பெரியாழ்வார் அருளிச்செய்த
நான்காம் பத்து – ஒன்பதாம் திருமொழி – மரவடியை
(திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2)
| 412 | மரவடியைத்தம்பிக்குவான்பணையம் வைத்துப்போய்வானோர்வாழ செருவுடையதிசைக்கருமம்திருத்திவந்து உலகாண்டதிருமால்கோயில் திருவடிதன்திருவுருவும் திருமங்கைமலர்கண்ணும்காட்டிநின்று உருவுடையமலர்நீலம் காற்றாட்டஓசலிக்கும்ஒளியரங்கமே. |
1 |
| 413 | தன்னடியார்திறத்தகத்துத் தாமரையாளாகிலும்சிதகுரைக்குமேல் என்னடியார்அதுசெய்யார் செய்தாரேல்நன்றுசெய்தாரென்பர்போலும் மன்னுடையவிபீடணற்கா மதிளிலங்கைத்திசைநோக்கிமலர்கண்வைத்த என்னுடையதிருவரங்கற்கன்றியும் மற்றொருவர்க்குஆளாவரே? |
2 |
| 414 | கருளுடையபொழில்மருதும் கதக்களிறும்பிலம்பனையும்கடியமாவும் உருளுடையசகடரையும்மல்லரையும் உடையவிட்டுஓசைகேட்டான் இருளகற்றும்எறிகதிரோன்மண்டலத்தூடு ஏற்றிவைத்துஏணிவாங்கி அருள்கொடுத்திட்டுஅடியவரை ஆட்கொள்வானமருமூர்அணியரங்கமே. |
3 |
| 415 | பதினாறாமாயிரவர் தேவிமார்பணிசெய்ய துவரையென்னும் அதில்நாயகராகிவீற்றிருந்த மணவாளர்மன்னுகோயில் புதுநாண்மலர்க்கமலம் எம்பெருமான்பொன்வயிற்றில்பூவேபோல்வான் பொதுநாயகம்பாவித்து இருமாந்துபொன்சாய்க்கும்புனலரங்கமே. |
4 |
| 416 | ஆமையாய்க்கங்கையாய் ஆழ்கடலாய்அவனியாய்அருவரைகளாய் நான்முகனாய்நான்மறையாய் வேள்வியாய்த்தக்கணையாய்த்தானுமானான் சேமமுடைநாரதனார் சென்றுசென்றுதுதித்திறைஞ்சக்கிடந்தான்கோயில் பூமருவிப்புள்ளினங்கள் புள்ளரையன்புகழ்குழறும்புனலரங்கமே. |
5 |
| 417 | மைத்துனன்மார்காதலியைமயிர்முடிப்பித்து அவர்களையேமன்னராக்கி உத்தரைதன்சிறுவனையும்உய்யக்கொண்ட உயிராளன்உறையும்கோயில் பத்தர்களும்பகவர்களும் பழமொழிவாய்முனிவர்களும்பரந்தநாடும் சித்தர்களும்தொழுதிறைஞ்சத் திசைவிளக்காய்நிற்கின்றதிருவரங்கமே. |
6 |
| 418 | குறட்பிரமசாரியாய் மாவலியைக்குறும்பதக்கிஅரசுவாங்கி இறைப்பொழிதில்பாதாளம்கலவிருக்கை கொடுத்துகந்தஎம்மான்கோயில் எறிப்புடையமணிவரைமேல் இளஞாயிறுஎழுந்தாற்போல்அரவணையின்வாய் சிறப்புடையபணங்கள்மிசைச் செழுமணிகள்விட்டெறிக்கும்திருவரங்கமே. |
7 |
| 419 | உரம்பற்றிஇரணியனை உகிர்நுதியால்ஒள்ளியமார்புறைக்கவூன்றி சிரம்பற்றிமுடியிடியக்கண்பிதுங்க வாயலரத்தெழித்தான்கோயில் உரம்பெற்றமலர்க்கமலம் உலகளந்தசேவடிபோல்உயர்ந்துகாட்ட வரம்புற்றகதிர்ச்செந்நெல் தாள்சாய்த்துத்தலைவணக்கும்தண்ணரங்கமே. |
8 |
| 420 | தேவுடையமீனமாய்ஆமையாய்ஏனமாய் அரியாய்க்குறளாய் மூவுருவினிராமனாய்க் கண்ணனாய்க்கற்கியாய்முடிப்பாங்கோயில் சேவலொடுபெடையன்னம் செங்கமலமலரேறிஊசலாடி பூவணைமேல்துதைந்தெழு செம்பொடியாடிவிளையாடும்புனலரங்கமே. |
9 |
| 421 | செருவாளும்புள்ளாளன்மண்ணாளன் செருச்செய்யும்நாந்தகமென்னும் ஒருவாளன் மறையாளன்ஓடாதபடையாளன் விழுக்கையாளன் இரவாளன்பகலாளன்என்னையாளன் ஏழுலகப்பெரும்புரவாளன் திருவாளன்இனிதாகத் திருக்கண்கள்வளர்கின்றதிருவரங்கமே. |
10 |
| 422 | கைந்நாகத்திடர்கடிந்த கனலாழிப்படையுடையான்கருதும்கோயில் தென்னாடும்வடநாடும்தொழநின்ற திருவரங்கம்திருப்பதியின்மேல் மெய்ந்நாவன்மெய்யடியான் விட்டுசித்தன்விரித்ததமிழுரைக்கவல்லார் எஞ்ஞான்றும்எம்பெருமானிணையடிக்கீழ் இணைபிரியாதிருப்பர்தாமே. |
11 |

