13. கண்ணனென்னும்
| 627 | கண்ண னென்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை, புண்ணில் புளிப்பெய் தாற்போலப் புறநின் றழகு பேசாதே, பெண்ணின் வருத்த மறியாத பெருமா னரையில் பீதக வண்ண ஆடை கொண்டு,என்னை வாட்டம் தணிய வீசீரே. |
1 |
| 628 | பாலா லிலையில் துயில்கொண்ட பரமன் வலைப்பட் டிருந்தேனை, வேலால் துன்னம் பெய்தாற்போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே, கோலால் நிரைமேய்த் தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி, நீலார் தண்ணந் துழாய்கொண்டென் நெறிமேன் குழல்மேல் சூட்டீரே. |
2 |
| 629 | கஞ்சைக் காய்ந்த கருவல்லி கடைக்க ணென்னும் சிறைக்கோலால், நெஞ்சூ டுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை, அஞ்சே லென்னா னவனொருவன் அவன்மார் வணிந்த வனமாலை, வஞ்சி யாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே. |
3 |
| 630 | ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும், காரே றுழக்க வுழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை, ஆரா வமுத மனையான்றன் அமுத வாயி லூறிய, நீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி யிளைப்பை நீக்கிரே. |
4 |
| 631 | அழிலும் தொழிலு முருக்காட்டான் அஞ்சே லென்னா னவனொருவன், தழுவி முழுகிப் புகுந்தென்னைச் சுற்றிச் சுழன்று போகானால், தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே நெடுமா லூதி வருகின்ற குழலின் தொளைவாய் நீர்கொண்டு குளிர முகத்துத் தடவீரே. |
5 |
| 632 | நடையொன் றில்லா வுலகத்து நந்த கோபன் மகனென்னும், கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு, புடையும் பெயர கில்லேன்நான் போட்கன் மிதித்த அடிப்பாட்டில் பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா வுயிரென் னுடம்பையே. |
6 |
| 633 | வெற்றிக் கருள கொடியான்றன் மீமீ தாடா வுலகத்து, வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பே யாக வளர்த்தாளே, குற்ற மற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு, அற்ற குற்ற மவைதீர அணைய வமுக்கிக் கட்டீரே. |
7 |
| 634 | உள்ளே யுருகி நைவேனை உளளோ இலளோ வென்னாத, கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த் தனனைக் கண்டக்கால், கொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட் டவன்மார்வில் எறிந்தென் அழலை தீர்வேனே. |
8 |
| 635 | கொம்மை முலைக ளிடர்தீரக் கோவிந் தற்கோர் குற்றேவல், இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் தவந்தானென், செம்மை யுடைய திருமார்வில் சேர்த்தா னேலும் ஒருஞான்று, மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி விடைதான் தருமேல் மிகநன்றே. |
9 |
| 636 | அல்லல் விளைத்த பெருமானை ஆயர் பாடிக் கணிவிளக்கை, வில்லி புதுவை நகர்நம்பி விட்டு சித்தன் வியன்கோதை, வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிகவிரும்பும், சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடளுள் துவளாரே. |
10 |

