பெரியாழ்வார் அருளிச்செய்த
நான்காம் பத்து – ஐந்தாம் திருமொழி – ஆசைவாய்
(பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு
கிதோபதேசம் செய்தல்)
| 371 | ஆசைவாய்ச்சென்றசிந்தையராகி அன்னைஅத்தன்என்புத்திரர்பூமி வாசவார்குழலாளென்றுமயங்கி மாளுமெல்லைக்கண்வாய்திறவாதே கேசவா. புருடோ த்தமா. என்றும் கேழலாகியகேடிலீ. என்றும் பேசுவாரவர்எய்தும்பெருமை பேசுவான்புகில்நம்பரமன்றே. |
1 |
| 372 | சீயினால்செறிந்தேறியபுண்மேல் செற்றலேறிக்குழம்பிருந்து எங்கும் ஈயினால்அரிப்புண்டுமயங்கி எல்லைவாய்ச்சென்றுசேர்வதன்முன்னம் வாயினால்நமோநாரணாவென்று மத்தகத்திடைக்கைகளைக்கூப்பி போயினால்பின்னைஇத்திசைக்குஎன்றும் பிணைக்கொடுக்கிலும்போகவொட்டாரே. |
2 |
| 373 | சோர்வினால்பொருள்வைத்ததுண்டாகில் சொல்லுசொல்லென்றுசுற்றுமிருந்து ஆர்வினவிலும்வாய்திறவாதே அந்தகாலம்அடைவதன்முன்னம் மார்வமென்பதோர்கோயிலமைத்து மாதவனென்னும்தெய்வத்தைநட்டி ஆர்வமென்பதோர்பூவிடவல்லார்க்கு அரவதண்டத்தில்உய்யலுமாமே. |
3 |
| 374 | மேலெழுந்ததோர்வாயுக்கிளர்ந்து மேல்மிடற்றினைஉள்ளெழவாங்கி காலுங்கையும்விதிர்விதிர்த்தேறிக் கண்ணுறக்கமதாவதன்முன்னம் மூலமாகியஒற்றையெழுத்தை மூன்றுமாத்திரைஉள்ளெழவாங்கி வேலைவண்ணனைமேவுதிராகில் விண்ணகத்தினில்மேவலுமாமே. |
4 |
| 375 | மடிவழிவந்துநீர்புலன்சோர வாயிலட்டியகஞ்சியும்மீண்டே கடைவழிவாரக்கண்டமடைப்பக் கண்ணுறக்கமதாவதன்முன்னம் தொடைவழிஉம்மைநாய்கள்கவரா சூலத்தால்உம்மைப்பாய்வதும்செய்யார் இடைவழியில்நீர்கூறையும்இழவீர் இருடீகேசனென்றேத்தவல்லீரே. |
5 |
| 376 | அங்கம்விட்டவையைந்துமகற்றி ஆவிமூக்கினில்சோதித்தபின்னை சங்கம்விட்டவர்கையைமறித்துப் பையவேதலைசாய்ப்பதன்முன்னம் வங்கம்விட்டுலவும்கடற்பள்ளிமாயனை மதுசூதனனைமார்பில் தங்கவிட்டுவைத்து ஆவதோர்கருமம் சாதிப்பார்க்குஎன்றும்சாதிக்கலாமே. |
6 |
| 377 | தென்னவன்தமர்செப்பமிலாதார் சேவதக்குவார்போலப்புகுந்து பின்னும்வன்கயிற்றால்பிணித்தெற்றிப் பின்முன்னாகஇழுப்பதன்முன்னம் இன்னவன்இனையானென்றுசொல்லி எண்ணிஉள்ளத்திருளறநோக்கி மன்னவன்மதுசூதனென்பார் வானகத்துமன்றாடிகள்தாமே. |
7 |
| 378 | கூடிக்கூடிஉற்றார்கள்இருந்து குற்றம்நிற்கநற்றங்கள்பறைந்து பாடிப்பாடிஓர்பாடையிலிட்டு நரிப்படைக்குஒருபாகுடம்போலே கோடிமூடியெடுப்பதன்முன்னம் கௌத்துவமுடைக்கோவிந்தனோடு கூடியாடியஉள்ளத்தரானால் குறிப்பிடம்கடந்துஉய்யலுமாமே. |
8 |
| 379 | வாயொருபக்கம்வாங்கிவலிப்ப வார்ந்தநீர்க்குழிக்கண்கள்மிழற்ற தாய்ஒருபக்கம்தந்தைஒருபக்கம் தாரமும்ஒருபக்கம்அலற்ற தீஓருபக்கம்சேர்வதன்முன்னம் செங்கண்மாலொடும்சிக்கெனச்சுற்ற மாய் ஒருபக்கம்நிற்கவல்லார்க்கு அரவதண்டத்தில்உய்யலுமாமே. |
9 |
| 380 | செத்துப்போவதோர்போதுநினைந்து செய்யும்செய்கைகள்தேவபிரான்மேல் பத்தராயிறந்தார்பெறும்பேற்றைப் பாழித்தோள்விட்டுசித்தன்புத்தூர்க்கோன் சித்தம்நன்கொருங்கித்திருமாலைச் செய்தமாலைஇவைபத்தும்வல்லார் சித்தம்நன்கொருங்கித்திருமால்மேல் சென்றசிந்தைபெறுவர்தாமே. |
10 |

