பெரியாழ்வார் அருளிச்செய்த
ஐந்தாம் பத்து – ஐந்தாம் பத்து
முதல் திருமொழி – வாக்குத்தூய்மை
| 433 | வாக்குத்தூய்மையிலாமையினாலே மாதவா. உன்னைவாய்க்கொள்ளமாட்டேன் நாக்குநின்னையல்லால்அறியாது நானதஞ்சுவன்என்வசமன்று மூர்க்குப்பேசுகின்றானிவனென்று முனிவாயேலும்என்நாவினுக்குஆற்றேன் காக்கைவாயிலும்கட்டுரைகொள்வர் காரணா. கருளக்கொடியானே. |
1 |
| 434 | சழக்குநாக்கொடுபுன்கவிசொன்னேன் சங்குசக்கரமேந்துகையனே. பிழைப்பராகிலும்தம்மடியார்சொல் பொறுப்பது பெரியோர்கடனன்றே விழிக்கும்கண்ணிலேன்நின்கண்மற்றல்லால் வேறொருவரோடுஎன்மனம்பற்றாது உழைக்குஓர்புள்ளிமிகையன்றுகண்டாய் ஊழியேழுலகுண்டுமிழ்ந்தானே. |
2 |
| 435 | நன்மைதீமைகளொன்றும்அறியேன் நாரணா. என்னும்இத்த்னையல்லால் புன்மையால்உன்னைப்புள்ளுவம்பேசிப் புகழ்வானன்றுகண்டாய்திருமாலே. உன்னுமாறுஉன்னைஒன்றும்அறியேன் ஓவாதேநமோநாரணா. என்பன் வன்மையாவதுஉன்கோயிலில்வாழும் வைட்டணவனென்னும்வன்மைகண்டாயே. |
3 |
| 436 | நெடுமையால்உலகேழுமளந்தாய். நின்மலா. நெடியாய். அடியேனைக் குடிமைகொள்வதற்குஐயுறவேண்டா கூறைசோறுஇவைவேண்டுவதில்லை அடிமையென்னுமக்கோயின்மையாலே அங்கங்கேஅவைபோதரும்கண்டாய் கொடுமைக்கஞ்சனைக்கொன்று நின்தாதை கோத்தவன்தளைகோள்விடுத்தானே. |
4 |
| 437 | தோட்டம்இல்லவள்ஆத்தொழுஓடை துடவையும்கிணறும்இவையெல்லாம் வாட்டமின்றிஉன்பொன்னடிக்கீழே வளைப்பகம்வகுத்துக்கொண்டிருந்தேன் நாட்டுமானிடத்தோடுஎனக்குஅரிது நச்சுவார்பலர்கேழலொன்றாகி கோட்டுமண்கொண்டகொள்கையினானே. குஞ்சரம்வீழக்கொம்பொசித்தானே. |
5 |
| 438 | கண்ணா. நான்முகனைப்படைத்தானே. காரணா. கரியாய். அடியேன்நான் உண்ணாநாள்பசியாவதொன்றில்லை ஓவாதேநமோநாரணாவென்று எண்ணாநாளும்இருக்கெசுச்சாம வேதநாண்மலர்கொண்டுஉன்பாதம் நண்ணாநாள் அவைதத்துறுமாகில் அன்றுஎனக்குஅவைபட்டினிநாளே. |
6 |
| 439 | வெள்ளைவெள்ளத்தின்மேல்ஒருபாம்பை மெத்தையாகவிரித்து அதன்மேலே கள்ளநித்திரைகொள்கின்றமார்க்கம் காணலாங்கொல் என்றாசையினாலே உள்ளம்சோரஉகந்தெதிர்விம்மி உரோமகூபங்களாய் கண்ணநீர்கள் துள்ளம்சோரத்துயிலணைகொள்ளேன் சொல்லாய்யான்உன்னைத்தத்துறுமாறே. |
7 |
| 440 | வண்ணமால்வரையேகுடையாக மாரிகாத்தவனே. மதுசூதா. கண்ணனே. கரிகோள்விடுத்தானே. காரணா. களிறட்டபிரானே. எண்ணுவாரிடரைக்களைவானே. ஏத்தரும்பெருங்கீர்த்தியினானே. நண்ணிநான்உன்னைநாள்தொறும்ஏத்தும் நன்மையேஅருள்செய்எம்பிரானே. |
8 |
| 441 | நம்பனே. நவின்றேத்தவல்லார்கள் நாதனே. நரசிங்கமதானாய். உம்பர்கோனுலகேழும்அளந்தாய் ஊழியாயினாய். ஆழிமுன்னேந்தி கம்பமாகரிகோள்விடுத்தானே. காரணா. கடலைக்கடைந்தானே. எம்பிரான். என்னையாளுடைத்தேனே. ஏழையேனிடரைக்களையாயே. |
9 |
| 442 | காமர்தாதைகருதலர்சிங்கம் காணவினியகருங்குழல்குட்டன் வாமனன்என்மரகதவண்ணன் மாதவன்மதுசூதனன்தன்னை சேமநன்கமரும்புதுவையர்கோன் விட்டுசித்தன்வியந்தமிழ்பத்தும் நாமமென்றுநவின்றுரைப்பார்கள் நண்ணுவார்ஒல்லைநாரணனுலகே. |
10 |

