பெரியாழ்வார் அருளிச்செய்த
ஐந்தாம் பத்து –நான்காம் திருமொழி – சென்னியோங்கு
(எம்பெருமான் தமது திருவுள்ளத்திற் புகுந்தமையால் ஆழ்வார்
தாம் பெற்ற நன்மைகளைக் கூறி உகத்தல்)
| 463 | சென்னியோங்கு தண்திருவேங்கடமுடையாய். உலகு தன்னைவாழநின்றநம்பீ. தாமோதரா. சதிரா. என்னையும்என்னுடைமையையும் உஞ்சக்கரப்பொறியொற்றிக்கொண்டு நின்னருளேபுரிந்திருந்தேன் இனிஎன்திருக்குறிப்பே? |
1 |
| 464 | பறவையேறுபரம்புருடா. நீஎன்னைக்கைக்கொண்டபின் பிறவியென்னும்கடலும்வற்றிப் பெரும்பதமாகின்றதால் இறவுசெய்யும்பாவக்காடு தீக்கொளீஇவேகின்றதால் அறிவையென்னும்அமுதவாறு தலைப்பற்றிவாய்க்கொண்டதே. |
2 |
| 465 | எம்மனா. என்குலதெய்வமே. என்னுடையநாயகனே. நின்னுளேனாய்ப்பெற்றநன்மை இவ்வுலகினில்ஆர்பெறுவார்? நம்மன்போலேவீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ளபாவமெல்லாம் சும்மெனாதேகைவிட்டோ டித் தூறுகள்பாய்ந்தனவே. |
3 |
| 466 | கடல்கடைந்துஅமுதம்கொண்டு கலசத்தைநிறைத்தாற்போல் உடலுருகிவாய்திறந்து மடுத்துஉன்னைநிறைத்துக்கொண்டேன் கொடுமைசெய்யும்கூற்றமும் என்கோலாடிகுறுகப்பெறா தடவரைத்தோள்சக்கரபாணீ. சார்ங்கவிற்சேவகனே. |
4 |
| 467 | பொன்னைக்கொண்டுஉரைகல்மீதே நிறமெழவுரைத்தாற்போல் உன்னைக்கொண்டுஎன்நாவகம்பால் மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன் உன்னைக்கொண்டுஎன்னுள்வைத்தேன் என்னையும்உன்னிலிட்டேன் என்னப்பா. என்னிருடீகேசா. என்னுயிர்க்காவலனே. |
5 |
| 468 | உன்னுடையவிக்கிரமம் ஒன்றொழியாமல்எல்லாம் என்னுடையநெஞ்சகம்பால் சுவர்வழிஎழுதிக்கொண்டேன் மன்னடங்கமழுவலங்கைக்கொண்ட இராமநம்பீ. என்னிடைவந்துஎம்பெருமான். இனியெங்குப்போகின்றதே? |
6 |
| 469 | பருப்பதத்துக்கயல்பொறித்த பாண்டியர்குலபதிபோல் திருப்பொலிந்தசேவடி எஞ்சென்னியின்மேல்பொறித்தாய் மருப்பொசித்தாய். மல்லடர்த்தாய். என்றென்றுஉன்வாசகமே உருப்பொலிந்தநாவினேனை உனக்குஉரித்தாகினையே. |
7 |
| 470 | அனந்தன்பாலும்கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து என் மனந்தனுள்ளேவந்துவைகி வாழச்செய்தாய்எம்பிரான். நினைந்துஎன்னுள்ளேநின்றுநெக்குக் கண்கள்அசும்பொழுக நினைந்திருந்தேசிரமம்தீர்ந்தேன் நேமிநெடியவனே. |
8 |
| 471 | பனிக்கடலில்பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன் மனக்கடலில்வாழவல்ல மாயமணாளநம்பீ. தனிக்கடலேதனிச்சுடரே தனியுலகேஎன்றென்று உனக்கிடமாயிருக்க என்னைஉனக்குஉரித்தாக்கினையே. |
9 |
| 472 | தடவரைவாய்மிளிர்ந்துமின்னும் தவளநெடுங்கொடிபோல் சுடரொளியாய்நெஞ்சினுள்ளே தோன்றும்என்சோதிநம்பி. வடதடமும்வைகுந்தமும் மதிள்துவராபதியும் இடவகைகள்இகழ்ந்திட்டு என்பால்இடவகைகொண்டனையே. |
10 |
| 473 | வேயர்தங்கள்குலத்துதித்த விட்டுசித்தன்மனத்தே கோயில்கொண்டகோவலனைக் கொழுங்குளிர்முகில்வண்ணனை ஆயரேற்றைஅமரர்கோவை அந்தணர்தமமுதத்தினை சாயைபோலப்பாடவல்லார்தாமும் அணுக்கர்களே. |
11 |
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

