பெரியாழ்வார் அருளிச்செய்த
நான்காம் பத்து –ஆறாம் திருமொழி – காசுங்கறையுடை
(பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை
இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்)
| 381 | காசும்கறையுடைக்கூறைக்கும் அங்கோர்கற்றைக்கும் ஆசையினால் அங்கவத்தப்பேரிடும் ஆதர்காள். கேசவன்பேரிட்டு நீங்கள்தேனித்திருமினோ நாயகன்நாரணன் தம்அன்னைநரகம்புகாள். |
1 |
| 382 | அங்கொருகூறை அரைக்குடுப்பதனாசையால் மங்கியமானிடசாதியின் பேரிடும்ஆதர்காள். செங்கணெடுமால். சிரீதரா. என்றுஅழைத்தக்கால் நங்கைகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள். |
2 |
| 383 | உச்சியில்எண்ணெயும் சுட்டியும்வளையும்உகந்து எச்சம்பொலிந்தீர்காள். எஞ்செய்வான்பிறர்பேரிட்டீர்? பிச்சைபுக்காகிலும் எம்பிரான்திருநாமமே நச்சுமின் நாரணன் தம்அன்னைநரகம்புகாள். |
3 |
| 384 | மானிடசாதியில்தோன்றிற்று ஓர்மானிடசாதியை மானிடசாதியின்பேரிட்டால் மறுமைக்கில்லை வானுடைமாதவா. கோவிந்தா. என்றுஅழைத்தக்கால் நானுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள். |
4 |
| 385 | மலமுடையூத்தையில்தோன்றிற்று ஓர்மலவூத்தையை மலமுடையூத்தையின்பேரிட்டால் மறுமைக்கில்லை குலமுடைக்கோவிந்தா. கோவிந்தா. என்றுவழைத்தக்கால் நலமுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள். |
5 |
| 386 | நாடும்நகரும்அறிய மானிடப்பேரிட்டு கூடியழுங்கிக் குழியில்வீழ்ந்துவழுக்கதே சாடிறப்பாய்ந்ததலைவா. தாமோதரா. என்று நாடுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள். |
6 |
| 387 | மண்ணில்பிறந்துமண்ணாகும் மானிடப்பேரிட்டு அங்கு எண்ணமொன்றின்றியிருக்கும் ஏழைமனிசர்காள். கண்ணுக்கினிய கருமுகில்வண்ணன்நாமமே நண்ணுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள். |
7 |
| 388 | நம்பிநம்பியென்று நாட்டுமானிடப்பேரிட்டால் நம்பும்பிம்புமெல்லாம் நாலுநாளில்அழுங்கிப்போம் செம்பெருந்தாமரைக்கண்ணன் பேரிட்டழைத்தக்கால் நம்பிகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள். |
8 |
| 389 | ஊத்தைக்குழியில் அமுதம்பாய்வதுபோல் உங்கள் மூத்திரப்பிள்ளையை என்முகில்வண்ணன்பேரிட்டு கோத்துக்குழைத்துக் குணாலமாடித்திரிமினோ நாத்தகுநாரணன் தம்அன்னைநரகம்புகாள். |
9 |
| 390 | சீரணிமால் திருநாமமேயிடத்தேற்றிய வீரணிதொல்புகழ் விட்டுசித்தன்விரித்த ஓரணியொண்தமிழ் ஒன்பதோடொன்றும்வல்லவர் பேரணிவைகுந்தத்து என்றும்பேணியிருப்பரே. |
10 |

