
| 425 | எல்லையில்வாசல்குறுகச்சென்றால் எற்றிநமன்தமர்பற்றும்போது நில்லுமினென்னும்உபாயமில்லை நேமியும்சங்கமும்ஏந்தினானே. சொல்லலாம்போதேஉன்நாமமெல்லாம் சொல்லினேன் என்னைக்குறிக்கொண்டுஎன்றும் அல்லல்படாவண்ணம்காக்கவேண்டும் அரங்கத்தரவணைப்பள்ளியானே. |
3 |
| 426 | ஒற்றைவிடையனும்நான்முகனும் உன்னையறியாப்பெருமையோனே. முற்றஉலகெல்லாம்நீயேயாகி மூன்றெழுத்தாயமுதல்வனேயா. அற்றதுவாணாள்இவற்கென்றெண்ணி அஞ்சநமன்தமர்பற்றலுற்ற அற்றைக்கு, நீஎன்னைக்காக்கவேண்டும் அரங்கத்தரவணைப்பள்ளியானே. |
4 |
| 427 | பையரவினணைப் பாற்கடலுள் பள்ளிகொள்கின்றபரமமூர்த்தி. உய்யஉலகுபடைக்கவேண்டி உந்தியில்தோற்றினாய்நான்முகனை வையமனிசரைப்பொய்யென்றெண்ணிக் காலனையும்உடனேபடைத்தாய் ஐய. இனிஎன்னைக்காக்கவேண்டும் அரங்கத்தரவணைப்பள்ளியானே. |
5 |
| 428 | தண்ணெனவில்லைநமன்தமர்கள் சாலக்கொடுமைகள்செய்யாநிற்பர் மண்ணொடுநீரும்எரியும்காலும் மற்றும்ஆகாசமுமாகிநின்றாய். எண்ணலாம்போதேஉன்நாமமெல்லாம் எண்ணினேன், என்னைக்குறிக்கொண்டுஎன்றும் அண்ணலே. நீஎன்னைக்காக்கவேண்டும் அரங்கத்தரவணைப்பள்ளியானே. |
6 |
| 429 | செஞ்சொல்மறைப்பொருளாகிநின்ற தேவர்கள்நாயகனே. எம்மானே. எஞ்சலிலென்னுடையின்னமுதே. ஏழுலகுமுடையாய். என்னப்பா. வஞ்சவுருவின்நமன்தமர்கள் வலிந்துநலிந்துஎன்னைப்பற்றும்போது அஞ்சலமென்றுஎன்னைக்காக்கவேண்டும் அரங்கத்தரவணைப்பள்ளியானே. |
7 |
| 430 | நான்ஏதும்உன்மாயமொன்றறியேன் நமன்தமர்பற்றிநலிந்திட்டு இந்த ஊனேபுகேயென்றுமோதும்போது அங்கேதும் நான்உன்னைநினைக்கமாட்டேன் வானேய்வானவர்தங்களீசா. மதுரைப்பிறந்தமாமாயனே. என் ஆனாய். நீஎன்னைக்காக்கவேண்டும் அரங்கத்தரவணைப்பள்ளியானே. |
8 |
| 431 | குன்றெடுத்துஆநிரைகாத்தஆயா. கோநிரைமேய்த்தவனே. எம்மானே. அன்றுமுதல் இன்றறுதியா ஆதியஞ்சோதிமறந்தறியேன் நன்றும்கொடியநமன்தமர்கள் நலிந்துவலிந்துஎன்னைப்பற்றும்போது அன்றங்குநீஎன்னைக்காக்கவேண்டும் அரங்கத்தரவணைப்பள்ளியானே. |
9 |
| 432 | மாயவனைமதுசூதனனை மாதவனைமறையோர்களேத்தும் ஆயர்களேற்றினைஅச்சுதனை அரங்கத்தரவணைப்பள்ளியானை வேயர்புகழ்வில்லிபுத்தூர்மன் விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும் தூயமனத்தனராகிவல்லார் தூமணிவண்ணனுக்காளர்தாமே. |
10 |

