பெரியாழ்வார் அருளிச்செய்த
நான்காம் பத்து – எட்டாம் திருமொழி – மாதவத்தோன்
(திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1)
| 402 | மாதவத்தோன்புத்திரன்போய் மறிகடல்வாய்மாண்டானை ஓதுவித்ததக்கணையா உருவுருவேகொடுத்தானூர் தோதவத்தித்தூய்மறையோர் துறைபடியத்துளும்பிஎங்கும் போதில்வைத்ததேன்சொரியும் புனலரங்கமென்பதுவே. |
1 |
| 403 | பிறப்பகத்தேமாண்டொழிந்த பிள்ளைகளைநால்வரையும் இறைப்பொழுதில்கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்தவுறைப்பனூர் மறைப்பெருந்தீவளர்த்திருப்பார் வருவிருந்தையளித்திருப்பார் சிறப்புடையமறையவர்வாழ் திருவரங்கமென்பதுவே. |
2 |
| 404 | மருமகன்தன்சந்ததியை உயிர்மீட்டு, மைத்துனன்மார் உருமகத்தேவீழாமே குருமுகமாய்க்காத்தானூர் திருமுகமாய்ச்செங்கமலம் திருநிறமாய்க்கருங்குவளை பொருமுகமாய்நின்றலரும் புனலரங்கமென்பதுவே. |
3 |
| 405 | கூந்தொழுத்தைசிதகுரைப்பக் கொடியவள்வாய்க்கடியசொல்கேட்டு ஈன்றெடுத்ததாயரையும் இராச்சியமும்ஆங்கொழிய கான்தொடுத்தநெறிபோகிக் கண்டகரைக்களைந்தானூர் தேந்தொடுத்தமலர்ச்சோலைத் திருவரங்கமென்பதுவே. |
4 |
| 406 | பெருவரங்களவைபற்றிப் பிழகுடையஇராவணனை உருவரங்கப்பொருதழித்து இவ்வுலகினைக்கண்பெறுத்தானூர் குருவரும்பக்கோங்கலரக் குயில்கூவும்குளிர்பொழில்சூழ் திருவரங்கமென்பதுவே என்திருமால்சேர்விடமே. |
5 |
| 407 | கீழுலகில்அசுரர்களைக் கிழங்கிருந்துகிளராமே ஆழிவிடுத்துஅவருடைய கருவழித்தவழிப்பனூர் தாழைமடலூடுரிஞ்சித் தவளவண்ணப்பொடியணிந்து யாழினிசைவண்டினங்கள் ஆளம்வைக்கும்அரங்கமே. |
6 |
| 408 | கொழுப்புடையசெழுங்குருதி கொழித்திழிந்துகுமிழ்த்தெறிய பிழக்குடையஅசுரர்களைப் பிணம்படுத்தபெருமானூர் தழுப்பரியசந்தனங்கள் தடவரைவாய்ஈர்த்துக்கொண்டு தெழிப்புடையகாவிரிவந்து அடிதொழும்சீரரங்கமே. |
7 |
| 409 | வல்லெயிற்றுக்கேழலுமாய் வாளெயிற்றுச்சீயமுமாய் எல்லையில்லாத்தரணியையும் அவுணனையும்இடந்தானூர் எல்லியம்போதுஇருஞ்சிறைவண்டு எம்பெருமான்குணம்பாடி மல்லிகைவெண்சங்கூதும் மதிளரங்கமென்பதுவே. |
8 |
| 410 | குன்றாடுகொழுமுகில்போல் குவளைகள்போல்குரைகடல்போல் நின்றாடுகணமயில்போல் நிறமுடையநெடுமாலூர் குன்றாடுபொழில்நுழைந்து கொடியிடையார்முலையணவி மன்றூடுதென்றலுமாம் மதிளரங்கமென்பதுவே. |
9 |
| 411 | பருவரங்களவைபற்றிப் படையாலித்தெழுந்தானை செருவரங்கப்பொருதழித்த திருவாளன்திருப்பதிமேல் திருவரங்கத்தமிழ்மாலை விட்டுசித்தன்விரித்தனகொண்டு இருவரங்கமெரித்தானை ஏத்தவல்லாரடியோமே. |
10 |

