ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – முதல் பத்து – இரண்டாம் திருமொழி
| 958 | வாலிமாவலத்தொருவனதுடல்கெட வரிசிலைவளைவித்து,அன்று ஏலநாறுதண்தடம்பொழிலிடம்பெற இருந்தநலிமய்யத்துள், ஆலிமாமுகிலதிர்தர அருவரை அகடுறமுகடேறி, பீலிமாமயில்நடஞ்செயும்தடஞ்சுனைப் பிரிதிசென்றடைநெஞ்சே. |
2.1 |
| 959 | கலங்கமாக்கடலரிகுலம்பணிசெய்ய அருவரையணைகட்டி, இலங்கைமாநகர்ப்பொடிசெய்தவடிகள்தாம் இருந்தநல்லிமயத்து, விலங்கல்போல்வனவிறலிருஞ்சினத்தன வேழங்கள்துயர்க்கூர, பிலங்கொள்வாளெயிற்றரியவைதிரி தரு பிரிதிசென்றடைநெஞ்சே. |
2.2 |
| 960 | துடிகொள்_ண்ணிடைச்சுரிகுழல் துளங்கெயிற் றிளங்கொடிதிறத்து, ஆயர் இடிகொள்வெங்குரலினவிடையடர்த்தவன் இருந்தநல்லிமயத்து, கடிகொள்வேங்கையின்நறுமலரமளியின் மணியறைமிசைவேழம், பிடியினோடுவண்டிசைசொலத்துயில்கொளும் பிரிதிசென்றடைநெஞ்சே. |
2.3 |
| 961 | மறங்கொளாளரியுருவெனவெருவர ஒருவனதகல்மார்வம் திறந்து,வானவர்மணிமுடிபணிதர இருந்தநல்லிமயத்துள், இறங்கியேனங்கள்வளைமருப்பிடந்திடக் கிடந்தருகெரிவீசும், பிறங்குமாமணியருவியொடிழிதரு பிரிதிசென்றடைனெஞ்சே. |
2.4 |
| 962 | கரைசெய்மாக்கடல்கிடந்தவன் கனைகழல் அமரர்கள்தொழுதேத்த, அரைசெய்மேகலையலர்மகளவளொடும் அமர்ந்தநல்லிமயத்து, வரைசெய்மாக்களிறீளவெதிர்வளர்முளை அளைமிகுதேன்தோய்த்து, பிரசவாரிதன்னிளம்பிடிக்கருள்செயும் பிரிதிசென்றடைநெஞ்சே. |
2.5 |
| 963 | பணங்களாயிரமுடையநல்லவரவணைப் பள்ளிகொள் பரமாவென்று, இணங்கிவானவர்மணிமுடிபணிதர இருந்தநல்லிமயத்து, மணங்கொள்மாதவிநெடுங்கொடிவிசும்புற நிமிர்ந்தவைமுகில்பற்றி, பிணங்குபூம்பொழில்நுழைந்துவண்டிசைசொலும் பிரிதிசென்றடைநெஞ்சே. |
2.6 |
| 964 | கார்கொள்வேங்கைகள்கனவரைதழுவிய கறிவளர்க்கொடிதுன்னி, போர்கொள்வேங்கைகள்புனவரைதழுவிய பூம்பொழிலிமயத்துள், ஏர்கொள்பூஞ்சுனைத்தடம்படிந் தினமலர் எட்டுமிட்டிமையோர்கள், பேர்களாயிரம்பரவிநின்றடிதொழும் பிரிதிசென்றடைநெஞ்சே. |
2.7 |
| 965 | இரவுகூர்ந்திருள்பெருகியவரைமுழை இரும்பசியதுகூர, அரவமாவிக்குமகன்பொழில்தழுவிய அருவரையிமயத்து, பரமனாதியெம்பனிமுகில்வண்ணனென்று எண்ணிநின்றிமையோர்கள், பிரமனோடுசென்றடிதொழும்பெருந்தகைப் பிரிதிசென்றடைநெஞ்சே. |
2.8 |
| 966 | ஓதியாயிரநாமங்களுணர்ந்தவர்க்கு உறுதுயரடையாமல், ஏதமின்றிநின்றருளும்நம்பெருந்தகை இருந்தநல்லிமயத்து, தாதுமல்கியபிண்டிவிண்டலர்கின்ற தழல்புரையெழில்நோக்கி, பேதைவண்டுகளெரியெனவெருவரு பிரிதிசென்றடைநெஞ்சே. |
2.9 |
| 967 | கரியமாமுகிற்படலங்கள்கிடந்து அவைமுழங்கிட,களிறென்று பெரியமாசுணம்வரையெனப்பெயர்தரு பிரிதியெம்பெருமானை, வரிகொள்வண்டறைபைம்பொழில்மங்கையர் கலியனதொலிமாலை, அரியவின்னிசைபாடுநல்லடியவர்க்கு அருவினையடயாவே. |
2.10 |
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

